
Adi Sankara takes the Bhujangam to its logical end by surrendering himself before the Lord and seek compassion from the Lord. We can see that Sri Sankara seeks alignment of one’s physical body features, mind, family, relatives & friends to the one and only Lord Subramanya.
Verse 26
दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्तिः
मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥२६॥
Drshi Skanda-Muurtih Shrutau Skanda-Kiirtih
Mukhe Me Pavitram Sadaa Tac-Caritram |
Kare Tasya Krtyam Vapus-Tasya Bhrtyam
Guhe Santu Liinaa Mama-Ashessa-Bhaavaah ||
விழிகள் உன்னுருவம் காண செவிகள் உன் மகிமை கேட்க
வாய் உந்தன் புகழ் பாட கைகள் உன் திருத்தொண்டு புரிய
உடல் என்றும் உன்னடி பணிய என் உள்ளுணர்வெலாம்
உன்னிடம் உறையச் செய்திடுவாய் செந்தூர் உறை குகனே!
Verse 27
मुनीनामुताहो नृणां भक्तिभाजां
अभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने
गुहाद्देवमन्यं न जाने न जाने ॥२७॥
Muniinaam-Utaaho Nrnnaam Bhaktibhaajaam
Abhiisstta-Pradaah Santi Sarvatra Devaah |
Nrnnaam-Antya-Jaanaam-Api Sva-Artha-Daane
Guhaad-Devam-Anyam Na Jaane Na Jaane ||
தொழுதிடும் பெருமுனி கடுந்துறவி பலர் வணங்கி
விழையும் வரம் தரும் தெய்வம் பல எங்குமன்றோ
ஈனப்பிறப்புடையோர்க்கு பெருங்கருணை புரிய
உனையன்றி வேறெவருள்ளரோ திருச்செந்தூர் குகனே
அறிந்திலேன் யான் அறிந்திலேன் யான் அண்ணலே !
Verse 28
कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा
नरो वाथ नारि गृहे ये मदीयाः ।
यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं
स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥२८॥
Kalatram Sutaa Bandhu-Vargah Pashurvaa
Naro Va-Atha Naari Grhe Ye Madiiyaah |
Yajanto Namantah Stuvanto Bhavantam
Smarantash-Ca Te Santu Sarve Kumaara ||
மனையாளும் மக்களும் சுற்றம் சூழமும்
ஆண் பெண் மனைஉறை அனைவரும்
உனதடி ஒன்றே பணிந்து உளமுருகி துதித்து
உன்புகழ் பாடி உன்னிடம் மட்டுமே
உறைந்து நினைய உன்னருள் புரிவாய்
உமைமைந்தா குமரக்கடவுளே !
Verse 29
मृगाः पक्षिणो दंशका ये च दुष्टाः
तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशौल ॥२९॥
Mrgaah Pakssinno Damshakaa Ye Ca Dussttaah
Tathaa Vyaadhayo Baadhakaa Ye Mad-Angge |
Bhavac-Chakti-Tiikssnna-Agra-Bhinnaah Suduure
Vinashyantu Te Cuurnnita-Kraun.cashaula ||
கொடிய விலங்குகள் கொத்தும் பறவைகள்
கொட்டும் பூச்சிகளின் கடிவலியொப்ப
நொடிக்கும் என்னுடல் பற்றிய கழுபிணிதனை
கையுறை கூர் வடி வேலால் பொடியெனப் பிளந்து
வெகுதூரம் தொலைத்திடு கிரவுஞ்சமலைப் பொடித்தோனே!
Verse 30
जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते न किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥३०॥
Janitrii Pitaa Ca Sva-Putra-Aparaadham
Sahete Na Kim Deva-Sena-Adhinaatha |
Aham Ca-Ati-Baalo Bhavaan Loka-Taatah
Kssama-Sva-Aparaadham Samastam Mahe[a-Ii]sha ||
பெற்றவர்தம் புதல்வனது பிழைகள்தனை
பொறுத்தலன்றோ தேவர்படைத்தலைவா!
குழவியன்றொ யான், இவ்வுலகை ஈன்றோனே
பிழையனைத்தும் பொறுத்ருள்வாய் பெரியோனே!!
Verse 31
नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥३१॥
Namah Kekine Shaktaye Ca-Api Tubhyam
Namash-Chaaga Tubhyam Namah Kukkuttaaya |
Namah Sindhave Sindhu-Deshaaya Tubhyam
Punah Skanda-Muurte Namaste Namostu ||
தொழுதிடுவேன் நான் கோலமயிலுடன் சக்திவேல்தனையும்
வணங்கிடுவேன் இறைஊர்ந்த ஆடுடன் கொடிசேவல்தனையும்
பணிந்திட்டேன் நீஉறை கடல்சூழும் திருச்செந்தூர் தலமதனை
துதிட்டேன் மறுபடியும் அழகே வடிவான கந்தப்பெருமான் உனை
Verse 32
जयानन्दभूमञ्जयापारधामन्
जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥३२॥
Jaya-[A]ananda-Bhuuman.-Jaya-Apaara-Dhaaman
Jaya-Amogha-Kiirte Jaya-[A]ananda-Muurte |
Jaya-[A]ananda-Sindho Jaya-Ashessa-Bandho
Jaya Tvam Sadaa Mukti-Daane[a-Ii]sha-Suuno ||
பரமானந்த உணர்வெனும் கரையிலா கருணைக்கடலோனுக்கு வெற்றி
இகபர இரேழஉலகாளும் பரமுக்தி வடிவோனுக்கு வெற்றி
பேரின்பக்கடலாய் முடிவிலா தாழாநட்புடையோனுக்கு வெற்றி
முக்தியருள் பொன்னார் மேனியனின் புதல்வனுக்கு எப்பொழுதும் வெற்றி