Guru Purnima 2023 – குரு பூர்ணிமா 2023

ஒரு குருவாக வந்து மாணவனை ஆட்கொள்பவர் ஒப்பற்ற ஈசனே ஆவார். அவர் தன் மாணவனின் வினைகள் அழியும் வண்ணம் நாள்தோறும் உபதேசிக்கிறார். அவர் நீர்மலிந்த நீள் சடையை உடைய சிவனே அன்றி வேறு எவரும் அல்ல. சிவனே மனம் இரங்கியும் கீழே இறங்கியும் வந்து மாணவனின் வருத்துகின்ற வல்வினைகளை அழித்து விடுகின்றார்.

எனது மாதா, பிதா – இவர்களே எனை ஆட்கொண்ட குருவும் தெய்வமும்.

“ஆட்கொண்ட வர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்ட வர்வினை போயற நாடொறும்
நிற்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித் துளானே”.

திருமூலர்

ஆட்கொண்ட அந்த நாயகனை வணங்கி, அடியேனின் சமர்ப்பணம்.