Captain Courageous – Sivananda Lahari Verses 31-35

One of the most talked about subject in this modern era is “Leadership”. One can discuss this topic at any place anytime “till cows come home” . Innumerable examples of past & present leaders in different fields can be quoted. Leadership qualities such as Compassion, risk taking, team building, knowledge and rewards etc etc are discussed, researched and documented. Can you attempt to describe the attributes of the “Leader of the Cosmos?

Venturing to describe the qualities of the Invisible, Srimad Bhagwadpaada Sankara outlines a few of them based on a couple of incidences in a few verses.

—————————————————–

Verse 31

नालं वा परमोपकारकमिदं त्वेकं पशूनां पते

पश्यन् कुक्षिगतान् चराचरगणान् बाह्यस्थितान् रक्षितुम् ।

सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं

निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१॥

உன்னுள் வெளி உறை அனைத்து உயிரினம் பேணும் பெரியோனே!

கக்கும் தீப்பிழம்பபெனும் கொடுநச்சுமருந்துவிளை பேரச்சமதவிர், விழை

திக்கெட்டோடும் தேவரினம் காக்கும் உயரினத்தலையோனே!

அவ்விடமதனை உமிழ்வுட்கொள்தவிர் சங்கதனில் நிலைத்திட்டு நீ

தரணி காக்கும் பணியொன்றே போதுமே! உன் கருணையுள்ளமதைக் காட்டிட!

———————————-

Verse 32

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजम्बूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शम्भो महात्मन् वद ॥ ३२॥

தேவருக்கச்சம்விளை தீப்பிழம்பபெனும் கொடுநச்சதனை விழித்தனையே,

அக்கனல்தனை கையதனில் சுட்டநாவற்கனியென ஏந்தினையோ,

சித்தர்களின் குளிகையென அழல்தனை உன் நாவதனில் ஏற்றினையோ,

நீள்கழுத்திற்கு நீலமணிமாலையென நஞ்சதனைசங்கதனில் நிலைத்தனயோ

எங்கனம் என்றுரைத்திடுவாய் உலகெலாம் உயர்ந்து ஓதற்கரியோனே !

————————————

Verse 33

नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः

पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम् ।

स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते

का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥

ஒருமுறை உன் சேவை புரிதலும், உனை வணங்கிப் பாடவும், உன் பாதம் துதிக்கவும்,

உள்நிறுத்தி உன் தியானமும், உன் புகழ் கேட்கவும், உனைக்கண்டு மகிழவும்

பேரின்பநிலைதனை அடைய போதுமன்றோ பொன்னார் மேனியனே இவ்வழி

ஒன்றினை யான் ஏற்றி அந்நிலையடைந்தால் வேறென்னவேண்டும் எனக்கு

நிலையற்ற தேவர்களைத் துதித்தென்ன பலன், உடல் தளர்ச்சி ஒன்றுதான் வருமன்றோ!

——————————————

Verse 34

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शम्भो भव-

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

என்னவென்றுரைப்பேன் நின் துணிவதனை, எவரிடமுண்டு நின் மனஉரம்,

எங்கனமடைவார் நின் உளநிலை, யுகப்பிரளைய நிகழ்தருணம், இயல்நிலை

நழுவிடும் தேவரினமும், நீள் அச்சமுடன் உயிர்விழை முனியினமும் இருக்க,

தனியொருவராய் பரவசமுடன் தரணி காக்கும் பணிபுரியும் பேரின்பநிலையோனே!

———————————————–

Verse 35

योगक्षेमधुरन्धरस्य सकलश्रेयःप्रदोद्योगिनो

दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः ।

सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया

शम्भो त्वं परमान्तरङ्ग इति मे चित्ते स्मराम्यन्वहम् ॥ ३५॥

அனைத்துமறிந்த ஆதியென, இகபர இன்பமடை வழிஉரை ஆசானாக

எனைக் கடந்து என்னுள்உறை கடவுளாக, கருணைமழை பொழி ஈசனாக

அடியார்கருளும் பரமனென உலகாளும் உன்னிடம், விழைந்து உரைய

அடியேன் என்னிடம் ஏதும் உண்டோ இறைவா, நீ எனக்கு அணுக்கமென

சிறியவன் என்மனம் சிந்தனை புரிந்திடும் அனுதினம் சங்கரனே!

——————————————-

Mind Over Matter (Sivananda Lahari Verses 20-22)

Mind over matter

Universally, cutting across demography, why do we always refer to monkeys when it comes to the description about the fickle minds of humans? Here is one response that I found in the WW Web:

This monkey quality of the mind follows logically from the evolutionary process in which the primate brain was honed in millions of years of tree dwelling. The arboreal habitat drove the development of visual dominance, color perception, incomparable eye-hand dexterity and much of the underlying hardwiring and intelligence of the human brain. So if our minds are monkey-like, we certainly come by it naturally“.

Continuing the process of prayer, Adi Sankara comes to the most important element – the mind, once again bringing out the existing state of mind in this next three verses

——————————————————-

Verse 20

सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ

नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।

कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं

दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥ २०॥

தீயிச்சையெனும் வனத்திலே திக்கெட்டும் கிளைகள் தாவி

இளமங்கையரின் கொங்கைமோகம் கொண்டு குதியாட்டம் போட்டு

மாயைகொண்டு மதிகெட்டு அலையும் என்மனக்குரங்தனை

பக்தியெனும் வடம்கொண்டு கட்டிடுவாய் கயிலைநாதா!

உன்வசப்படுத்து கட்டடங்கா என்மனமதனை கபாலீஸ்வரனே!

—————————————–

Verse 21

धृतिस्तम्भाधारां दृढगुणनिबद्धां सगमनां

विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् ।

स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां

जय स्वामिन् शक्त्या सह शिवगणैः सेवित विभो ॥ २१॥

மன்மதனை வென்ற மகேஸ்வரனே! பூத கணங்கள் பூசிக்கும் உலகநாதனே!

தைரியமனும் தூணதனை உறுதிகொண்ட குணங்களெனும் வடம் முறுக்க

மலர்தாமரையென அசைந்தாடி துலங்கும் வெண்நிறக்கூடாரமெனும் என்

மனமதனை அனுதினமும் விரிக்கின்றேன் தூயநெறிப் பாதைமேல்

வந்திருந்து ஆண்டருள்வாய் உமையவளை உடன் கொண்டு, மூவுலகோனே!

—————————

Verse 22

प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे

प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते ।

इमं चेतश्चोरं कथमिह सहे शङ्कर विभो

तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥

அழுக்காறுஅவாவெகுளி கொண்டு பிறர் பொருளதனைக்கையாண்டிட

செல்வந்தரின் இடம் நுழைய முயன்று வழிதேடி அலைகின்ற என் மனத்தை

எங்கனம் பொறுத்திடுவேன் உலகோரின் உள்ளம் கவர் கள்ளனே!

என் உடல் உள்ளே ஒளிந்திட்ட மனமதனை உன்வசப்படுத்தி

நிரபராதி என்மேல் கருணை கொள்வாய் உலகாளும் சங்கரனே உமைநாதா!

————————-

The Seeker (Sivananda Lahari Verses 13-19)

These are days of instant results and quick steps. You browse the Word Wide Web. You will find practically innumerable tips & lists of instant dos & dont’s on any subject. Starting from the numeral 1 to 100, there are steps for every numeral and for every subject. For example 8 steps to focus, 4 steps to happiness, top 10 steps to manage ego, 7 steps to pray etc etc. Just type the word Prayer in the Google search, you get 76,30,00,000 results in 0.76 seconds. Amazing load of information.

Speaking about Prayer, the dictionary definition is “A solemn request for help or expression of thanks addressed to God or another deity”. This implies that there is a “Seeker”, there is a “Sought”, a “solemnity” and a “request”. The Seeker is always at a lower pedestal.

But, have we ever stepped back a little and pondered about what our grand parents/parents seek in their day to day activities? There is a lot to learn from them, particularly about the way in which they dedicate each one of their actions (& the results thereof) to God, accepting life as it comes and focusing only on the well being of their children, grand children and dependents. Any happiness/enjoyment that comes to them are simply byproducts of the process and are not the goals. To them life is a prayer and dedication.

In Sivananda Lahari, after advising to declutter one’s mind and focus on the goal of real learning, Adi Sankara turns his attention on to the state of the Seeker and brings out in all earnest the limitations of the individual in the verses given below.

This approach of understanding and describing one’s existing state along with its limitations thereof is the first step in the journey to reach one’s goal. We see manifestations of this approach in all Modern Management theories and success stories.

The inabilities of the Seeker and the desperation in obtaining help is clearly brought out in these verses

————————————————————————–

Verse 13

असारे संसारे निजभजनदूरे जडधिया

भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।

मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-

स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥ १३॥

சாரமற்ற சம்சாரமதில் இறைவனடிசேரா மடமைகொண்டு

மதிகெட்டிருண்ட என்உள்ளமதை உயிர்ப்பிக்கும் பெருந்தகையோனே!

எனயன்றி ஏழை வேருளரோ, இம்மூவுலகில் எனைக்காக்க

உனையன்றி யாருளரோ, உலகாளும் உமைநாதா !

——————————–

Verse 14

प्रभुस्त्वं दीनानां खलु परमबन्धुः पशुपते

प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयोः ।

त्वयैव क्षन्तव्याः शिव मदपराधाश्च सकलाः

प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणिः ॥ १४॥

ஏழையடியோரின் உற்ற உறவன்றோநீ உயிரினத்தலையோனே!

ஏழையில்ஏழையோன் யான், என் சொல்ல நம் உறவுதன்னை

பொருத்தருள்வீர் என் பிழைஅனைத்தும் உறவுக்கடனென்று –

அதுஒன்றே வழியன்றோ நல்உறவுகளின் நடப்பிற்கு பரமசிவனே !

———————————

Verse 15

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥ १५॥

அழுக்காறவாகொள் சிரமுடன் உன்தியானம் கடினமெனக்கண்ட என்மேல்

மெத்தனமில்லையெனில் என்விதிவரையெழுத்தழிக்க முயலவில்லையேன் ?

மாற்றுவது கடினமெனில், அயனவன் மிகுசக்தி சிரம்தனை விரல்நகநுனியால்

எடுத்தனையே சுலபமென, எங்கனம் அது உலகநாயகனே?

———————————-

Verse 16

विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-

श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।

विचारः को वा मां विशद कृपया पाति शिव ते

कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥ १६॥

இப்புவியில் ஊழ்வினைவடிவிதி வரைஅயன் நீடூழி வாழ்க நால்சிரமுடன்

அம்புலிஅணி உமைநாயகனின் கருணையுடன், எனக்கெதற்கு மனக்கவலை!

பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தன்றோ பரந்தமனப்பரமனின் கடைக்கண் – அப்

பார்வை ஒன்றே போதுமே பரம ஏழைகளின் பாலனன் எந்தன் பரமசிவனே!

——————————————————-

Verse 17

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः सम्भ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥ १७॥

நல்வினைப்பயனோ, நாதனின் கருணையோ நானறியேன் நீக்கமற நிறையோனே!

அடியனுக்கு காட்சி கொடுப்பினும் காணவில்லை உன் இருகமலப்பொற்பாதம்

திருவடி வணங்கும் அமரர் கூட்டம் தரி மரகத மாணிக்க வைரமுடிகளின் துலங்கல்

கண்களை கூசவைத்து காட்சி மறைத்தனையோ என் இறையோனே !

——————————————

Verse 18

त्वमेको लोकानां परमफलदो दिव्यपदवीं

वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखाः ।

कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती

कदा वा मद्रक्षां वहसि करुणापूरितदृशा ॥ १८॥

உயிரினங்களின் பிறவிப்பிணிதீர் பெருமருந்து நீயன்றோ சிவனே! உனதருளால்

உயர்ந்திட்ட மாயவனும் தேவரினமும் உனையன்றோ வணங்கிடுவர் உமையோனே!

அளவில்லா உன்பரிவுபோல் அளவற்ற என்அவா அன்றோ, கடைக்கண் பார்வையால்

எப்பொழுது காப்பாயோ ஏழை என்னை இறைவனே!

——————————————

Verse 19

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥ १९॥

வாழ்வெனும் நீர்ச்சுழலில் சிக்கி, ஆசையினால் அல்லல்பட்டு

தீயோரின் வாசல்தொட்டு பிறவிப்பிணி கொண்டு உழல்வோரின்

இடையினிலே வசப்பட்டிருக்குமென் துயர்நீக்கமாட்டாயோ சாம்பனே !

எனைமறந்து பிரமனுக்கு பணிஉதவி புரிந்திட்டேனேன நீ மகிழ்ந்தால்

இப்பிறவியினில் உனைமகிழ்வித்தேனென நானடைவேன் மனநிறைவு

——————————————————————

Sivananda Lahari சிவப்பேரின்ப அலை Verses 6-12

If you want to understand the “learning process” of human beings, just Google it. You will see a tsunami of data/information/flowcharts/graphs/videos. In understanding this process, often we tend to overlook simple steps that we in our lifetime do routinely that cover most of the processes outlined in the public domain. Even if we don’t overlook, we feel it trivial to be conscious about it and store and continuously recall from our memory.

Outlining these simple steps with examples, Adi Sankara brings out the basic purpose of learning in the Verse 6. The simple steps that we adopt in our daily life are

“Prathakshya pramaana” – direct perception – knowledge – clay & pot

“Anumaana pramaana” – inference based – smoke & fire, mountain

“Upamaana pramaana” – by example

“Anupalabthi pramaana” – explained by absence of something

He reemphasizes the same by describing the out of focus actions of the ignorant in the subsequent verses. The message is clear – It doesn’t matter in what form you live and where you live as long as your mind is focused on real learning.

Remember the famous film song by Kannadasan in the Tamil Film “Thiruvarutchelvar”

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடிஎங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

By and large these lines bring out the essence of Sankara’ Verses in this blog

————————————————-

Verse 6

घटो वा मृत्पिण्डोऽप्यणुरपि च धूमोऽग्निरचलः

पटो वा तन्तुर्वा परिहरति किं घोरशमनम् ।

वृथा कण्ठक्षोभं वहसि तरसा तर्कवचसा

पदाम्भोजं शम्भोर्भज परमसौख्यं व्रज सुधीः ॥ ६॥

மண் பானையோ மண்ணாங்கட்டியொ, இப்புவிநிறை அனுவோ

புகையோ மலைஎரியோ, துணி வடிவோ நெய் நூலோ என

ஆடும் வாதம் உதவுமோ அச்சமிகு நம் முடிவில்! வீணான

வெறும் வாதம் விழை வேதனைமிகு நம் மிடறு – ஆதலால்

பொன்னார் மேனியனின் மலர்தாழடி பணிந்து மகிழு மதியோனே (மதிகெட்டொனே)

——————————

Verse 7

मनस्ते पादाब्जे निवसतु वचः स्तोत्रफणितौ

करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ ।

तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे

परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमतः ॥ ७॥

மனமுந்தன் மலர்தாழடி உறைய, வாக்கினில் உன் நாமம் உரைய

இருகரம் உன்னை வணங்க, இருசெவி உன் இதிகாசம்மதனை கேட்க

உள்அறிவு உன்னை தியானிக்க,கண்ணிரன்டும் உன் எழிலருளில் பதிய

வேறெந்த மறைநூலின் உரைவேன்டுமெனக்கு பரமசிவனே!

——————————–

Verse 8

यथा बुद्धिः शुक्तौ रजतमिति काचाश्मनि मणि-

र्जले पैष्टे क्षीरं भवति मृगतृष्णासु सलिलम् ।

तथा देवभ्रान्त्या भजति भवदन्यं जडजनो

महादेवेशं त्वां मनसि च न मत्वा पशुपते ॥ ८॥

கிளிஞ்சல் வெள்ளியென, கண்ணாடித்துகள் மணிக்கல்லென

மாக்கலந்தநீர் பாலென, கானல்நீர் தண்ணீரென மருட்சிகொண்டு,

மக்களவர் மற்றனைத்து தெய்வம்தனை மதித்திடுவர் மாயையினால்

மறந்தனரே மகாதேவனவனவன் மகிமைதனை, அனைத்துயிர் நாயகனே!

———————————-

Verse 9

गभीरे कासारे विशति विजने घोरविपिने

विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः ।

समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते

सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥ ९॥

ஆழ்ஏரி, திகில்வனம்,உயர்மலை நுழைந்து

மலர் தேடி அலைந்தனரே மதிகெட்ட மக்கள்-தம்

இதயக்கமலம்தனை உமக்களித்து – இவ்

இடத்திலேயே பேரின்பம் பெறாமல்

என் சொல்வேன் உமைநாதா!

———————————

Verse 10

नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता

पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् ।

सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी-

विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ॥ १०॥

மானிடமோ, தேவரினமோ, மலைவன மிருகமோ, கொசுவோ,

உயிரினமோ, புழுவினமோ, பட்சியினமோ எவ்வடிவே இருப்பினும்

உம் பாதகமலங்கள்தனை மனமென்றும் தொழுதுநின்றால், பரமானந்த அலை

எனைஅடைய, எவ்வுடம்பில் யாம் இருந்தால் எமக்கென்ன இறைவா!

————————————

Verse 11

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो

नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।

यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते

तदीयस्त्वं शम्भो भवसि भवभारं च वहसि ॥ ११॥

விடலையோ, குடும்பனோ, ஞானியோ, சடைமுடிமுனியோ

எவராகினும் என்ன அவர்தம் இதயக்கமலம்தனை சமர்ப்பித்தால்

நீயன்றோ அவர்வாழ்வின் சுமைதாங்கி அழலேந்தியே

————————————

Verse 12

गुहायां गेहे वा बहिरपि वने वाऽद्रिशिखरे

जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् ।

सदा यस्यैवान्तःकरणमपि शम्भो तव पदे

स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ॥ १२॥

குகையோ, இல்லமோ, வெளியோ, வனமோ

மலைமுடியோ, அழலோ, எதில் வசித்து என்ன பலன் நீ சொல்

மனமதனை உன்மலரடியில் உறுதியுடன் பணித்திட்டால்

அதுவன்றோ யோகம், அவனன்றோ பேரின்பப் பெருயோகி !

———————————–