Hanuman Chalisa – அனுமன் நாற்பது – Part 3 – Verses 17-24

Audio Link

https://www.dropbox.com/s/8mm94pg6sat3j97/Hanuman%20Chalisa%20-%20MS%20Subbulakshmi-VBeUatFx7HI.mp3?dl=0

Verses in Devanagari

तुम्हरो मंत्र विभीषण माना

लंकेश्वर भये सब जग जाना

युग सहस्र योजन पर भानू

लील्यो ताहि मधुर फल जानू

प्रभु मुद्रिका मेलि मुख माहीं

जलधि लाँधि गये अचरजनाहीं

दुर्गम काज जगत के जेते

सुगम अनुग्रह तुम्हरे तेते

राम दुआरे तुम रखवारे

होत आज्ञा बिन पैसारे

सब सुख लहै तुम्हारी सरना

तुम रक्षक काहू को डरना

आपन तेज सम्हारो आपै

तीनों लोक हाँकते काँपै

भूत पिशाच निकट नहिं आवै

महाबीर जब नाम सुनावै

Meaning in English

Vibhisana Followed your Advice,and the Whole World Knows that he became the King of Lanka. The Sun which was at a distance of Sixteen Thousand Miles; You Swallowed It (the Sun) thinking it to be a Sweet Fruit. Carrying Lord Sri Rama’s Ring in your Mouth, You Crossed the Ocean, no Wonder in that. All the Difficult Tasks in this World, are rendered Easy by your Grace.You are the Gate-Keeper of Sri Rama’s Kingdom. No one can Enter without Your Permission. Those who take Refuge in You enjoy all Happiness. If You are the Protector, what is there to Fear?You alone can Control Your Great Energy. When you Roar, the Three Worlds Tremble. Ghosts and Evil Spirits will Not Come Near, when one Utters the Name of Mahavir (Hanuman).

Meaning in Tamil

செவிமடுத்து உன் சொல்தனை ஒப்பியதால் விபீஷணன்

செழிப்புமிகு இலங்கை வேந்தனானது உலகறிந்த உண்மை ..17

ஆயிரம் யுககால யோஜனை பல கடந்துலாவும் ஆதவனை

நா இனிக்கும் கனியென்று எண்ணி விழுங்கிய அனுமனே…..18

அஞ்சன வண்ணனின் கணையாழிதனை வாயிலடக்கி

ஆழமிகு அலைகடல் தாண்டியதில் வியப்பேதுமில்லை …..19

உலகமதில் பணி எத்துனை கடினமெனினும்ஆக்கும்

சுலபம் அப்பணிதனை உன் கருணை உள்ளம்…….20

அனுமன், ராம ராஜ்யத்தின் வாயிற்காவலனன்றோஅவன்

அனுமதியின்றி எவரும் எதுவம் நுழைவது இயலுமோ……..21

அடைக்கலம் நாடும் அன்பர்கள் அடைவர் பேரின்பம்உன்

அபயக்கரம் இருக்கையில் அடியார்க்கு ஏது பயம் ?…….22

முழு உனது ஆற்றல் உன் வசம் மட்டும்

மூவலகும் அஞ்சி நடுங்கும் உன் திறம்………23

பாபபூத பிசாசுதான் வந்திடுமோ எமை நெருங்கிட்டு

மாவீரன் அனுமன் உன் நாமம் யாம் உரைப்பது கேட்டு………24

ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி

Hanuman Chalisa – அனுமன் நாற்பது – Part 2 – Verses 9-16

Audio Link

https://www.dropbox.com/s/8mm94pg6sat3j97/Hanuman%20Chalisa%20-%20MS%20Subbulakshmi-VBeUatFx7HI.mp3?dl=0

Verses in Devanagari

सूक्ष्म रूप धरि सियहिं दिखावा

बिकट रूप धरि लंक जरावा

भीम रूप धरि असुर सँहारे

रामचन्द्र के काज सँवारे

लाय सजीवन लखन जियाये

श्री रघुबीर हरषि उर लाये

रघुपति कीन्ही बहुत बड़ाई

तुम मम प्रिय भरतहि सम भाई

सहस बदन तुम्हरो यश गावैं

अस कहि श्रीपति कण्ठ लगावैं

सनकादिक ब्रह्मादि मुनीशा

नारद शारद सहित अहीशा

यम कुबेर दिगपाल जहाँते

कवि कोविद कहि सकैं कहाँते

तुम उपकार सुग्रीवहिं कीन्हा

राम मिलाय राजपद दीन्हा

राम् लक्श्मन् जानकि जै बोलो हनुमानुकि

Meaning in English

Assuming the smallest form you saw (visited) Sita and assuming the gigantic form you burnt down the Lanka. Assuming a terrible form you slayed demons. You made Lord Rama’s works easier. You brought Sanjeevini mountain to save Lakshmana’s Life. Lord Rama embraced you in joy. Lord Rama praised you very much saying ‘You are dear to me like my brother Bharata. May the thousand headed serpent Adishesha sing of your glory’ saying this Lord Rama embraced you. Sanaka, Brahma and other Royal sages, Narad, Saraswati and Adishesha, Yama, Kubera, Dikpaalakas, poets and singers; they can not describe your greatness properly. You helped Sugreeva. You made him friends with Rama which gave him his Kingship back.

Meaning in Tamil

அணு வடிவெடுத்து அன்னை சீதைமுன் வெளிப்பட்டாய்

அண்டமேழு உருவெடுத்து லங்கைதனை எரித்திட்டாய்….9

அச்சம் விளை வடிவுடனே அரக்கர்தனை அழித்தாய்

அஞ்சனனின் பணிப்பளுவை ஆக்கிட்டாய் எளிதாய்….10

இளையவன் உயிர்காக்க மூலிகைமலை சஞ்சீவினி கொணர்ந்தாய்

அளவிலாப் பெருமகிழ் ரகுகுலவீரன் ராமனால் தழுவிடப்பெற்றாய்…11

எனதருமை இளவல் பரதனொப்பம் நீயென

எம்பெருமான் ரகுபதி புகழாரம் புரிந்தனனே…..12

ஆயிரம் தலையுடை ஆதிசேஷனும் உந்தன் புகழ் பாடுவான் என

பாசுரம் போற்றும் பரந்தாமன் அனுமனை ஆலிங்கணம் செய்தான்….13

சனகருடன் முனியோரும் நான்முகனும் நாரதனும்

பன்னகனும் கலைமகளும் அடிமுடி காணோனும்……14

காலனும் குபேரனும் காவல் தெய்வங்களும் கவிகளும்

கற்றோரும் உன் பெருமை உரைத்திட இயலுமோ ……15

வான்புகழ் வில்லோன் ராமனிடம் அறிமுகம் செய்து

வானர அரசனாக்கி பேருதவி புரிந்தாய் சுக்ரீவனுக்கு….16

ராம லஷ்மண ஜானகி , அனுமனுக்கு என்றும் வெற்றி

Mind Over Matter (Sivananda Lahari Verses 20-22)

Mind over matter

Universally, cutting across demography, why do we always refer to monkeys when it comes to the description about the fickle minds of humans? Here is one response that I found in the WW Web:

This monkey quality of the mind follows logically from the evolutionary process in which the primate brain was honed in millions of years of tree dwelling. The arboreal habitat drove the development of visual dominance, color perception, incomparable eye-hand dexterity and much of the underlying hardwiring and intelligence of the human brain. So if our minds are monkey-like, we certainly come by it naturally“.

Continuing the process of prayer, Adi Sankara comes to the most important element – the mind, once again bringing out the existing state of mind in this next three verses

——————————————————-

Verse 20

सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ

नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।

कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं

दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥ २०॥

தீயிச்சையெனும் வனத்திலே திக்கெட்டும் கிளைகள் தாவி

இளமங்கையரின் கொங்கைமோகம் கொண்டு குதியாட்டம் போட்டு

மாயைகொண்டு மதிகெட்டு அலையும் என்மனக்குரங்தனை

பக்தியெனும் வடம்கொண்டு கட்டிடுவாய் கயிலைநாதா!

உன்வசப்படுத்து கட்டடங்கா என்மனமதனை கபாலீஸ்வரனே!

—————————————–

Verse 21

धृतिस्तम्भाधारां दृढगुणनिबद्धां सगमनां

विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् ।

स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां

जय स्वामिन् शक्त्या सह शिवगणैः सेवित विभो ॥ २१॥

மன்மதனை வென்ற மகேஸ்வரனே! பூத கணங்கள் பூசிக்கும் உலகநாதனே!

தைரியமனும் தூணதனை உறுதிகொண்ட குணங்களெனும் வடம் முறுக்க

மலர்தாமரையென அசைந்தாடி துலங்கும் வெண்நிறக்கூடாரமெனும் என்

மனமதனை அனுதினமும் விரிக்கின்றேன் தூயநெறிப் பாதைமேல்

வந்திருந்து ஆண்டருள்வாய் உமையவளை உடன் கொண்டு, மூவுலகோனே!

—————————

Verse 22

प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे

प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते ।

इमं चेतश्चोरं कथमिह सहे शङ्कर विभो

तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥

அழுக்காறுஅவாவெகுளி கொண்டு பிறர் பொருளதனைக்கையாண்டிட

செல்வந்தரின் இடம் நுழைய முயன்று வழிதேடி அலைகின்ற என் மனத்தை

எங்கனம் பொறுத்திடுவேன் உலகோரின் உள்ளம் கவர் கள்ளனே!

என் உடல் உள்ளே ஒளிந்திட்ட மனமதனை உன்வசப்படுத்தி

நிரபராதி என்மேல் கருணை கொள்வாய் உலகாளும் சங்கரனே உமைநாதா!

————————-