“Psychologists describe prayer as a “subconscious” and” emotional effusion”, an outburst of the mind that desires to enter into communication with the invisible”. In today’s wired world when we say “communication” we all understand and know the processes, the techniques, methodologies to improve effectiveness etc. Even if we don’t there is the WW Web to help us.
But take a ride back in time and reach the 5th to 8th Century. Imagine the copious waters (at that period) in two streams named Phaladhara & Panchadhara winding down the picturesque Nallamala Hills in the Eastern Ghats near in a place called Srisailam. ‘Phaladhara-Panchadhara’ signify their origin from the fore head of God Siva, the Phaladhara (Phala=fore head, dhara=stream) and denotes the five aspects of Siva, the Panchadhara (Pancha=five, dhara=stream). Imagine yourselves sitting aloof and trying to communicate with either yourself or to the Invisible. Wow. Won’t your mind open up?
Any traveller/travel website today can come out with several beautiful photos of the location like these I found in the Internet; if only I can take the time back…….
This is where Adi Sankara had his exclusive communication with the Invisible and like the streams, his flow of thoughts were unstoppable carrying the essence of living. Very aptly he has titled his flow as Sivananda Lahari.
The “Research Scholar” Sankara takes his communication process to the next logical step. After outlining his incapabilities & limitations esp in “mind control”, he now comes out with a “statement of intent/purpose” before taking it further with his Guide (Lord Siva).
Verses given below brings out the clarity in his communication when it comes to putting across his wishes/requirement to the Lord. Remember “if wishes were horses….” is not applicable when you communicate with the Invisible
——————————————————
Verse 23
करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो
विधित्वं विष्णुत्वं दिशसि खलु तस्याः फलमिति ।
पुनश्च त्वां द्रष्टुं दिवि भुवि वहन् पक्षिमृगता-
मदृष्ट्वा तत्खेदं कथमिह सहे शङ्कर विभो ॥ २३॥
பேரின்பம் நாடி உனை யான் அடிதொழ நீ உவந்தளித்த பதவிக்கனி
நான்முகனின் ஆக்கு, மாயவனின் காப்புப் பணியெனினும் ஏற்றிலேன்,
வான்புள் எனவோ, வனவிலங்கெனவோ உழலவேண்டும் ஏற்றிட்டால்,
காணாஉனை ஏங்கிப்பெறும் துயரதனைத் தாங்கிடலேன் உயிரினத்தலையோனே!
——————————-
Verse 24
कदा वा कैलासे कनकमणिसौधे सहगणै-
र्वसन् शम्भोरग्रे स्फुटघटितमूर्धाञ्जलिपुटः ।
विभो साम्ब स्वामिन् परमशिव पाहीति निगदन्
विधातॄणां कल्पान् क्षणमिव विनेष्यामि सुखतः ॥ २४॥
கயிலாயமலைதனில் பொன்மணி மாளிகையில் சிவகணமுடன், சிரம்மேல்
கரம்இரு கூப்பி உமையொருபாகனை “உலகோனே, உயிரினத்தலையோனே
ஆண்டோனே, பேரின்பளியோனே, பெரியோனே, ஈசனே காத்திடுவாய்” எனப்
பண்பாடி, அயன் வாழும் பலகாலமெனும் கல்பமதை இமைப்பொழுதெனக்
களிப்புடனே கழித்திடுவேனோ, அடிமுடி காணா இமயமலையோனே!
——————————–
Verse 25
स्तवैर्ब्रह्मादीनां जयजयवचोभिर्नियमिनां
गणानां केलीभिर्मदकलमहोक्षस्य ककुदि ।
स्थितं नीलग्रीवं त्रिनयनमुमाश्लिष्टवपुषं
कदा त्वां पश्येयं करधृतमृगं खण्डपरशुम् ॥ २५॥
அயனும் முனிவரும் அனைத்துலகதேவரும் அரனின் வெற்றிகீதமுழங்க,
பூதகணங்கள் ஆடல் பாடல் கூத்தென கேளிக்கையாட்டம் போட
உறுதிமிக்க விடையதனின் உயர் திமிலதன்மேல் உமையொருபாகனாய்
விடம் உண்டுநீலித்த கழுத்துடனே, கரங்கள்தனில் கோடரி மானேந்தி
முக்கண்ணணாய் முழுமுதற்கடவுளாய் உனையென்று காண்பேன் உமைநாதா !
—————————–
Verse 26
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलाभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६॥
உன்னிரு பொற்ப்பாதம்தனை உறுதியுடன் தொழுதேற்றி
என் சிரவிழிமார்மேல் சிக்கெனப்பதித்துத்தழுவி
முழுமலர்ப்பாதமலரதனின் நறுமணம்தனைநாடி
அயனும் அனைத்துலக தேவர்களும் அடையாப் பேரின்பம்தனை
அனுபவிப்பேன் எப்பொழுது கயிலைமலை வாசனே !
———————————
Verse 27
करस्थे हेमाद्रौ गिरिश निकटस्थे धनपतौ
गृहस्थे स्वर्भूजाऽमरसुरभिचिन्तामणिगणे ।
शिरस्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे
कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मनः ॥ २७॥
கரமதனில் பொன்மலை, அருகினில் தனவேந்தன் குபேரன்,
இல்லம்தனில் கற்பகமரம், காமதேனுப்பசு, சிந்தாமணிமுத்து,
சிரமதனில் மிளிர்கொன்றை, இருதிருவடிதனில் இகபரசுகம்,
உன் உடைத்தன்றோ இவையனைத்தும் கயிலைமலைவாசனே,
என்னிடம் அளித்திட ஏழையோனின் மனம் விட்டு வேறில்லை, இமயமலைநாதனே!
———————————
Verse 28
सारूप्यं तव पूजने शिव महादेवेति सङ्कीर्तने
सामीप्यं शिवभक्तिधुर्यजनतासाङ्गत्यसम्भाषणे ।
सालोक्यं च चराचरात्मकतनुध्याने भवानीपते
सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन् कृतार्थोऽस्म्यहम्
உனை உளமுருகி பூசிப்பதில் உன்வடிவம் கொண்டேன் மகாதேவனே
உன்புகழை பக்தியுடன் பாட உன்னருகில் நானிருந்தேன் சிவபிரானே
உன்அன்பரடியாருடன் உரையாட உம்பருலகம் நானடைந்தேன் பரமனே
உனையென்னி உடல்உள்ளமதை ஒருநிலைப்படுத்தி உன்னுடன் கலந்தேன்
இப்பிறவிதனிலேயே பேரின்பம்பெற்று நிறைந்திட்டேன் இறைவனே
———————————-
Verse 29
त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां
शम्भो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥
உன் பொன்மலர் பாதம்தனை துதித்து அனுதினமும் தியானம் புரிந்து
என் நாவினில் உன்நாமமேற்றி உனைச் சரண் அடைந்தேன் நமச்சிவாயா
அவுனர்கள் விழைக் கருணை நிறை கடைக்கண்களால் காட்சிகொடுத்தெனக்கு
பேரின்பம் பெற்றிடும் பாடம்தனை உரைத்திடுவாய் உலகாளும் ஆசிரியனே
———————————————————-
Verse 30
वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता
गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।
पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे
शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥
ஆயிரம் கைக்கொண்டு உனதாடைநெய்யும் ஆதவனின் திறன்,
வண்ணமுடைமலர் கொண்டு உனைத்துதிக்கும் மாயவனின் இயல்,
வாசமிகு சந்தனதிரவியம்தனின் மணம் பறப்பும் வாயுவின் வலிமை,
அன்னம் சமைக்க உதவிடும் அனலதனை முகம் கொண்ட தேவர்களின் திறமை,
அனுதினமுமுனைப் பூசிக்கக் கொள்கலம் படைத்திடும் அயனவனின் ஆற்றல்,
இவையனைத்தும் எளியோன் எனக்கிருந்தால் மிளிர்கொன்றையனிந்தோனே,
செவ்வனே செய்வேன் சிறப்புடனே உன் இறைபணி, உலகாளும் உமையோனே!
————————————-