The “In” in the Invisible ? Sivananda Lahari Verses 47-54 (continued)

Verse 47 (The Spring arrives)

शम्भुध्यानवसन्तसङ्गिनि हृदारामेऽघजीर्णच्छदाः

स्रस्ता भक्तिलताच्छटा विलसिताः पुण्यप्रवालश्रिताः ।

दीप्यन्ते गुणकोरका जपवचःपुष्पाणि सद्वासना

ज्ञानानन्दसुधामरन्दलहरी संवित्फलाभ्युन्नतिः ॥ ४७॥

இதயத்தோட்டமதில் சிவ தியான வசந்தத்தின் வருகை எனவே

முதிர் இலைகளெனும் பாவங்கள் உதிரும், பக்தியெனும் கொடிகள் படரும்,

நல்வினைகள் துளிர் விடும், சீர்பண்பு மொக்குகள் விரிய சிவப்பண்கள் மலரும்,

மெய்ஞானத் தேன் ஓடும் , பேரின்பத்திளை எனும் கனிகள் தாங்கும்

———————————————-

Verse 48 ( Mind – the Kingly Swan – Pl do mind)

नित्यानन्दरसालयं सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयं

स्वच्छं सद्द्विजसेवितं कलुषहृत्सद्वासनाविष्कृतम् ।

शम्भुध्यानसरोवरं व्रज मनो हंसावतंस स्थिरं

किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसञ्जातश्रमं प्राप्स्यसि ॥ ४८॥

பேரின்ப அமிழ்து உறை, தேவமுனிஇதயங்கள் வாழ்,

பாவங்களெனும் மாசு அகற்றும், புண்ணிய மணம் பரப்பும்

ஞானியரெனும் அன்னப்பறவைகள் வெகுநாடும்,

பார்வதி நாயகனின் நீர்நிலைதனை நிலையாக அடையாமல்

சிரியோருக்கு உகந்த சம்சாரஅல்லல் எனும் சேறுநிறை குட்டையிலே

குறியற்ற பயணமேற்று வீணேஉழன்று திரியாதே மனமெனும் ராஐஅன்னமே !

——————————————

Verse 49 ( Devotion – the creeper)

आनन्दामृतपूरिता हरपदाम्भोजालवालोद्यता

स्थैर्योपघ्नमुपेत्य भक्तिलतिका शाखोपशाखान्विता ।

उच्छैर्मानसकायमानपटलीमाक्रम्य निष्कल्मषा

नित्याभीष्टफलप्रदा भवतु मे सत्कर्मसंवर्धिता ॥ ४९॥

பேரின்ப அமிழ்தெனும் நீர் பாய்ச்சி, பேரிறையின் பொற்பாதமலரடியில் முளைத்து,

மனஉறுதிக் கொம்பதனில் சுற்றி, கிளைசிறுகிளைபல அடர்ந்த என்மனப்பந்தலின்

உச்சியிலே, தீவினை தவிர்த்து நல்வினை உதவ நன்கு படர்ந்து, யான்விழையும்

இனியமுக்திக்கனிகளை அனுதினமும் அளித்திடுக பக்தியெனும் படர்கொடியே !

————————————————–

Verse 50 (Sankara – the Jasmine Flower)

सन्ध्यारम्भविजृम्भितं श्रुतिशिरस्थानान्तराधिष्ठितं

सप्रेमभ्रमराभिराममसकृत् सद्वासनाशोभितम् ।

भोगीन्द्राभरणं समस्तसुमनःपूज्यं गुणाविष्कृतं

सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गं शिवालिङ्गितं ॥ ५०॥

மாலையில் மலர்ந்து செவி சிரம் சேர்ந்து இனித்தேனீக்கள் நாட

உலகவாஞ்சையுடையோர் நுகர மங்களகரமான நறுமணம் பரப்ப

அழகுமலையின் மருதமரம் தழுவி படரும் மல்லிகை மலர் கொண்டு

மாலையில் தாண்டவமாடி மறைசிரமெனும் உபநிடத்தில் உறையும்

நல்வினையர் நினைவால் ஒளிவிடும் அம்பிகையொரு அழகன்

எளியோரின் பக்தி மணம் கமழும் அரவு அணியோன் நற்குணவடிவோன்

தேவர்கள் போற்றும் தவசீலன் உமைதழுவும் உலகாண்டோன்

நல்லமலை உறை மல்லிகார்ஜுன மகாலிங்கம்தனை சேவிப்பேன் யான்

—————————————-

Verse 51 (Sankara – The Bee)

भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्र्गाही स्फुरन्माधवा-

ह्लादो नादयुतो महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनो-

राजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१॥

பெண் தும்பிக்கிசைந்தாடி, சொரியும் வேழமதம் அருந்தி

வசந்தத்தில் மகிழ்ந்தாடி, கண்கவர ரீங்காரமிட்டடு

மலர்நிறை மலை விழை, எங்கும் பறந்துதிரியும் கருந்தேனீ ஒப்ப

பிரிங்கிமுனிவிழையேற்று நடனமாடி, வேழஅசுரனை வதைத்து,

மாயனின் வடிவான மோகமதை விரும்பி, ஓம்கார நாதனாய்,

மன்மதன் உன்அழகு ஒப்ப, நல்லோர்இனம் காக்கும் நாயகனாய்

நீக்கமற நிறைந்து ஶ்ரீசைலமலைவாழ் பிரமராம்பிகைபதியோன்

என்கண்எதிரில் காட்சிதந்து தாமரையெனும் எனமனதில் விளையாடட்டும்

——————————————

Verse 52 ( Sankara – the rain cloud)

कारुण्यामृतवर्षिणं घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं

विद्यासस्यफलोदयाय सुमनःसंसेव्यमिच्छाकृतिम् ।

नृत्यद्भक्तमयूरमद्रिनिलयं चञ्चज्जटामण्डलं

शम्भो वाञ्छति नीलकन्धर सदा त्वां मे मनश्चातकः॥ ५२॥

அமழ்தெனும் நீர் பொழி, வறட்சிவிளை பெருந்துயர்தணி,

அன்னப்பயிர் செழி,மகிழ் மயில்கள் நடனம் விளை

உலகோர் போற்றும், எவ்வடிவம் ஏற்கும், மின்னலுடன் இடிக்கும்

மலைவாசம் மிகு நீல வண்ண மேகமென

கருணை மழை பொழி, கடுங்கோடை வெயில்எனும் துயர்தணி,

அறிவுப் பயிர்செழி, நல்மனம் போற்றும், மயில் நடனமாடும் அடியார்நிறை,

எவ்வடிவம் ஏற்கும் மின்னார் செஞ்சடையோன் நீலமிடறு மலைவாசன் மேல்

மழை வரவு அறிவிச் சுடலைக்குயிலெனும் என்மனம், நிலவுலாவிய

நீர்மலி வேணியன் உனை விழைகின்றதே உமையோனே, சங்கரனே!

————————————————

Verse 53 ( Sankara – the Peacock)

आकाशेन शिखी समस्तफणिनां नेत्रा कलापी नता-

ऽनुग्राहिप्रणवोपदेशनिनदैः केकीति यो गीयते ।

श्यामां शैलसमुद्भवां घनरुचिं दृष्ट्वा नटन्तं मुदा

वेदान्तोपवने विहाररसिकं तं नीलकण्ठं भजे ॥ ५३॥

செஞ்சடையில் வான் மயிற்கொண்டையென, மயில் பகை அரவரசனை பூண் என

அணிந்து, அடியாருக்கருள் புரிந்து, மயில் அகவும் கேகியென ஓம்காரமுரைத்து

மேகஎழில் மலைமகள் கண்டு மழைமுகில் கண்ட மயிலென ஆனந்த நடனமாடி

வேதாந்த நந்தவனம்தனில் விழைந்து விளையாடும் நீலமிடறு நாயகனெனும்

வண்ண மயிலதனை நான் வணங்குகின்றேன்

———————————————————–

Verse 54 (Sankara – the Peacock)

सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक-

ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला ।

भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा

यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४॥

கோடைமுடியும் வேளையிலே, இளமாலைப்பொழுதினிலே,

மாயவனின் கரம் எழுப்பும் மிருதங்க ஒலி இடியெனமுழங்க,

தேவரினவிழிகள் மின்னலென ஒளிக்க, அடியாரின் மனமுருகிவிளை

ஆனந்தக்கண்ணீர் மழையெனப் பொழிய, பெண் மயிலெனும

அன்னை உமையவள் முன்நின்று ஆனந்த நடனமாடிக் களிக்கும்

ஆண் மயிலெனும் நீல்கழுத்துடை பரமசிவனைத் துதிக்கின்றேன் யான் !

————————————-

The “In” in the Invisible ? Sivananda Lahari Verses 37-46

Here is a typical situation that my friend Ram goes through:

Ram joins as an important member of an Enterprise which serves customers across the globe. His job involves extensive travel & meeting varied customers and their representatives and provide quality service. He puts his heart and soul and works between 60 to 70 hours a week. His decisions are vital for the success of his organization. He loves his job immensely.

Now after slogging for couple of years, he takes a vacation and goes out to a forest with dense woods & streams. He spends time in exploring the scenic spread of flora & fauna, animals that wander and wonders at the manifestation of Nature. He settles down in the evening with his family/friends after a strenuous trek. He begins to unwind and contemplates. In the chat with his friends/family very often he compares the presence, behavior and response of animals & nature he encountered during the trek with similar situations that he had faced in his work environment. Like a movie flash back, he starts to compare his current actions, reactions and feelings that he faces to the ones that he, his colleagues or his customers faced/displayed at work. This is quiet natural, as the mental impressions of his high pressure job make their presence feel in his current environment. His focus on his job is so dedicated that he starts to see his job (which he loves so much) in everything that he sees or does. He sees his job in the work of a bird, he sees the reaction of his Boss in the behavior of an animal, he sees the risks of the job in the hazardous route of his trek, he sees the economy which drives his customers in the dark clouds, he sees the results of his work in the sun shine and the rewards that follow in the moon lit night with cool breeze.

What did Ram see “In the beauty of a flower, in the innocence of a baby animal, in the radiance of the sun, in the generosity of the earth, in the harmony of the universe, in the beauty of the heavens, in the waters of the rivers and streams and the vastness of the universe” during his vacation? He saw his passion, his commitment and devotion to his job.

Here is another perspective; suppose you take up a job on your own interest which will pay you a mammoth “industry standard setting bonus” and a severance pay better than the best. The job description goes on like this “Seeking the eternal presence of Lord Shankara in your mind”. With tons of interest, devotion and commitment you do your new assignment and like Ram you also take a break after two years. You visit Nallamalai Hills and the associated forests! What would you see and how will you describe what you see ? Looking forward to your views!

Now read this:

“There is a Spirit who is hidden in all things, as cream is in milk and who is the source of all knowledge and self-sacrifice. This is Brahman, the spirit Supreme. This is Brahman, the spirit Supreme. – Svetasvatara Upanishad.”

This is exactly what Adi Shankara saw in the woods of Srisailam. He always felt that God resides in him and imagined that He is present wherever he went and in whatever actions he performed.

He sees his mind as a monkey, a Swan, a peacock, a Jacobean Cuckoo, a ruddy goose, a pheasant etc and sees God in the blue sky, dark clouds, Sun, moon, rain, spring, autumn etc. He visualises God as a thief, a hunter, a Lion, a flower, a bird, an Yogi and a friend.

His poetic skills in describing how much he loves his most challenging job in various ways by seeing the Lord in every thing that he sees is just amazing and keeps you glued to the “Lahari” like the Surfer who enjoys riding the waves again and again.

Here are the Verses; there are two blogs; one covering upto Verse 46 & the next one upto Verse 54

————————————————————

Verse 37

आम्नायाम्बुधिमादरेण सुमनस्सङ्घाः समुद्यन्मनो

मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः ।

सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां

नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥

நலம் வாழ்த்தும் ஆத்மஞானியர் ஒன்றினைந்து திடபக்தியெனும் புரியினை

நல்மனமெனும் மத்தேற்றி மறைவேதமெனும் கடல்தனை பக்தியுடன்

கடைந்து இச்சைதீர்மரம், அமுதசுரபிப்பசு, சிந்தாமணி, பேரின்ப நிலைப்

பெரும் செல்வம் என உறையும் உமையொருபாகனை பெறுவரே !

Remember the Suvarnabhumi Airport at Bangkok !

———————————-

Verse 38 (Seeing God in the rise of the Full Moon)

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः

सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।

चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः

प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ஆனந்தக்ககடல் உயர, நல்மனம்விழைவோர் புடைசூழ, பக்தர் முகமலர

மலையொப்ப நல்முன்வினைப்பலன் புலப்படுத்த மாயமான் கையிலேந்தி

மன இருளகற்றும் கருணை பொழி உமையொருபாகனெனும் இறையின் காட்சி

அலைகடல் உயர, விண்மீண்கள் புடைசூழ, கமலம்தன் முகமலர

தூயகீழ்மலை புலப்படுத்த மான்குறிஉள்ளடக்கி, உலக இருளகற்றும்

வெண்ஒளி பொழி முழுநிலவதனைக் காண்பதற்கு ஒப்பமன்றோ

அக்காட்சிதனைக் கண்குளிரக் கண்டவர் பேரின்பம் அடைந்திட்டு

உலகோரை உயவிக்கப் பெருநிலை பெற்றாரே உமைநாதா

——————————–

Verse 39

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं

कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।

ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा

मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

என் இதயக் கமலமெனும் நகரிலே அரசருக்கரசன் அனைவரும் மதியும் அம்புலியான் உறைவெனில், தவம் தூய்மை கருணை உண்மையெனும்

நாக்கால்கள் கொண்ட தருமம் நிலைத்திடும், பாவங்கள் களைந்திடும்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் மறைந்திடும்

காலங்கள் எல்லாம் களிப்புடனே கழிந்திடும் சீரனெவே, பேரின்ப

அறிவுப் பயிரதனை செழிப்புடன் அறுவடை செய்வேன் இறையானே!

——————————

Verse 40 (Farm irrigation)

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः ॥ ४०॥

அறிவெனும் இயந்திரமிட்டு வாக்கெனும் குடமெடுத்து

கவியெனும் கால்வாய் வழி சதாசிவப்புகழெனும்

அமிழ்தொப்ப நீரதனை அடியானின் இதயவயல்விளை

பக்தியெனும் பயிருக்கு பாய்ச்சிட்டால் பயனுள்ள

அறுப்பினால் பஞ்சமெனும் பயம் எனக்கு எங்கனம் உலகநாயகனே!

—————————-

Verse 41

पापोत्पातविमोचनाय रुचिरैश्वर्याय मृत्युञ्जय

स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने ।

जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयनश्रोत्रैरहं प्रार्थितो

मामाज्ञापय तन्निरूपय मुहुर्मामेव मा मेऽवचः ॥ ४१॥

பாவங்களைக்களைந்து முக்திக்குவித்திட்டு பேரின்ப்பெருஞ்செல்வம் பெற

என் வினைபுலன் உறுப்புகளாம் நா உனைப்பாட, மனம் உனைநினைய,

சிரம் உனைப்பணிய, இருகரம் உனைத்தொழ, தாழ்கள் உன்வலம்வர,

செவிகள் உன்புகழ் கேள, கண்கள் உனைக்காண, இவை விழைந்து எனை வேண்ட, அங்ஙனம் பணிபுரி என நீ கட்டளை இட்டு, எப்பொழுதும் எனது

உறுப்புகள் தடையின்றி அப்பணிகள் புரிய சக்தி கொடு, மரணத்தை வென்றோனே !

———————————————-

Verse 42 ( Mind – The Fortress of Devotion)

गाम्भीर्यं परिखापदं घनधृतिः प्राकार उद्यद्गुण-

स्तोमश्चाप्तबलं घनेन्द्रियचयो द्वाराणि देहे स्थितः ।

विद्यावस्तुसमृद्धिरित्यखिलसामग्रीसमेते सदा

दुर्गातिप्रियदेव मामकमनोदुर्गे निवासं कुरु ॥ ४२॥

திடமான துணிவு கொண்ட மன உரம் எனும் புற மதில் உள்ளே

தடங்காணா ஆழமிகு விற்பன்னம் எனும் அகழி தாண்டி

நல்முன்வினை விளை பண்புகள் தோழமைப்படையெனக் காக்க

ஞானவினைபுரி உடல் உறை உறுப்புகள் வாயில்களென முடித்திறக்க

பரம்பொருளறிந்த மெய்அறிவு எனும் பெருஞ்செல்வம் இழைத்தோட

உன் தேவைக்கேற்ற அனைத்துப்பொருட்களின் இருப்பிடமென இருக்கும்

என் மனம் என்னும் கோட்டையிலே எப்பொழுதும் குடியிருந்து மகிழ்ந்திடு

உமையவள் மனம் கவர், அடையஇயலா அரண் வாழ் மலைவாசனே, சங்கரனே!

—————————————————–

Verse 43 ( Sankara the medieval hunter)

मा गच्छ त्वमितस्ततो गिरिश भो मय्येव वासं कुरु

स्वामिन्नादिकिरात मामकमनःकान्तारसीमान्तरे ।

वर्तन्ते बहुशो मृगा मदजुषो मात्सर्यमोहादय-

स्तान् हत्वा मृगयाविनोदरुचितालाभं च सम्प्राप्स्यसि ॥ ४३॥

இங்கங்கு செல்லாமல் என்மனம் தன்னில் வசித்திடு ஆதிவேடனே!

எல்லையில்லா என்மனம் எனும் அடர் வனமதில் கட்டு ஏதுமின்றி

அழுக்காறு அவா எனப்பல வலிய மதமிகு விலங்கினங்கள் திரிகின்றனவே

அவ்விலங்கினங்களை வேட்டையாடி விளையாடி பலன் பெற்றுமகிழ்வாய்

ஆதிஅந்தமில்லா மலைவாசனே மகாதேவனே உமைநாதா!————————————————————–

Verse 44 (Sankara the Lion )

करलग्नमृगः करीन्द्रभङ्गो

घनशार्दूलविखण्डनोऽस्तजन्तुः ।

गिरिशो विशदाकृतिश्च चेतः-

कुहरे पञ्चमुखोस्ति मे कुतो भीः ॥ ४४॥

கரமதனில் மான் இருத்தி வேழத்தை வீழ்த்தி வேங்கைதனை

வேட்டையாடி விலங்கினம் வதைத்து விந்த முகமுடன்

ஒளிமிகு உடலுடனே மலைகுகை வாழ் அரிமா என, என்

மனக்குகையுள்ளே, கையிலே மானேந்தி, வேழ அசுரனை வீழ்த்தி

வேங்கை அசுரனை வேட்டையாடி, உயிரினமனைத்தும் உள்ளடக்கி,

தூயவெண்மை உடல் கொண்டு, ஐந்துமுகத்துடனே மலைவாசன்

அண்ணாமலையான் அமர்ந்திருக்க, அடியேனுக்கு ஏது அச்சம் !

h

——————————————

Verse 45 (Mind – the bird)

छन्दःशाखिशिखान्वितैर्द्विजवरैः संसेविते शाश्वते

सौख्यापादिनि खेदभेदिनि सुधासारैः फलैर्दीपिते ।

चेतःपक्षिशिखामणे त्यज वृथासञ्चारमन्यैरलं

नित्यं शङ्करपादपद्मयुगलीनीडे विहारं कुरु ॥ ४५॥

உபநிடத்து உயர்கிளைகள் யாப்பிலக்கண கீழ்கிளைகள் கொண்டு

வேதவித்தகர் பறவையென வெகுநாடும் அமிழ்தெனும் காமமுக்திப்பழமிகு

பேரின்பப் பெருநிழல்தரும் மறையெனும் அழிவில்லாஇம்மரத்தில்

சங்கரனின் பொற்பாதமெனும் கூடதனில் வசித்திருந்து விளையாடு,

சிறகடித்து பறந்தலைந்து ஓயாதே மீப்பெரு எண்ணப் பறவையே !

———————————————

Verse 46 ( Mind – the Kingly Swan)

आकीर्णे नखराजिकान्तिविभवैरुद्यत्सुधावैभवै-

राधौतेपि च पद्मरागललिते हंसव्रजैराश्रिते ।

नित्यं भक्तिवधूगणैश्च रहसि स्वेच्छाविहारं कुरु

स्थित्वा मानसराजहंस गिरिजानाथाङ्घ्रिसौधान्तरे ॥ ४६॥

பாற்கடலின் அமுத அலை ஒளியிலே தாழ்நக ஒளி இனைந்து

வளர்பிறைகதிர்விளை வெண்மையுடன்கூடி செம்பவழக்கற்களின்

அழகேற்றி ஞானியரெனும் அன்னப்பறவைகள் வெகுநாடும்

மலைமகள் நாதனின் பொற்பாதமெனும் மாளிகையில்

மணமகளிரென உறையும் பக்தியெனும் மங்கையருடன்

விளையாடி மகிழ்வாய் ராஜ அன்னப்பறவை எனும் என்மனமே !

——————————-

To be continued in the next blog ………….