Mind Over Matter (Sivananda Lahari Verses 20-22)

Mind over matter

Universally, cutting across demography, why do we always refer to monkeys when it comes to the description about the fickle minds of humans? Here is one response that I found in the WW Web:

This monkey quality of the mind follows logically from the evolutionary process in which the primate brain was honed in millions of years of tree dwelling. The arboreal habitat drove the development of visual dominance, color perception, incomparable eye-hand dexterity and much of the underlying hardwiring and intelligence of the human brain. So if our minds are monkey-like, we certainly come by it naturally“.

Continuing the process of prayer, Adi Sankara comes to the most important element – the mind, once again bringing out the existing state of mind in this next three verses

——————————————————-

Verse 20

सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ

नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।

कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं

दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥ २०॥

தீயிச்சையெனும் வனத்திலே திக்கெட்டும் கிளைகள் தாவி

இளமங்கையரின் கொங்கைமோகம் கொண்டு குதியாட்டம் போட்டு

மாயைகொண்டு மதிகெட்டு அலையும் என்மனக்குரங்தனை

பக்தியெனும் வடம்கொண்டு கட்டிடுவாய் கயிலைநாதா!

உன்வசப்படுத்து கட்டடங்கா என்மனமதனை கபாலீஸ்வரனே!

—————————————–

Verse 21

धृतिस्तम्भाधारां दृढगुणनिबद्धां सगमनां

विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् ।

स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां

जय स्वामिन् शक्त्या सह शिवगणैः सेवित विभो ॥ २१॥

மன்மதனை வென்ற மகேஸ்வரனே! பூத கணங்கள் பூசிக்கும் உலகநாதனே!

தைரியமனும் தூணதனை உறுதிகொண்ட குணங்களெனும் வடம் முறுக்க

மலர்தாமரையென அசைந்தாடி துலங்கும் வெண்நிறக்கூடாரமெனும் என்

மனமதனை அனுதினமும் விரிக்கின்றேன் தூயநெறிப் பாதைமேல்

வந்திருந்து ஆண்டருள்வாய் உமையவளை உடன் கொண்டு, மூவுலகோனே!

—————————

Verse 22

प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे

प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते ।

इमं चेतश्चोरं कथमिह सहे शङ्कर विभो

तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥

அழுக்காறுஅவாவெகுளி கொண்டு பிறர் பொருளதனைக்கையாண்டிட

செல்வந்தரின் இடம் நுழைய முயன்று வழிதேடி அலைகின்ற என் மனத்தை

எங்கனம் பொறுத்திடுவேன் உலகோரின் உள்ளம் கவர் கள்ளனே!

என் உடல் உள்ளே ஒளிந்திட்ட மனமதனை உன்வசப்படுத்தி

நிரபராதி என்மேல் கருணை கொள்வாய் உலகாளும் சங்கரனே உமைநாதா!

————————-

The Seeker (Sivananda Lahari Verses 13-19)

These are days of instant results and quick steps. You browse the Word Wide Web. You will find practically innumerable tips & lists of instant dos & dont’s on any subject. Starting from the numeral 1 to 100, there are steps for every numeral and for every subject. For example 8 steps to focus, 4 steps to happiness, top 10 steps to manage ego, 7 steps to pray etc etc. Just type the word Prayer in the Google search, you get 76,30,00,000 results in 0.76 seconds. Amazing load of information.

Speaking about Prayer, the dictionary definition is “A solemn request for help or expression of thanks addressed to God or another deity”. This implies that there is a “Seeker”, there is a “Sought”, a “solemnity” and a “request”. The Seeker is always at a lower pedestal.

But, have we ever stepped back a little and pondered about what our grand parents/parents seek in their day to day activities? There is a lot to learn from them, particularly about the way in which they dedicate each one of their actions (& the results thereof) to God, accepting life as it comes and focusing only on the well being of their children, grand children and dependents. Any happiness/enjoyment that comes to them are simply byproducts of the process and are not the goals. To them life is a prayer and dedication.

In Sivananda Lahari, after advising to declutter one’s mind and focus on the goal of real learning, Adi Sankara turns his attention on to the state of the Seeker and brings out in all earnest the limitations of the individual in the verses given below.

This approach of understanding and describing one’s existing state along with its limitations thereof is the first step in the journey to reach one’s goal. We see manifestations of this approach in all Modern Management theories and success stories.

The inabilities of the Seeker and the desperation in obtaining help is clearly brought out in these verses

————————————————————————–

Verse 13

असारे संसारे निजभजनदूरे जडधिया

भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।

मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-

स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥ १३॥

சாரமற்ற சம்சாரமதில் இறைவனடிசேரா மடமைகொண்டு

மதிகெட்டிருண்ட என்உள்ளமதை உயிர்ப்பிக்கும் பெருந்தகையோனே!

எனயன்றி ஏழை வேருளரோ, இம்மூவுலகில் எனைக்காக்க

உனையன்றி யாருளரோ, உலகாளும் உமைநாதா !

——————————–

Verse 14

प्रभुस्त्वं दीनानां खलु परमबन्धुः पशुपते

प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयोः ।

त्वयैव क्षन्तव्याः शिव मदपराधाश्च सकलाः

प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणिः ॥ १४॥

ஏழையடியோரின் உற்ற உறவன்றோநீ உயிரினத்தலையோனே!

ஏழையில்ஏழையோன் யான், என் சொல்ல நம் உறவுதன்னை

பொருத்தருள்வீர் என் பிழைஅனைத்தும் உறவுக்கடனென்று –

அதுஒன்றே வழியன்றோ நல்உறவுகளின் நடப்பிற்கு பரமசிவனே !

———————————

Verse 15

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥ १५॥

அழுக்காறவாகொள் சிரமுடன் உன்தியானம் கடினமெனக்கண்ட என்மேல்

மெத்தனமில்லையெனில் என்விதிவரையெழுத்தழிக்க முயலவில்லையேன் ?

மாற்றுவது கடினமெனில், அயனவன் மிகுசக்தி சிரம்தனை விரல்நகநுனியால்

எடுத்தனையே சுலபமென, எங்கனம் அது உலகநாயகனே?

———————————-

Verse 16

विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-

श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।

विचारः को वा मां विशद कृपया पाति शिव ते

कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥ १६॥

இப்புவியில் ஊழ்வினைவடிவிதி வரைஅயன் நீடூழி வாழ்க நால்சிரமுடன்

அம்புலிஅணி உமைநாயகனின் கருணையுடன், எனக்கெதற்கு மனக்கவலை!

பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தன்றோ பரந்தமனப்பரமனின் கடைக்கண் – அப்

பார்வை ஒன்றே போதுமே பரம ஏழைகளின் பாலனன் எந்தன் பரமசிவனே!

——————————————————-

Verse 17

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः सम्भ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥ १७॥

நல்வினைப்பயனோ, நாதனின் கருணையோ நானறியேன் நீக்கமற நிறையோனே!

அடியனுக்கு காட்சி கொடுப்பினும் காணவில்லை உன் இருகமலப்பொற்பாதம்

திருவடி வணங்கும் அமரர் கூட்டம் தரி மரகத மாணிக்க வைரமுடிகளின் துலங்கல்

கண்களை கூசவைத்து காட்சி மறைத்தனையோ என் இறையோனே !

——————————————

Verse 18

त्वमेको लोकानां परमफलदो दिव्यपदवीं

वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखाः ।

कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती

कदा वा मद्रक्षां वहसि करुणापूरितदृशा ॥ १८॥

உயிரினங்களின் பிறவிப்பிணிதீர் பெருமருந்து நீயன்றோ சிவனே! உனதருளால்

உயர்ந்திட்ட மாயவனும் தேவரினமும் உனையன்றோ வணங்கிடுவர் உமையோனே!

அளவில்லா உன்பரிவுபோல் அளவற்ற என்அவா அன்றோ, கடைக்கண் பார்வையால்

எப்பொழுது காப்பாயோ ஏழை என்னை இறைவனே!

——————————————

Verse 19

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥ १९॥

வாழ்வெனும் நீர்ச்சுழலில் சிக்கி, ஆசையினால் அல்லல்பட்டு

தீயோரின் வாசல்தொட்டு பிறவிப்பிணி கொண்டு உழல்வோரின்

இடையினிலே வசப்பட்டிருக்குமென் துயர்நீக்கமாட்டாயோ சாம்பனே !

எனைமறந்து பிரமனுக்கு பணிஉதவி புரிந்திட்டேனேன நீ மகிழ்ந்தால்

இப்பிறவியினில் உனைமகிழ்வித்தேனென நானடைவேன் மனநிறைவு

——————————————————————