Knowledge & Devotion (Sivananda Lahari Verse 71 – 75) Continued

Continuing his treatise on Bhakti, Adi Sankara now comes out with some tips to lodge securely one’s intelligence in the mind and issue out with actions that will take one to the ultimate goal of self realisation.

He does this poetically by comparing Bhakti, Mind and Intelligence to Actions, Persons and Manifestations of Nature. Let us enjoy the essence

———————————-

Verse 71

आरूढभक्तिगुणकुञ्चितभावचाप-

युक्तैः शिवस्मरणबाणगणैरमोघैः ।

निर्जित्य किल्बिषरिपून् विजयी सुधीन्द्रः

सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ॥ ७१॥

தூய உயர் அறிவு என்னும் வில் எடுத்து

உறுதி கொள் ஆழ்பக்தியெனும் நாண் ஏற்றி

சிவத்தியானமெனும் குறைவில்லா அம்புகள் தொடுத்து

தீவினைகளெனும் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடி

நிலையான பேரின்பம்தனைப் பெறுவார் மேலான மெய் அறிவாளர்.

————————————–

Verse 72

ध्यानाञ्जनेन समवेक्ष्य तमःप्रदेशं

भित्वा महाबलिभिरीश्वरनाममन्त्रैः ।

दिव्याश्रितं भुजगभूषणमुद्वहन्ति

ये पादपद्ममिह ते शिव ते कृतार्थाः ॥ ७२॥

சிவ தியானமெனும் மையிட்டு நோக்கி மடமையெனும் இருள் தகர்த்து

ஈசன் உந்தன் புகழ்பாடல்தனை பேர் வேள்வியென அற்பணித்து

அமரர் அடிபணியும் அரவணியோனின் அருபொருள் பொற்பாதம்தனை

அண்டியோர் அடைந்தனரே இவ்வாழ்வதனின் நோக்கம்தனை

————————————–

Verse 73

भूदारतामुदवहद्यदपेक्षया श्री-

भूदार एव किमतः सुमते लभस्व ।

केदारमाकलितमुक्तिमहौषधीनां

पादारविन्दभजनं परमेश्वरस्य । ७३॥

நிலமகள் அலைமகள் உடன்வாழ் மாயவன், கேழல் வடிவெடுத்தும் காணா,

உலகம் நாடும் பேரின்பமெனும் முக்தி மூலிகை செழிவிளைநிலமெனும்

மலர் பாதங்கள்தனைப் போற்றிப் பணிந்திடுவாய் நல் மனமே, அதனின்

மேல் வேறு என் உண்டு நீ அடைய, அறிந்திடுவாய் நல் மனமே!

————————————–

Verse 74

आशापाशक्लेशदुर्वासनादि-

भेदोद्युक्तैर्दिव्यगन्धैरमन्दैः ।

आशाशाटीकस्य पादारविन्दं

चेतःपेटीं वासितां मे तनोतु ॥ ७४॥

அவா பிணைக்கும் துயரம் விளை தீவினை எனும் துர்நாற்றம்தனை

அளவிலா தெய்வீக நறுமணம் கொண்டு நீக்கிட முனையும்

நாற்றிசைஉடையணியோனின் பொற்கமலப் பாதம் விளை

எற்றிசை பரவும் வாசனை, என் மனமெனும் உடைப்பெட்டியுள்

உறை அந்நாற்றம் போக்கி நல்வினை நறுமணம் கமழ உதவட்டும்.

———————————–

Verse 75

कल्याणिनां सरसचित्रगतिं सवेगं

सर्वेङ्गितज्ञमनघं ध्रुवलक्षणाढ्यम् ।

चेतस्तुरङ्गमधिरुह्य चर स्मरारे

नेतः समस्तजगतां वृषभाधिरूढ ॥ ७५॥

காமதேவன் வாகையனே உலகெலாம் உணர்ந்தோனே விடைவாகனனே

பொங்கும் மங்களமுடன் பொலிவுடன் நடை போட்டு அதிவிரைவுடனே ஓடும்

குறிப்புணர்அறிதிறனுடன் குறையொன்றுமில்லா சிறப்பியல்புகளுடனான

என் மனம் எனும் பரியதனை மகிழ்வுடன் செலுத்திடுவாய் சிவசங்கரனே

———————————-

Knowledge & Devotion (Sivananda Lahari Verse 66 – 70) Continued

When one talks about Bhakti and Gyana, one can’t miss out the life of Saint Kanakadaasa. His life was inseparable from the Lord. Here is one such incident from his life:

“ One day Kanaka’s guru Vyasarayalu distributed fruits to his disciples and asked them to eat them secretly without being watched by any one. One covered himself under a bed sheet and ate, one climbed up a tree, another hid under the bed and so on. But one disciple came back with the fruit morosely. The Guru was surprised and asked for the reason. He answered ‘Guruji’? Please forgive me. I am a sinner. I disobeyed you. I tried my level best to eat as per your orders, but wherever I went, God was watching me. The Guru was taken aback by his innocent love for the Almighty. He was no other than Kanakadas”.

Saints like Kanakadaasa and several others across India in their respective lives, brought out the essence of Bhakti.

Affectionate mental disposition and the purity of the devotion” is the key in all their Verses. Here is Adi Sankara conveying to the Lord his heartfelt commitment to surrender and seek help.

——————————————————-

Verse 66

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः

यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।

शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं

तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

விளையாட அரங்கென்று நீ படைத்தாய் இவ்வுலகம்

அக்களரி உறை மாந்தர் உன்னாட்ட பொம்மைகள்

யான் ஆடும் ஆட்டம் எல்லாம் உனை மகிழ்விக்க மட்டும்

எனை ஆட்டுவித்து நீ மகிழ்ந்தாய் அது உறுதி ஆதலனிலால்

எனைக் காத்து பொறுப்பது உன் கடன், அன்புடையானே ஆதியே

One of my favourite songs in Carnatic music is written by the great Papanasam Sivan in the Raga Kalyani.

https://youtu.be/jprIqeTSxYw

Similarly the Veena Legend S. Balachander in one of his creations , a Tamil Film called “Bommai” came out with this classic:

https://youtu.be/buQ6KQ0LASw

These songs aptly bring out the essence of this

particular verse.

————————————

Verse 67

बहुविधपरितोषबाष्पपूर-

स्फुटपुलकाङ्कितचारुभोगभूमिम् ।

चिरपदफलकाङ्क्षिसेव्यमानां

परमसदाशिवभावनां प्रपद्ये ॥ ६७॥

பல்விதக்களிப்புடனும், ஆனந்தக்கண்ணீர்மல்கி மயிர்கூச்சரிய வைக்கும்,

பேரின்ப்பயிர் சாகுபடிதறு பூமியெனும், முக்திக்கனி விழை மாந்தர் போற்றும்,

நிலையாக பிணிதீர்க்கும், ஒப்புயர்வற்ற சிவதியானம்தனை சரணடைந்தேன்

————————————

Verse 68

अमितमुदमृतं मुहुर्दुहन्तीं

विमलभवत्पदगोष्ठमावसन्तीम् ।

सदय पशुपते सुपुण्यपाकां

मम परिपालय भक्तिधेनुमेकाम् ॥ ६८॥

அளவிலா ஆனந்த அமிழ்தெனும் பால்தனை மீண்டும் மீண்டும் சுரக்கும்

கலப்பிலா தூயஉன் பாதமெனும் கொட்டிலில் நிலையாக உறையும்

பல பெருநல்வினை புண்ணிய பலன் விளை எந்தன் பக்தியெனும்

கறவைப் பசுதன்னைக் காத்தருள்வாய் கருணாகரனே சங்கரனே

————————————–

Verse 69

जडता पशुता कलङ्किता

कुटिलचरत्वं च नास्ति मयि देव ।

अस्ति यदि राजमौले

भवदाभरणस्य नास्मि किं पात्रम् ॥ ६९॥

ஜடப்பொருளென இசைக்கரைத்த புலித்தோல்

மாயைகொள் மந்தறிவு என கரமுறை மான்

கரை பட்ட நிலை என சிரம் அணி பிறை நிலவு

வளைநெளி கோணல் என, மார் அணி அரவு

இவை அனைத்து குணமிலா எளியோன் யான்

எனை ஏற்கமாட்டாயா உன் அணிகலனென தேவனே!

———————–

Verse 70

अरहसि रहसि स्वतन्त्रबुद्ध्या

वरिवसितुं सुलभः प्रसन्नमूर्तिः ।

अगणितफलदायकः प्रभुर्मे

जगदधिको हृदि राजशेखरोऽस्ति ॥ ७०॥

கடந்தும் உள்ளும் சுதந்திர மனதுடன் வழிபட இசைவான

கருணைக்கடலே கணக்கில்லாஅருள் பொழியோனே

இரேழு உலகம் கடந்தாளும் பிறையணிப் பெம்மானே

நிலையிலா இவ்வுலகில் நீயன்றோ என் இதயம்தனில் எந்நேரமும்

————————

Knowledge & Devotion (Sivananda Lahari Verse 61 – 65)

Remember this cover!

In end August 1970, an LP Gramaphone Record by MS Subbulakshmi with “Bhaja Govindam” on one side and “Vishnu Sahasranamam” on the other side was released. Soon it became part of our family’s LP Record Collections. Not a day passed without listening to these Divine renditions. As a teen, what caught my attention was not these two renditions but the introduction to Bhajagovindam by Sri. C. Rajagopalachari (Rajaji). I was simply bowled over by the crisp voice and the clarity of thoughts (even though I did not understand the content philosophically). Here is what Rajaji said in his introduction:

“Adi Shankara wrote a number of Vedantic works for imparting knowledge of the Self and the Universal Spirit. He also composed a number of hymns to foster bhakti in the hearts of men. One of these hymns is the famous Bhaja Govindam. The way of devotion is not different from the way of knowledge or gnyaana. When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom. When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakti. Knowledge, when it becomes fully mature, is bhakti. If it does not get transformed into bhakti, such knowledge is useless tinsel. To believe that gnyaana and bhakti, knowledge and devotion, are different from each other, is ignorance. If Sri Adi Shankara Himself, who drank the ocean of gyaana as easily as one sips water from the palm of one’s hand, sang in His later years hymns to develop devotion it is enough to show that gnyaanaand bhakti are one and the same. Sri Sankara has packed into the Bhaja Govindam song, the substance of all Vedanta and set the oneness of gnyaana and bhakti to melodious music”.

Never did I realize that nearly 5 decades later, the above talk which simply mesmerized me at that time will come in handy as an introduction to Bhakti, this time for the Verses written by Adi Sankara himself in Sivananda Lahari. Here are the Verses. Here you will see Adi Sankara dwelling in all aspects of Bhakti, Mind, Wisdom and Actions related to the Devotion. These will be presented here and in the rest of the blogs that follows in the subsequent weeks.

——————————————-

Verse 61

अङ्कोलं निजबीजसन्ततिरयस्कान्तोपलं सूचिका

साध्वी नैजविभुं लता क्षितिरुहं सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा पशुपतेः पादारविन्दद्वयं

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा सा भक्तिरित्युच्यते ॥ ६१॥

அங்கோல மரம் சாரும் அழிஞ்சல் விதைகள் போல்

காந்தம் நோக்கி விரையும் இரும்பு ஊசிகள் போல்

கற்புடைப்பெண்டிர் தம் கணவரிடம் சேர்வது போல்

கடலை நோக்கி பெருக்கெடுத்தோடும் நதிகள் போல் – பசுபதியின்

கமலப்பொறபாதங்கள்தனை என்மன எண்ணங்கள் இயல்பென அடைந்து

அல்லலின்றி நிலைத்திட்டால் அந்நிலையன்றோ பக்தி எனப்படும்.

———————————-

Verse 62

आनन्दाश्रुभिरातनोति पुलकं नैर्मल्यतच्छादनं

वाचा शङ्खमुखे स्थितैश्च जठरापूर्तिं चरित्रामृतैः ।

रुद्राक्षैर्भसितेन देव वपुषो रक्षां भवद्भावना-

पर्यङ्के विनिवेश्य भक्तिजननी भक्तार्भकं रक्षति ॥ ६२॥

மயிர்கூச்சரிய ஆனந்தக்கண்ணீரில் நீராட்டி

மாசிலா மன உடைஅணிவித்து வயிறு நிரப்ப

வாக்குச்சங்கதனில் உன்நாமம்உரைமறை அமிழ்து பாலூட்டி

உருத்திராக்கம் சூட்டி வெந்நீறு பூசி மெய் காத்து

சிவத்தியானத் தொட்டிலில் இட்டுக் காத்திடுவாள் பக்திஅன்னை

பக்தன் எனும் மழழைதனை பரமதேவனே!

———————————-

Verse 63

मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३॥

நடந்து தேய்ந்த காலனிகள் உன் சிரசில் கூர்சமென

வாய் உமிழ் நீர் முப்புரமெரியோன் நீராட மங்கள நீரென

எச்சிலிட்டு மீந்த புலால் புலித்தோலான் உனக்குப் படையலென

வனவேடன் ஒருவன் உன் உன்னத பக்தனென, ஆச்சரியமன்றோ!

இவ்வுலகில் எதுஒன்று இயலாது எம்பிரான்மேல் பக்தி இருந்தால்

Bhakta Kannappa

————————

Verse 64

वक्षस्ताडनमन्तकस्य कठिनापस्मारसंमर्दनं

भूभृत्पर्यटनं नमस्सुरशिरःकोटीरसङ्घर्षणम् ।

कर्मेदं मृदुलस्य तावकपदद्वन्द्वस्य गौरीपते

मच्चेतोमणिपादुकाविहरणं शम्भो सदाङ्गीकुरु ॥ ६४॥

காலன் மார் உதைத்து, அறியாமை எனும் அபஸ்மர

அசுரனை மிதித்து, மலைப்பயணமேற்று, அமரர்கூட்டம்

அடிபணி வேளையில் அவர் மகுடகங்கள் உரசிப் புண்படும்

உன் பொன்மலர் பாதமிரண்டின் நோவு தவிர்க்க

என் மனமெனும் மாணிக்க காலணிகள்தனை

அணிந்தருள்வாய் ஆலமுண்டோனே பார்வதி நாயகனே

Apasmura Asura

——————————-

Verse 65

वक्षस्ताडनशङ्कया विचलितो वैवस्वतो निर्जराः

कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कुर्वते ।

दृष्ट्वा मुक्तिवधूस्तनोति निभृताश्लेषं भवानीपते

यच्चेतस्तव पादपद्मभजनं तस्येह किं दुर्लभम् ॥ ६५॥

மார் உதைவிசை தாளா காலனின் ஓட்டமென்ன!

மலர் மொக்கென மிளிர் மாணிக்க மகுட ஒளி கொண்டு

கற்பூர ஆராதனை புரியும் தேவரினக் கூட்டமென்ன!

கட்டித் தழுவும் முக்தியெனும் இளமங்கையின் உறவென்ன!

இறைஉன் பொற்பாதம் போற்றி துதிமனம் உடையோர்க்கு,

இயலாதது ஏதும் உண்டோ பவானி நாதனே!

Markandeya

————————-

Figure of speech for the Figureless (Sivananda Lahari Verse 58 – 60)

American Management Association in its website, brings out this interesting prelude to How to manage the Boss”:

“Realize that you are more dependent on your boss than your boss is on you, because your boss holds the key to your short-term future. You need to take the initiative to set expectations. It’s your responsibility to say when you’re not feeling heard. The good news is that no matter how well or poorly you have managed your boss’s relationship in the past, you can recraft your relationship on every new endeavour . Ideally, you want to create a relationship where talking from the heart is the norm.”

Wonder what has this to do with a “spiritual stuff” that we are dealing with! Adi Sankara is handling a bigger challenge; he needs to manage the only Invisible Boss of the Universe. Heart to heart talk, Creativity, imagination and initiative which are essential in managing the relationship, brings out the poetic expertise of Adi Sankara in the following Verses where he uses extensively metaphors & similes in the communication that emanates from his heart.

Just to refresh “ A metaphor (உருவகம்) is a figure of speech that, for rhetorical effect, directly refers to one thing by mentioning another. It may provide clarity or identify hidden similarities between two ideas. A simile (உவமை) is a figure of speech that directly compares two things”.

Here is Adi Sankara using real life examples and seeking His Divine Intervention

——————————————————-

Verse 58

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं

भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।

वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-

स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

தாமரை நண்பன் ஆதவன், புவி வான் இருளகற்றி ஒளித்திடுவான்; ஆயினும்

பாமரனெனக்கு பலகோடிஆதவன் உள்ளடக்கிய நீ ஒளிகொடுக்கவில்லை இன்னும்,

அய்யகோ என்மன இருள் அத்துனை அடர்த்தியோ உலகாளும் உமையோனே!

மெய்ஞான இருளகற்றி காட்சி கொடுத்தருள் உலகோர்உளம் உறை நாயகனே!

—————————-

Verse 59

हंसः पद्मवनं समिच्छति यथा नीलाम्बुदं चातकः

कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा ।

चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो

गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ॥ ५९॥

தாமரைத்தடாகம் நாடும் அன்னப் பறவை போல

நீர்மழை மேகம் நோக்கும் சுடலைக்குயில் போல

ஆதவன் உதயம் நோக்கும் வாத்து போல

சந்திரனின் வரவு நோக்கும் செம்போத்து போல

நல்லறிவு காட்டும் பாதையிலே, பேரின்ப

நிலை அடைய வழிதனைக் காட்டும் உன்

பொன்மலர் பாதமிரு நோக்க, என் மனம்

அனுதினமும் விழைகிறதே ஆண்டவனே!

—————————-

Verse 60

रोधस्तोयहृतः श्रमेण पथिकश्छायां तरोर्वृष्टितो

भीतः स्वस्थगृहं गृहस्थमतिथिर्दीनः प्रभुं धार्मिकम् ।

दीपं सन्तमसाकुलश्च शिखिनं शीतावृतस्त्वं तथा

चेतः सर्वभयापहं व्रज सुखं शम्भोः पदाम्भोरुहम् ॥ ६०॥

ஊழிவெள்ளம் இழுக்கும் மானிடன் கரை காண விழை போல

வழிப்போக்கன் உடல்தளர்வால் மரநிழல் காண விழை போல

மழைநனை மக்கள் உறைகூரை காண விழை போல

வெளியூர் விருந்தினன் இல்லற உறையோன் காண விழை போல

ஏழ்மையில் வாடும் உள்ளம் செல்வந்தன் காண விழை போல

இருளில் அவதியுற்றோன் எரியும் விளக்கு காண விழை போல

குளிரில் துன்புற்றோன் நெருப்பின் தழல் காண விழை போல

மகிழ்வுடன் பயம் அனைத்தும் தவிர்த்து பேரின்பம் பெற

அருள்மிகு சங்கரனின் பொன்மலர்பாதம் காண விழைவாய் என் மனமே!

—————————–

Chaataka (சுடலைக்குயில்), Chakravaka (வாத்து), Chakora (செம்பொத்து) & Hamsa (அன்னம்) Birds

Prayer (Sivananda Lahari Verse 55-57)

Verse 55

आद्यायामिततेजसे श्रुतिपदैर्वेद्याय साध्याय ते

विद्यानन्दमयात्मने त्रिजगतः संरक्षणोद्योगिने ।

ध्येयायाखिलयोगिभिः सुरगणैर्गेयाय मायाविने

सम्यक्ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५५॥

அந்தமும் ஆதியும் இல்லா அருட்பெருஞ்ஜோதியென,

மாந்தர் அறியும், மறை புகழும், பேரின்ப அறிவு வடிவான,

மூவுலகம் காக்கும், முனிவரினம் துதிக்கும், தேவரினம் போற்றும்,

மாயைதனை உள்ளடக்கும், மின்னார் செஞ்சடைகளுடன்,

ஆனந்த நடனமாடி மகிழும் , பொங்கும் மங்களம் வழங்கும்,

பொன்னார் மேனியனைப் போற்றி வணங்கிடுவேன் யான் என்றும்

—————————————–

Verse 56

नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनीश्रेयसे

सत्यायादिकुटुम्बिने मुनिमनः प्रत्यक्षचिन्मूर्तये ।

मायासृष्टजगत्त्रयाय सकलाम्नायान्तसञ्चारिणे

सायं ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५६॥

முக்குணமாகி, முப்பரம்எரி முதலவனாகி, முன்னவள்உமை தவப்பலனாகி,

உண்மை வடிவாகி, உலகாளும் ஆதிகுடும்பியாகி, முனிகள்தம் உணர்வொளியாகி,

மாயைவழி மூவுலகங்கள் படைத்து, மறைமுடி உபநிடங்கள் உள்ஓடி

மாலைவேலைதனில் சடைமுடிதரித்து ஆனந்த நடனமாடி, பொங்கும்

மங்களம் வழங்கும், சங்கரனைப் போற்றி வணங்கிடுவேன் யான் என்றும்

————————————-

Verse 57

नित्यं स्वोदरपोषणाय सकलानुद्दिश्य वित्ताशया

व्यर्थं पर्यटनं करोमि भवतः सेवां न जाने विभो ।

मज्जन्मान्तरपुण्यपाकबलतस्त्वं शर्व सर्वान्तर-

स्तिष्ठस्येव हि तेन वा पशुपते ते रक्षनीयोऽस्म्यहम् ॥ ५७॥

வயிறுநிரப்ப வழிதேடி, பொருளாசையால் பலர் நாடி, அலைந்து உழன்று

திரிந்து, உன்பணி அறிவிலியானேன், ஏனென்று அறியலேனே உலகோனே!

அடியாரின் பாவங்கள் களைவோனே, முன்நல்வினைப்பயனாலே யான் உனை

உலகோர் உள் உறைவோனென அறிந்தேனே, ஆதலினால் ஆண்டவனே நீ

எனைக் காத்திடும் தகுதியினை அடைந்தேனே உலகோர் உளம்உறை நாயகனே !


This old Tamil Film Song by and large brings out the essence of these three verses.

ஆதியந்தம் இல்லா..!, அரும் ஜோதியே.. ஆண்டவனே எம்மையே. ஆளும் தயாநிதியே..

நீதி முறை நாட்டில்.. நிறைந்தோங்கவே.நீ அருளே..!, புரிவாய்..எம்மானே.

வேதங்கள் காணாத.மலர்ப் பாதனே..அம்மையே.அப்பனே..உண்மையின் உருவமே.

தந்தை தாய் சுற்றம் என்னும். பந்த பாசம் தன்னைத் தந்ததல்லால் இன்பம்..தந்ததுண்டோ.ஐயா..

துன்ப வினை என்ன.செய்விருந்தாலும்..மூடர் என் பிழைத் தன்னைப் பொறுத்தாளுமே..

எந்த ஜென்மம் வருனிம்.ஜெகதீசனே..உன்னைச் சிந்தித்திடும்..வரம் தா பெருமானே..

அன்புச் சிவம் இரண்டும்.ஒன்றல்லவோ..

movie:- Naane Raja (நானே ராஜா) Courtesy: You Tube