Verse 47 (The Spring arrives)
शम्भुध्यानवसन्तसङ्गिनि हृदारामेऽघजीर्णच्छदाः
स्रस्ता भक्तिलताच्छटा विलसिताः पुण्यप्रवालश्रिताः ।
दीप्यन्ते गुणकोरका जपवचःपुष्पाणि सद्वासना
ज्ञानानन्दसुधामरन्दलहरी संवित्फलाभ्युन्नतिः ॥ ४७॥
இதயத்தோட்டமதில் சிவ தியான வசந்தத்தின் வருகை எனவே
முதிர் இலைகளெனும் பாவங்கள் உதிரும், பக்தியெனும் கொடிகள் படரும்,
நல்வினைகள் துளிர் விடும், சீர்பண்பு மொக்குகள் விரிய சிவப்பண்கள் மலரும்,
மெய்ஞானத் தேன் ஓடும் , பேரின்பத்திளை எனும் கனிகள் தாங்கும்
———————————————-
Verse 48 ( Mind – the Kingly Swan – Pl do mind)
नित्यानन्दरसालयं सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयं
स्वच्छं सद्द्विजसेवितं कलुषहृत्सद्वासनाविष्कृतम् ।
शम्भुध्यानसरोवरं व्रज मनो हंसावतंस स्थिरं
किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसञ्जातश्रमं प्राप्स्यसि ॥ ४८॥
பேரின்ப அமிழ்து உறை, தேவமுனிஇதயங்கள் வாழ்,
பாவங்களெனும் மாசு அகற்றும், புண்ணிய மணம் பரப்பும்
ஞானியரெனும் அன்னப்பறவைகள் வெகுநாடும்,
பார்வதி நாயகனின் நீர்நிலைதனை நிலையாக அடையாமல்
சிரியோருக்கு உகந்த சம்சாரஅல்லல் எனும் சேறுநிறை குட்டையிலே
குறியற்ற பயணமேற்று வீணேஉழன்று திரியாதே மனமெனும் ராஐஅன்னமே !
——————————————
Verse 49 ( Devotion – the creeper)
आनन्दामृतपूरिता हरपदाम्भोजालवालोद्यता
स्थैर्योपघ्नमुपेत्य भक्तिलतिका शाखोपशाखान्विता ।
उच्छैर्मानसकायमानपटलीमाक्रम्य निष्कल्मषा
नित्याभीष्टफलप्रदा भवतु मे सत्कर्मसंवर्धिता ॥ ४९॥
பேரின்ப அமிழ்தெனும் நீர் பாய்ச்சி, பேரிறையின் பொற்பாதமலரடியில் முளைத்து,
மனஉறுதிக் கொம்பதனில் சுற்றி, கிளைசிறுகிளைபல அடர்ந்த என்மனப்பந்தலின்
உச்சியிலே, தீவினை தவிர்த்து நல்வினை உதவ நன்கு படர்ந்து, யான்விழையும்
இனியமுக்திக்கனிகளை அனுதினமும் அளித்திடுக பக்தியெனும் படர்கொடியே ! 
————————————————–
Verse 50 (Sankara – the Jasmine Flower)
सन्ध्यारम्भविजृम्भितं श्रुतिशिरस्थानान्तराधिष्ठितं
सप्रेमभ्रमराभिराममसकृत् सद्वासनाशोभितम् ।
भोगीन्द्राभरणं समस्तसुमनःपूज्यं गुणाविष्कृतं
सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गं शिवालिङ्गितं ॥ ५०॥
மாலையில் மலர்ந்து செவி சிரம் சேர்ந்து இனித்தேனீக்கள் நாட
உலகவாஞ்சையுடையோர் நுகர மங்களகரமான நறுமணம் பரப்ப
அழகுமலையின் மருதமரம் தழுவி படரும் மல்லிகை மலர் கொண்டு
மாலையில் தாண்டவமாடி மறைசிரமெனும் உபநிடத்தில் உறையும்
நல்வினையர் நினைவால் ஒளிவிடும் அம்பிகையொரு அழகன்
எளியோரின் பக்தி மணம் கமழும் அரவு அணியோன் நற்குணவடிவோன்
தேவர்கள் போற்றும் தவசீலன் உமைதழுவும் உலகாண்டோன்
நல்லமலை உறை மல்லிகார்ஜுன மகாலிங்கம்தனை சேவிப்பேன் யான்
—————————————-
Verse 51 (Sankara – The Bee)
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्र्गाही स्फुरन्माधवा-
ह्लादो नादयुतो महासितवपुः पञ्चेषुणा चादृतः ।
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनो-
राजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१॥
பெண் தும்பிக்கிசைந்தாடி, சொரியும் வேழமதம் அருந்தி
வசந்தத்தில் மகிழ்ந்தாடி, கண்கவர ரீங்காரமிட்டடு
மலர்நிறை மலை விழை, எங்கும் பறந்துதிரியும் கருந்தேனீ ஒப்ப
பிரிங்கிமுனிவிழையேற்று நடனமாடி, வேழஅசுரனை வதைத்து,
மாயனின் வடிவான மோகமதை விரும்பி, ஓம்கார நாதனாய்,
மன்மதன் உன்அழகு ஒப்ப, நல்லோர்இனம் காக்கும் நாயகனாய்
நீக்கமற நிறைந்து ஶ்ரீசைலமலைவாழ் பிரமராம்பிகைபதியோன்
என்கண்எதிரில் காட்சிதந்து தாமரையெனும் எனமனதில் விளையாடட்டும்
——————————————
Verse 52 ( Sankara – the rain cloud)
कारुण्यामृतवर्षिणं घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं
विद्यासस्यफलोदयाय सुमनःसंसेव्यमिच्छाकृतिम् ।
नृत्यद्भक्तमयूरमद्रिनिलयं चञ्चज्जटामण्डलं
शम्भो वाञ्छति नीलकन्धर सदा त्वां मे मनश्चातकः॥ ५२॥
அமழ்தெனும் நீர் பொழி, வறட்சிவிளை பெருந்துயர்தணி,
அன்னப்பயிர் செழி,மகிழ் மயில்கள் நடனம் விளை
உலகோர் போற்றும், எவ்வடிவம் ஏற்கும், மின்னலுடன் இடிக்கும்
மலைவாசம் மிகு நீல வண்ண மேகமென
கருணை மழை பொழி, கடுங்கோடை வெயில்எனும் துயர்தணி,
அறிவுப் பயிர்செழி, நல்மனம் போற்றும், மயில் நடனமாடும் அடியார்நிறை,
எவ்வடிவம் ஏற்கும் மின்னார் செஞ்சடையோன் நீலமிடறு மலைவாசன் மேல்
மழை வரவு அறிவிச் சுடலைக்குயிலெனும் என்மனம், நிலவுலாவிய
நீர்மலி வேணியன் உனை விழைகின்றதே உமையோனே, சங்கரனே!
————————————————
Verse 53 ( Sankara – the Peacock)
आकाशेन शिखी समस्तफणिनां नेत्रा कलापी नता-
ऽनुग्राहिप्रणवोपदेशनिनदैः केकीति यो गीयते ।
श्यामां शैलसमुद्भवां घनरुचिं दृष्ट्वा नटन्तं मुदा
वेदान्तोपवने विहाररसिकं तं नीलकण्ठं भजे ॥ ५३॥
செஞ்சடையில் வான் மயிற்கொண்டையென, மயில் பகை அரவரசனை பூண் என
அணிந்து, அடியாருக்கருள் புரிந்து, மயில் அகவும் கேகியென ஓம்காரமுரைத்து
மேகஎழில் மலைமகள் கண்டு மழைமுகில் கண்ட மயிலென ஆனந்த நடனமாடி
வேதாந்த நந்தவனம்தனில் விழைந்து விளையாடும் நீலமிடறு நாயகனெனும்
வண்ண மயிலதனை நான் வணங்குகின்றேன்
———————————————————–
Verse 54 (Sankara – the Peacock)
सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक-
ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला ।
भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा
यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४॥
கோடைமுடியும் வேளையிலே, இளமாலைப்பொழுதினிலே,
மாயவனின் கரம் எழுப்பும் மிருதங்க ஒலி இடியெனமுழங்க,
தேவரினவிழிகள் மின்னலென ஒளிக்க, அடியாரின் மனமுருகிவிளை
ஆனந்தக்கண்ணீர் மழையெனப் பொழிய, பெண் மயிலெனும
அன்னை உமையவள் முன்நின்று ஆனந்த நடனமாடிக் களிக்கும்
ஆண் மயிலெனும் நீல்கழுத்துடை பரமசிவனைத் துதிக்கின்றேன் யான் !
————————————-