
Today is the remembrance day of the legendary nightingale of music, Smt.MS Subbulakshmi. Here is my tribute in Tamil
இசை என்றால், திசை தெரிக்க ஓடுவேன்
இசை என்றால், வீசை விலை என்ன எனக் கேட்பேன் – இன்றோ
இசை இல்லை என்றால், மிசை இறங்க வில்லை
இசை என்றால் இனிமைமிகு வாழ்வு என்றேன்
இதற்கு எல்லாம் முதற்கன் நன்றி எம்எஸ் அவர்க்கே
எதற்கு என்று கேளாமல் என் காதில் விழுந்த சுப்ரபாதம்
காரணம் கேட்டு வாடி சகியே என காதில் உரைத்து
கண்டதுண்டோ கண்ணன் போல் என கவிபாடி
பெற்ற தாய்தனை மக மறந்தாலும் உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்
நற்றவத்தவர் உள் ஓங்கும் நமச்சிவாயத்தை மறவாதே என
நாம் வாழ நயமிகு வழிகள்தனை திருவாயால் அளித்த
நாராயனனின் நல்லாசி பெற்ற நமது இசை அன்னை எம்எஸ்க்கு
இசையில், இல்லாத என்று ஒன்றில்லை எல்லாமே நீ என கூறி
திசை எங்கும் உறையும் திருமாலின் நீ உரைத்த சகஸ்ரநாமம்தனை
தினம் உரைக்கும் யான் இன்று, மனம் நெகிழ்ந்து அளித்தேன்
உனக்கு காணிக்கையாய், ஏற்றிடுவாய் என் இசை அன்னையே
Excellent . Continue Your spiritual journey