Continuing his treatise on Bhakti, Adi Sankara now comes out with some tips to lodge securely one’s intelligence in the mind and issue out with actions that will take one to the ultimate goal of self realisation.
He does this poetically by comparing Bhakti, Mind and Intelligence to Actions, Persons and Manifestations of Nature. Let us enjoy the essence
———————————-
Verse 71
आरूढभक्तिगुणकुञ्चितभावचाप-
युक्तैः शिवस्मरणबाणगणैरमोघैः ।
निर्जित्य किल्बिषरिपून् विजयी सुधीन्द्रः
सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ॥ ७१॥
தூய உயர் அறிவு என்னும் வில் எடுத்து
உறுதி கொள் ஆழ்பக்தியெனும் நாண் ஏற்றி
சிவத்தியானமெனும் குறைவில்லா அம்புகள் தொடுத்து
தீவினைகளெனும் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடி
நிலையான பேரின்பம்தனைப் பெறுவார் மேலான மெய் அறிவாளர்.
————————————–
Verse 72
ध्यानाञ्जनेन समवेक्ष्य तमःप्रदेशं
भित्वा महाबलिभिरीश्वरनाममन्त्रैः ।
दिव्याश्रितं भुजगभूषणमुद्वहन्ति
ये पादपद्ममिह ते शिव ते कृतार्थाः ॥ ७२॥
சிவ தியானமெனும் மையிட்டு நோக்கி மடமையெனும் இருள் தகர்த்து
ஈசன் உந்தன் புகழ்பாடல்தனை பேர் வேள்வியென அற்பணித்து
அமரர் அடிபணியும் அரவணியோனின் அருபொருள் பொற்பாதம்தனை
அண்டியோர் அடைந்தனரே இவ்வாழ்வதனின் நோக்கம்தனை
————————————–
Verse 73
भूदारतामुदवहद्यदपेक्षया श्री-
भूदार एव किमतः सुमते लभस्व ।
केदारमाकलितमुक्तिमहौषधीनां
पादारविन्दभजनं परमेश्वरस्य । ७३॥
நிலமகள் அலைமகள் உடன்வாழ் மாயவன், கேழல் வடிவெடுத்தும் காணா,
உலகம் நாடும் பேரின்பமெனும் முக்தி மூலிகை செழிவிளைநிலமெனும்
மலர் பாதங்கள்தனைப் போற்றிப் பணிந்திடுவாய் நல் மனமே, அதனின்
மேல் வேறு என் உண்டு நீ அடைய, அறிந்திடுவாய் நல் மனமே!
————————————–
Verse 74
आशापाशक्लेशदुर्वासनादि-
भेदोद्युक्तैर्दिव्यगन्धैरमन्दैः ।
आशाशाटीकस्य पादारविन्दं
चेतःपेटीं वासितां मे तनोतु ॥ ७४॥
அவா பிணைக்கும் துயரம் விளை தீவினை எனும் துர்நாற்றம்தனை
அளவிலா தெய்வீக நறுமணம் கொண்டு நீக்கிட முனையும்
நாற்றிசைஉடையணியோனின் பொற்கமலப் பாதம் விளை
எற்றிசை பரவும் வாசனை, என் மனமெனும் உடைப்பெட்டியுள்
உறை அந்நாற்றம் போக்கி நல்வினை நறுமணம் கமழ உதவட்டும்.
———————————–
Verse 75
कल्याणिनां सरसचित्रगतिं सवेगं
सर्वेङ्गितज्ञमनघं ध्रुवलक्षणाढ्यम् ।
चेतस्तुरङ्गमधिरुह्य चर स्मरारे
नेतः समस्तजगतां वृषभाधिरूढ ॥ ७५॥
காமதேவன் வாகையனே உலகெலாம் உணர்ந்தோனே விடைவாகனனே
பொங்கும் மங்களமுடன் பொலிவுடன் நடை போட்டு அதிவிரைவுடனே ஓடும்
குறிப்புணர்அறிதிறனுடன் குறையொன்றுமில்லா சிறப்பியல்புகளுடனான
என் மனம் எனும் பரியதனை மகிழ்வுடன் செலுத்திடுவாய் சிவசங்கரனே
———————————-