Knowledge & Devotion (Sivananda Lahari Verse 76 – 80) Continued

Verse 76

भक्तिर्महेशपदपुष्करमावसन्ती

कादम्बिनीव कुरुते परितोषवर्षम् ।

सम्पूरितो भवति यस्य मनस्त्तटाक-

स्तज्जन्मसस्यमखिलं सफलं च नाऽन्यत् ॥ ७६॥

உன் பொற்பாதமெனும் வான் உறை பக்தியெனும் முகில்கூடல்

என் மனமெனும் நீர்தடாகம் நிறைந்திட மழை மாரிப்பொழிய

என் பிறவிப் பயனெனும் பயிர் செழித்து பலன் அனைத்தும் பெரும்,

பிற வேறெதுவும் பலனளிக்க இயலாது அந்தமில்லாஅரியனே !

——————————————————

Verse 77

बुद्धिःस्थिरा भवितुमीश्वरपादपद्म-

सक्ता वधूर्विरहिणीव सदा स्मरन्ती ।

सद्भावनास्मरणदर्शनकीर्तनादि

संमोहितेव शिवमन्त्रजपेन विन्ते ॥ ७७॥

நினைவால் வாடி, அடைவிளை சுகம் எண்ணி, அவன் துதிபாடி

மனக்கண் காட்சி நோக்கி உளம் ஏங்கிப் பதற்றம் கொள்ளும்

மனாளனைப் பிரிந்த புதுமணப்பெண் போல், எப்பொழுதும் என்

மன்னன் உன் பொன்மலர்பாதம் பற்றிட்டு நிலைத்திட விழையும்

மனம் கவலை கொள்கின்றதே! காத்தருள்வாய் கருணாகரனே!

———————————————

Verse 78

सदुपचारविधिष्वनुबोधितां

सविनयां सहृदयं सदुपाश्रिताम् ।

मम समुद्धर बुद्धिमिमां प्रभो

वरगुणेन नवोढवधूमिव ॥ ७८॥

திருமணம்புரி மகளிடம் மணமகன் நற்குணம் உரைத்து நம்பிக்கை ஊட்டும்

செயல் போல், அறிவு, விருந்தோம்பல், பணிவு, நற்பணி இவைதனில் நாட்டி

பிறவிப் பெருந்துயர் உழல் என் நல்மனம்தனை மீட்டிடு கைலைநாதனே

For some of us (the old timers ? ), this Verse will take us back to that 1958 Tamil Film Song from the Film “பானை பிடித்தவள் பாக்கியசாலி). Enjoy the song and relate it to this Verse in your own way

https://youtu.be/fTV-QwKEsdM

——————————————

Verse 79

नित्यं योगिमनः सरोजदलसञ्चारक्षमस्त्वत्क्रमः

शम्भो तेन कथं कठोरयमराड्वक्षःकवाटक्षतिः ।

अत्यन्तं मृदुलं त्वदङ्घ्रियुगलं हा मे मनश्चिन्तय-

त्येतल्लोचनगोचरं कुरु विभो हस्तेन संवाहये ॥ ७९॥

ஆம்பல் இதழ்களொப்ப முனிமனம்தனில் பதியும் உன் பொற்பாதங்கள் கொண்டு

ஆற்றல்மிகு காலனின் திடமிகு புகுமுகமெனும் மார்தனை எட்டி உதைத்தனையோ!

அந்தகோ! உன் மென்மலர்பாதங்கள் எண்ணி என்மனம் கவலை கொண்டதன்றோ!

எங்கும் நிறையோனே காட்சி கொடுத்திடு அப்பாதமிரண்டையும் என் கண்களுக்கே

என்கைகளிரண்டால் வருடி வலிஅகற்றி வணங்குகிறேன் வேதநாயகனே விமலனே!

———————————————————-

Verse 80

एष्यत्येष जनिं मनोऽस्य कठिनं तस्मिन्नटानीति म-

द्रक्षायै गिरिसीम्नि कोमलपदन्यासः पुराभ्यासितः ।

नोचेद्दिव्यगृहान्तरेषु सुमनस्तल्पेषु वेद्यादिषु

प्रायः सत्सु शिलातलेषु नटनं शम्भो किमर्थं तव ॥ ८०॥

இவன் பிறப்பான் கடினமனமுடன், காத்தருள ஆடிடுவேன் அவன் மனதில் என

இவ்வெளியோன் எனைக்காத்திட, மேறு மலைதனில் நடைபயின்றனையோ

மென்மைமிகு உன் பொற் பாதம் இருகொண்டு, நடராசனே! இல்லையெனில்

பூமென்மஞ்சங்கள் தெய்வீக இல்லங்கள் வசதிநிறை உறைவிடங்கள் தவிர்த்து

கற்பாறை நிறை மேறுமலைதனதனில் உன் சிவதாண்டவம் எதற்கோ ஆண்டவனே!

———————————–

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s