Knowledge & Devotion (Sivananda Lahari Verse 81 – 85) Continued

 

Verse 81

In this verse, Adi Sankara brings out the various types of Bhakti.

 

कञ्चित्कालमुमामहेश भवतः पादारविन्दार्चनैः

कञ्चिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कञ्चित्कथाकर्णनैः ।

कञ्चित् कञ्चिदवेक्षनैश्च नुतिभिः कञ्चिद्दशामीदृशीं

यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन् स मुक्तः खलु ॥ ८१॥

 

சில காலம் உன் மலர் பாதம் தொழுதிடவும்

சில நேரம் உன் உள்கலந்து தவம் புரியவும்

சில நேரம் உன் நாமம் கேட்டு உரைக்கவும்

சில நேரம் உன்துதிபுகழ் பாடி மகிழவும்

எந்நேரமும் தன மனம்தனை உன்னிடம் தரும்

எவரொருவர் இந்நிலை அடைவாரோ –

அவரேஇவ்உயிர் நிகழ்காலம்தனிலேயே பேரின்ப நிலை பெற்றவரே!

 

——————————————————-

 

Verse 82

 

बाणत्वं वृषभत्वमर्धवपुषा भार्यात्वमार्यापते

घोणित्वं सखिता मृदङ्गवहता चेत्यादि रूपं दधौ ।

त्वत्पादे नयनार्पणं च कृतवान् त्वद्देहभागो हरिः

पूज्यात्पूज्यतरः स एव हि न चेत् को वा तदान्योऽधिकः ॥ ८२॥

 

அம்பெனவும் விடையெனவும், அமிழ்து படை மோகினி எனவும்

அம்புலியான் அரைஉடல் சேர்ந்து, அவனைக்காண கேழல் வடிவெடுத்து

அனந்த நடன இசைமத்தளமாடி அவன் பதம்தனில் விழி பணித்திட்டு

அளவிலா வடிவெடுத்த அரங்கநாதன் ஒருவனே உகன்றவன் துதித்திட,

உளர் இலரே வேறெவரும் உயர்ந்திட்டு உமையொரு பாகனே பார்வதி நாதனே !

 

———————————————–

 

Verse 83

 

जननमृतियुतानां सेवया देवतानां

न भवति सुखलेशः संशयो नास्ति तत्र ।

अजनिममृतरूपं साम्बमीशं भजन्ते

य इह परमसौख्यं ते हि धन्या लभन्ते ॥ ८३॥

 

பிறப்பு இறப்புக்கு ஈடாகி அழியும் தேவர்களை தொழுது மகிழ்வில்லை

உரைத்திட்டேன் ஐயமின்றி உறுதியுடன், அழிவிலா ஆடற்கரசனை

பிறப்பு இறப்பில்லா அம்மைஅப்பனை துதித்து இப்பிறப்பில் எய்திடுவாய்

பிறவிப்பயன்தனை, பெற்றிடுவாய் பேரின்ப நிலைதன்னை மகிழ்வுடனே !

 

——————————————-

 

Verse 84

 

शिव तव परिचर्यासन्निधानाय गौर्या

भव मम गुणधुर्यां बुद्धिकन्यां प्रदास्ये ।

सकलभुवनबन्धो सच्चिदानन्दसिन्धो

सदय हृदयगेहे सर्वदा संवस त्वम् ॥ ८४॥

 

உலகாளும் உமையோனே உலகோர்க்கு உறவோனே

பேரின்ப கடலோனே கருணையின் உறைவிடமே

நற்குணமுடை என் உள்ளறிவெனும் கன்னி அவளை

பணிவிடை புரிய அளித்திட்டேன் ஏற்றருள் புரிந்து

வாழ்ந்திடுவாய் என் மனமெனும் வீடுதனில் பார்வதி நாயகனே!

 

——————————————————

 

Verse 85

 

जलधिमथनदक्षो नैव पातालभेदी

न च वनमृगयायां नैव लुब्धः प्रवीणः ।

अशनकुसुमभूषावस्त्रमुख्यां सपर्यां

कथय कथमहं ते कल्पयानीन्दुमौले ॥ ८५॥

 

பெருங் கடலைக் கடையும் தேர்ச்சியில்லா

புவி ஆழ்தோண்டி பாதாளம் செல்ல இயலா

வனவிலங்குதனை வேட்டையாடும் திறனிலா

அடியேன், அன்னம் ஆபரணம் ஆடைகள் மலர்கள்

எவ்விதம் அளிப்பேன் உனக்கு ஏகாம்பரநாதனே!

 

—————————————-