Verse 86
पूजाद्रव्यसमृद्धयो विरचिताः पूजां कथं कुर्महे
पक्षित्वं न च वा किटित्वमपि न प्राप्तं मया दुर्लभम् ।
जाने मस्तकमङ्घ्रिपल्लवमुमाजाने न तेऽहं विभो
न ज्ञातं हि पितामहेन हरिणा तत्त्वेन तद्रूपिणा ॥ ८६॥
பூசைப்பொருட்கள் அனைத்திருந்தும் நினைத்துதிப்பது எங்கனம்?
அன்னப்பறவை அல்லது கேழம் எனவடிவெடுக்க இயல் எங்கனம்?
ஆதலினால் அடியேன் உன் அடிமுடி காண்பது ஆகுமோ எங்கனம் ?
அயனும் மாயவனும் அவ்விரு வடிவெடுத்தும் காண இயலவில்லையே உமையோனே!
When I wrote my Tamil interpretations of this verse, I recollected the famous song in Bowli Ragam by the legendary MS Amma. Listen to the lyrics
——————————————–
Verse 87
Asanam garalam phani kalaapo,
Vasanam charma cha vaahanam Mahokshaha,
Mama daasyasi kim kimasthi shambho,
Thava paadambhuja bhakthimeva dehi.
உணவோ நஞ்சு, அணிகலனோ அரவு, உடையோ தோல், ஊர்தியோ பீடுவிடை
என்ன கொடுப்பாய் நீ எனக்கு என்ன உண்டு உன்னிடம் இவைதவிர்த்து
உன்னடி பணிய தந்தருள் உன் பொற்கமலப்பாதங்கள் மட்டும் சதாசிவனே !
This is a classic verse in “Vyajas Stuthi” – vyājastutiḥ (व्याजस्तुतिः) (வஞ்சப்புகழ்ச்சி அணி). Here is another one from Kavi Kaalamegam:
கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர் – சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன்.
இப்பாடலில், திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டாக்கிய நஞ்சினைச் சிவபெருமான் உண்டு தேவர்களைக் காத்ததனை காளமேகப் புலவர் சிறிது மாற்றி, ஒருவன் கல்லால் அடித்ததற்காகவும், இன்னொருவன் காலால் உதைத்ததற்காகவும், வேறொருவன் வில்லால் அடித்ததற்காகவும் வெட்கமடைந்து உயிர்வாழ விரும்பாமல் நஞ்சை உண்டார் எனப் பழிப்பதுபோல் சிவபெருமானைப் புகழ்ந்துள்ளார்.
———————————————-
Verse 88
यदा कृताम्भोनिधिसेतुबन्धनः
करस्थलाधःकृतपर्वताधिपः ।
भवानि ते लङ्घितपद्मसम्भवः
तदा शिवार्चास्तवभावनक्षमः ॥ ८८॥
கடல்தாண்ட கற்பாலம் கட்டமைக்க கோசலைமகனோ யான்
மேருதனை உள்ளங்கைஉள்அமுக்கி வென்றிட குருமுனியோ யான்
மேருஏழுதனில்உறை பெருமாளின் நாபிக்கமலம் உதி அயனோ யான்
அம்முவர் திறன் என்றடைவேனோ யான் அன்று அடைந்திடுவேன் உன்
நாம் போற்றி உன் புகழ் பாடி உனைத்துதிக்கும் தகுதி உமையானே !
———————————————-
Verse 89
In this Verse, Adi Sankara refers to the conflict between Arjuna and Siva prior to the grant of “Paasupadhaastra” by the Lord to Arjuna.
नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-
विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।
धनुषा मुसलेन चाश्मभिर्वा
वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥
பார்த்திபன் வில் உலக்கை கல் அடிதனை களிப்புடனே ஏற்கும் விதம்போல்-உன்
பாதம்பணிந்து பாமாலைபாடி நியமம்நிறைபூசித்து புரி துதிதனை மகிழ்வதில்லை நீ
என்னவென்று உரைத்திடுவாய் உன் விருப்பம், புரிந்திடுவேன் பரிவுடன் அனுதினமும்
———————————————–
Verse 90
वचसा चरितं वदामि शम्भो-
रहमुद्योगविधासु तेऽप्रसक्तः ।
मनसा कृतिमीश्वरस्य सेवे
शिरसा चैव सदाशिवं नमामि ॥ ९०॥
உயர் யோகமுறை அறியேன் உலகோனே
உன் புகழ் பாடி, சிரம் தாழ்த்தி உனை வணங்கி
என்மனத்தால் உனைத் தொழுவேன் சதாசிவனே
When Adi Sankara writes about उद्योग विधासु – in the higher form of yoga ( 8 forms of yoga – Yama, Niyama, aasana, pranaayaama, pratyaahaara, dhaarana, dhyaana, samaadhi). Here is a sketch which outlines the eight levels of yoga.
—————————————————-