Verse 96
धैर्याङ्कुशेन निभृतं
रभसादाकृष्य भक्तिशृङ्खलया ।
पुरहर चरणालाने
हृदयमदेभं बधान चिद्यन्त्रैः ॥ ९६॥
துணிவெனும் அங்குசம் கொண்டு மதமிகு என் மனயானைதனை அடக்கி
பக்தியெனும் சங்கிலி கொண்டு விரைவிலே உன் பாதமெனும் தூணில் பிணைத்து
புத்தியெனும் கால்விலங்குதனைப் பூட்டிடுவாய் முப்புரம் எரி முதல்வோனே
——————————-
Verse 97
प्रचरत्यभितः प्रगल्भवृत्त्या
मदवानेष मनः करी गरीयान् ।
परिगृह्य नयेन भक्तिरज्ज्वा
परम स्थाणुपदं दृढं नयामुम् ॥ ९७॥
மனமெனும் மதமிகு பெருவேழம் அலைகிறதே அங்கெங்கும் கட்டில்லா!
பக்தியெனும் முறுவடம் கொண்டு நயமுடன் கட்டிட்டு உன் கைக்கொண்டு
உறுதியான பேரின்ப நிலையிடம் சேர்க்க முன்னிட்டு நடத்திடுவாய் பரமனே!
———————————-
Verse 98
सर्वालङ्कारयुक्तां सरलपदयुतां साधुवृत्तां सुवर्णां
सद्भिःसंस्तूयमानां सरसगुणयुतां लक्षितां लक्षणाढ्याम् ।
उद्यद्भूषाविशेषामुपगतविनयां द्योतमानार्थरेखां
कल्याणीं देव गौरीप्रिय मम कविताकन्यकां त्वं गृहाण ॥ ९८॥
உயரிய பட்டாடையுடன் ஒப்பனைகலந்து வசீகர நடைகொண்டு
உலகோர் போற்றும் நற்குணமுடன் பொன்மேனி எழில்கொண்டு
புலவர்கள் புகழும் நல்லியல்புடன் மங்கையர்கரசி வடிவு கொண்டு
ஒளிப்பொலிவுடன் அணிகலன்கள் பல பூண்டு நற்பணிவு கொண்டு
மங்கள வடிவுடன் செல்வவளம் உரையும் கைவரை குறி கொண்டு
மணமகள் ஒப்ப என் இக்கன்னியெனும்
உவமான உவமேயமுடன் நல்லிணக்கச் சொற்கள் பல கொண்டு
வரிவடிவ ஒலிக்குறியுடன் எழுத்துக்கோர்வைகள் பல கொண்டு
அறிந்தோர் புகழும் நற்குணமுடன் பக்திமணம் கமழக் குறிகொண்டு
கவிஏற்புடைய வடிவுடன் மனம்கவரும் சொற்தொடர்கள் கொண்டு
கவிஉரை பணிவுடன் விளங்கிடும் வரித்தொடர்கள் பல கொண்டு
மென்மையான இனிமையுடன் உரைப்போற்கு மங்களம் வழங்கும்
சிவப்பேரின்ப அலையெனும் இக்கவிதைதனை ஏற்றருள்வாய் இறைவா!
———————————-
Verse 99
इदं ते युक्तं वा परमशिव कारुण्यजलधे
गतौ तिर्यग्रूपं तव पदशिरोदर्शनधिया ।
हरिब्रह्माणौ तौ दिवि भुवि चरन्तौ श्रमयुतौ
कथं शम्भो स्वामिन् कथय मम वेद्योऽसि पुरतः ॥ ९९॥
அன்னமென்றும் கேழலென்றும் வடிவெடுத்து கீழ்வானுலகம் தேடி
இயலாதயர்ந்த அயன்மாயவனுக்கு அடிமுடி காட்டா உமையோனே
எளியவன் என்முன்னே எளிதாக காட்சி கொடுப்பது எவ்விதம் ?
தகுமோ உன் இச்செயல் உரைத்திடு உலகோர் உறையோனே
——————————————
Verse 100
स्तोत्रेणालमहं प्रवच्मि न मृषा देवा विरिञ्चादय्ः
स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः ।
माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-
द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शम्भो भवत्सेवकाः ॥ १००॥
நான்முகனும் நாராயணனும் நல்லோரும் தேவரினமும்
ஆய்வரங்கமதில் தலையிடம் தருக்கித்த வேளையிலே
தான் தரும் முதலிடம் உனக்கன்றோ உமையோனே !
உம் பக்தர்குழாம் கருணை முன்னவன் யாரென அரிகையிலே
உமியென அனைத்துதேவரும் உதிர்ந்தனரே உன்முன்னால்
போதுமென்று ஆதலினால் நிறுத்திட்டேன் என் கவிதனை
பொய் ஒன்றும் உரையவில்லை உலகோர்க்கு முதலோனே !
——————————