Carnatic Musing 12 – The Dance of the Yuga – Part 2 – Vision through aural route – Taam theem Tarana Thaam (Blog 2) -Oothukadu Venkata Kavi

Audio Link

1. https://www.dropbox.com/s/qzm6d2566jfj1pu/kalinga%20narthana%20thillana%20-%20gambheeranata%20-%20adi%20_%20oothukadu%20venkata%20kavi-B1nLcN-SQdQ.mp3?dl=0

Video Link

Tamil Meaning

பல்லவி

தாம் தீம் தரன தாம் தின தகிட

அனுபல்லவி

தாம் தீம் தரன தாம்

தித் தகிட த்ருகுதகிட த்ருகுதகிட ததிங்கினத

தாம் தீம் தரன தாம்

யமுனை ஆற்றிலே கமலபாதமிட்டு

தாகிட தாகிட

தாமரை இதழ்விழியன் வீரம் உலகு மகிழ

ஆடினான் தாம் தீம் தரன தாம்

சரணம்

1

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

உயர் அலைகள்மிகு யமுனை ஆற்றிலே

கமலமலர்ப் பாதமிட்டு மதமிகு நாகசிரமதனில்

இருபாதமிட்டு தேனினிய குழலோசையுடன்

மகிழ்வுடனே ஆடினான்

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

சூழ் ஆயர்குலம்,மகிழ்வுடனே மனம்குளிர்

களிப்புடனே பணிய, கருணைமிகு

கண்ணன் ஆடினான் நடனம்

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

நிலைமகிழ் முகமுடை குழலோனின்

ஒளிமிகு இருபாதம் பேரலையுடன்

மனம்குளிரும் தேனமுத கீதமுடன்

கார்முகில் வண்ணன் ஆயர்பாடி நாயகன்

அழகுவதனமுடன் வெகு நளினமாக

மகுடமென நீலமயில் இறகு அணிந்து

ஆடினான் காளிங்க நர்த்தனம்

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

2

தாமித தஜ்ஐம் தக தஜ்ஐம் தகதிக தஜ்ஐம் தாம்

மனம்கவர் எழில் நீலவண்ணன்

ஆர்ப்பரித்தாடும் அரவுமேல்

ஆம்பல் இதழுக்கும் மென்பாதமிட்டு

கிளர்ந்தெழு அலைகள் அருகே

சாரலென நீர்த்துளிகள் உடல் மேவ

தாம் தக தய் தக ததிமிது தய்ய தக்க

தாகிட நகஜக த்ருகுஜக நம் தம்

தகநக நகஜக த்ருகுஜக நம் தம்

தாகிட நகஜக த்ருகுஜக நம் தம்

தகநக நகஜக த்ருகுஜக நம் தம்

பேரலைநிறை யமுனை ஆற்றிலே,

தெளிநிலவொளி நனை கவின்மிகு அங்கம்,

அங்கிங்கு ஓடும் கருணைக்கடைக்கண்

பெருமுனி கமலஇதயம் அமர் தேனி என

தினத தில்லான தினத தில்லான தினத தில்லான த்ருகு தகித தில்லான

குங்கும்ப்பொட்டு நெற்றி சுருண்ட குழல் நிறை சிரம்

கம்பீர நிறைமதி முகம் நாகமகுடமதில் நடன சஞ்சாரம்

நந்தகுமாரன் தயிர் வெண்ணெய்த்திருடன்

கோமேதக மணிமாலை அணி பிரமன் பணியும் தீரன்

நந்தகுமரன் தயிர் வெண்ணெய்த்திருடன்

கோமேதக மணிமாலை அணி பிரமன் பணியும் தீரன்

ஆயர்பாடியருக்கு பேரானந்தம் அளிக்கும் ஆதவன்

காளிங்க நடனமாடி பேரின்பம் அடையும் வீரன்

கருணைமனநிலை காட்டும் அருள் வடிவம்

நந்தகுமரனே வெற்றிமீது வெற்றி கிட்டட்டும்

தீம் த தாம் தீம் தாம் தய்

தீம் தாம் தீம் தாம் தய்

தீம் த தாம் தீம் தாம் தய்

திமி ததிமி தகிட ஜனு

ஜுகுநகு நந்தரி தகுநகு நந்தரி

திமித தாகு திமி ததிமி தகிட ஜனு

ஜுகுநகு நந்தரி தகுநகு நந்தரி

திமித தாகு திமி ததிமி தகிட ஜனு

ஜுகுநகு நந்தரி தகுநகு நந்தரி

திமித தாகு திமி ததிமி தகிட ஜனு

மேன்மைமிகு மதிவளம் வனமாலை அணி தேகம்

ஆயர்பாடியின் குமரனே கரணமும் காரணமும்

ஜம் தக ஜம் தக நம் குர்ரம்

ஜம் தக ஜம் தக நம் குர்ரம்

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

அற்புத நடனம் முத்திரை காட்டி

மின்னலென அசைவுடன் அற்புதம் அற்புதம்

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

அரக்கி திதிமகவழித்த பிரமன்பணி வடிவு

அதிசய நீலனின் சுறுசுறுப்பான காலடி அசைவு

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

திமி தகிட திமி தாக தி தகிட திமிதாக த

தோம் தய் கிடதக தரிகிட தோம்

கிடதக தரிகிட தரிகிட

தாகு ஜனந்தரி தகு ஜனந்தரி

தாகு ஜனந்தரி ததிமி தகிட ஜனு

திமி திதய்ய தரிகிட தக தா தஜம்

திமி திதய்ய தரிகிட தக தா தஜம்

இணையிலா மகிழ்வெமக்கு ஈடிலா நடனம் கண்டு

திமி திதய்ய தரிகிட தக தா தஜம்

வசீகரம் ஊதுகுழல் வழி நாதம்

இயலுலகின் இதயம்கவர் தேவகீதம்

தரி ஜம் தக தரி ஜம் தகிதக தோம் தோம் தோம்

தாம் தாம் தீம் தய்

கமலகரம் தஞ்சமென்போர்க்கு அருள் வளங்கும்

த கு த நம் தக தின்னம் கிட தக தா தய் தாம்

த்ருக தக தக தின்னாம் தாங்கு தா தய் தாம் தா தய் தாம்

கதம்ப மலர்ச் சிலம்பம் சின்னஞ்சிறு பதங்களில அசையும்

தில்லான த்ரிக தில்லான த்ரிகத்ரிக தில்லான கத தோம்

தன்னன் நங்கி தோம் தய் தோம்

தக தாகிட தரிகித தரிகித தாம் தீம் தோம் தய்

நாகசூழ்பிடி விடுத்தேறி மகுடநாட்டியம்,

அழகிய நிலவு அவன் ஒளிமிகு வதனம்,

கைவளை குலுங்க கால்சிலம்பு நம்நம்நம் என

பத தக தக திமி திமி ஜனு ஜனு தம்

த தாங் த தில்லான கனகமணி அணி

தகிட தக தகாய

ஒளிமிகு முகமதில் புன்முறுவல்உயர்ந்தோர்

உன்னிரு பாதம் பணிவோரன்றோ

ஆயர்பாடியருக்கு பேரானந்தம் அளிக்கும் ஆதவன்

காளிங்க நடனமாடி பேரின்பம் அடையும் வீரன்

கருணைமனநிலை காட்டும் அருள் வடிவம்

நந்தகுமரனே வெற்றிமீது வெற்றி கிட்டட்டும்

கள்ளுண்ட வண்டென கண்கள் அசைய

பெருந்தவமுனியோரின் உள்ளம் கவர்

பேரச்சம்விழை அசுரமுரனை அழி

தெய்வீக அதிகுணன் அன்றோ ஆநிரைமேய்ப்பன்

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

2 thoughts on “Carnatic Musing 12 – The Dance of the Yuga – Part 2 – Vision through aural route – Taam theem Tarana Thaam (Blog 2) -Oothukadu Venkata Kavi”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s