
Composer :
Muthuswamy Dikshithar. Pl ref http://musicinfoguide.blogspot.com/2007/08/muthuswami-dikshitar-1775-1835.html
Audio Link :
Pl. listen to the Hyderabad Brothers at https://www.dropbox.com/s/xbi1q317iamr0hv/Arunachala%20Natham%20-%20Saranga%20-%20Hyderabad%20Brothers-uFmaVReLFi8.mp3?dl=0
Sanskrit Verses :
अरुणाचल नाथम् – रागं सारङ्गा – ताळं रूपकं
पल्लवि
अरुणाचल नाथं स्मरामि अनिशं
अपीत कुचाम्बा समेतम्
अनुपल्लवि
स्मरणात् कैवल्य प्रद चरणारविन्दं
तरुणादित्य कोटि संकाश चिदानन्दं
(मध्यम काल साहित्यम्)
करुणा रसादि कन्दं शरणागत सुर बृन्दम्
चरणम्
अप्राकृत तेजो-मय लिङ्गं
अत्यद्भुत कर धृत सारङ्गं
अप्रमेयं अपर्णाब्ज भृङ्गं
आरूढोत्तुङ्ग वृष तुरङ्गम्
(मध्यम काल साहित्यम्)
विप्रोत्तम विशेषान्तरङ्गं
वीर गुरु गुह तार प्रसङ्गं
स्व-प्रदीप मौलि विधृत गङ्गं
स्व-प्रकाश जित सोमाग्नि पतङ्गम्
Meaning in Tamil :
பல்லவி
அருணாசல நாதனை இடைவிடா நினைவேனே
உண்ணாமுலை அன்னையுடன் காட்சி தரும் …. அருணாசல
அனுபல்லவி
எண்ணம் ஒன்று போதும் அருணனின்
எம் முக்திக்கு வித்தாகும் அவன் கமலபாதம்
கோடி இளஞ்சூரியனின் கதிரொளித் தோற்றம்
பேரின்ப உள்ளுணர்வின் உருவகம்
மத்தியம கால சாகித்யம்
பரிவுடன் கருணை உணர்வின் அடிமூலம்
பணிந்திட்டு உம்பரார் அடைக்கலம்…..அருணாசல
சரணம்
அடிமுடி காணா அழல் வடிவ லிங்க வடிவோனே
அதி் அற்புத சாரங்கம் ஏந்திய கரம் உடையோனே
அயனும் அனந்தனும் அடைய இயலா அளவிலனே
அன்னையின் கமலமுக வட்டமிடும் கருவண்டே
உமையொரு பாகன் விடையேறும் விமலனே
மத்தியம கால சாகித்யம்
உயர் ஞானியர் உளம் நிறை ஒப்பிலாஅன்பனே
வீரமிகு குருகுகனை நேசமுடன் விழைவனே
மின்னார் செஞ்சடையில் கங்கை அணியோனே
அழல் மதி ஆதவன் விளை தரும் ஒளி மேலவனே
துலங்கும் தூய தமனியப்பிரபை உமையோனே….அருணாசல
Meaning in English:
For meaning and details about the deity and the temple, please refer https://sriramv.wordpress.com/2012/11/29/arunacalanatham-of-muttuswami-dikshitar/
