This Sloka presents Goddess Lakshmi who shines in all Her splendour in front of all the devotees who have obtained “Sarupya Mukti” as described in the earlier Slokas and gathered at Vaikunta Loka.
Goddess Lakshmi is projected as unsteady in nature while dealing with her devotees. We see in our daily lives, some who become overnight millionaires and somewho became paupers from being extremely rich. We have heard “rags to riches” stories and vice versa too. Unpredictability being the trade mark of Goddess Lakshmi, her form is quite often compared to lightning.
The Sri Suktam (or Shri Suktam) is an ancient and powerful Vedic hymn of sixteen verses found as a supplement to the Rig Veda, dedicated to invoking the divine Mother Goddess in the form of Lakshmi, the embodiment of prosperity and abundance (Sri).
Narayana Bhattathri in this Sloka 6, keeps this essence of Sri Suktam in his mind, when he describes the divine beauty of Goddess Lakshmi.
Sanskrit Verse
नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा । त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मी: स्वयं लक्ष्यते यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे ॥६॥
yasmin vismayaniiyadivyavibhavaa tatte padaM dehi me ||
Meaning of the Words
नाना-दिव्य-वधू-जनै: – by various divine damsels
अभिवृता(who is) – attended
विद्युत्-लता-तुल्यया – (who is) like a streak of lightning
विश्व-उन्मादन-हृद्य-गात्र-लतयाthe – world is enchanted and captivated by (whose) slender and charming form
विद्योतित-आशान्तरा – (who) illumines the quarters
त्वत्-पाद-अम्बुज-सौरभैक-कुतुकात् – to Thy lotus feet fragrance being attached to
लक्ष्मी: स्वयं लक्ष्यते – where Laxmi herself is seen
यस्मिन् – in which (Vaikunth)
विस्मयनीय-दिव्य-विभवं – in astounding divine riches (which) aboun
dतत्-ते पदं देहि मेthat – Thy abode grant me
Explanation
O Lord! That abode of Thine Vaikunth, where Laxmi Thy consort resides, is attended to by various celestial damsels. Her, Laxmi’s, slender and beautiful form is like the streak of lightening which enchants and captivates the whole world and enlightens the quarters. She being deeply attached to the fragrance of Thy lotus feet is herself always there, in Vaikunth, which abounds in astounding divine riches. O Lord that abode of Thine grant to me.
முகவுரை
இந்த ஸ்லோகம், முந்தைய ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி “சாருப்ய முக்தி” பெற்று வைகுண்ட லோகத்தில் கூடியிருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் முன்னால், தனது முழு மகிமையிலும் பிரகாசிக்கும் லட்சுமி தேவியை முன்வைக்கிறது.
லட்சுமி தேவி தனது பக்தர்களுடன் பழகும்போது நிலையற்ற தன்மை கொண்டவராகக் காட்டப்படுகிறார். நம் அன்றாட வாழ்வில், சிலர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகவும், சிலர் மிகவும் பணக்காரர்களாக இருந்து ஏழைகளாகவும் மாறியதைக் காண்கிறோம். கணிக்க முடியாத தன்மை லட்சுமி தேவியின் வர்த்தக முத்திரையாக இருப்பதால், அவளுடைய வடிவம் பெரும்பாலும் மின்னலுடன் ஒப்பிடப்படுகிறது.
ஸ்ரீ சூக்தம் என்பது ரிக் வேதத்திற்கு கூடுதல் இணைப்பாக காணப்படும் பதினாறு வசனங்களைக் கொண்ட ஒரு பழமையான மற்றும் சக்திவாய்ந்த வேத மந்திரம். இது செழிப்பு மற்றும் வளம் இவைகளின் உருவகமான (சமஸ்க்ருதத்தில் இவை “ஸ்ரீ” என்ற சொல்லாகும்) லட்சுமியின் வடிவத்தை ஸ்ரீ சூக்தம் விவரிக்கிறது.
நாராயண பட்டத்ரி, லட்சுமி தேவியின் தெய்வீக அழகை விவரிக்கும்போது, ஸ்ரீ சூக்தத்தின் இந்த சாரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது
யஸ்மிந் விஸ்மயநீயதி₃வ்யவிப₄வம் தத்தே பத₃ம் தே₃ஹி மே || 6||
தமிழாக்கம்
பணிவிடைபுரி பல தேவ கன்னிகை புடைசூழ கொடி மின்னலொப்ப, உலகு கவர்ந்து மயக்கிடும் மென்மை உடல் வனப்புடனே ஒளிர்விக்கும் நிலையிலாத் திருமகள் உன் கமல மலர் பாத நறுமணம் நாடி நிலைத்திட்டு ஒளிர்விடும் வியக்கிடும் வளம் நிறை வைகுந்தமதில் புகலிடம் தந்திடுவாய் அடியேனுக்கு !! 7.6
விளக்கம்
அந்த வைகுண்டத்தில், ஸ்ரீ மகாலக்ஷ்மியானவள், தேவப்பெண்களால் சூழப்பட்டு, மின்னல் கொடி போன்ற அழகிய கொடி போன்ற உடலால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்கிறாள். தங்கள் பாதத் தாமரையின் வாசனையை முகர்வதில் உள்ள ஆசையினால் அங்கு எப்போதும் காணப்படுகிறாள். அத்தகைய தங்கள் ஸ்தானமான வைகுந்தத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.
ஶிவ - மங்களமானவரே த்வயி - தங்களிடத்தில் தாஸ: - அடிமையாக அஸ்மின் - இருக்கிறேன் இதி - என்று நித்யஸித்தம் - எப்போதும் உறுதியாக மயா - என்னால் நிவேத்யம் - தெரிவிக்கப்பட வேண்டுமா அஹம் - நான் நிர்கதி - கதியின்றி ஸம்ப்ரமாமி - அலைகிறேன் (உழல்கிறேன்) யேதத் - இதனை த்வமபி - தாங்களும் ஜாநாஸ- அறிவீர் நாத - தலைவனே தே - தங்களிடத்தில் மம - எனக்கு விஜ்ஞாபநீயம் - தெரிவிக்க, வேண்டிட அந்யத் - வேறு கிமபி - ஏதொன்றும் நாஸ்த்யேவ - இல்லையே தீநவ்ருத்தே - எளியோன் மே - என் ஶரணவரணம் - திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை) காருண்யாந்- கருணையுடன் க்ருஹாண - ஏற்பீரே
விளக்கம்
சிவ பெருமானே ! தங்களின், அடிமை யான் என எப்போதும் உறுதியாக என்னால் தெரிவிக்கப்பட வேண்டுமா என்ன ! நான் கதியின்றி அலைகிறேன் (உழல்கிறேன்) என்பதனை தாங்களும் அறிவீர்.தலைவனே ! தங்களிடத்தில் எனக்கு தெரிவிக்க, வேண்டிட வேறு ஏதொன்றும் இல்லையே ! எளியோன் என் திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை) கருணையுடன் ஏற்பீரே !
ஸ்வாமி! நான் உன் தாஸன், உன்னைத் தவிர வேறு கதி எனக்கு இல்லை, என்பதைத் தானே நான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நான் உன் தாஸன் என்பது சாச்வதமாய் ஏற்பட்ட நிலை. ஆதலின் நான் சொல்லிக்கொள்ளாமலே நீ அறிந்த விஷயம். நான் திக்கற்றவனாய் பரிதபிக்கும் நிலையில் காப்பவரின்றிச் சுழன்று கொண்டு வருகிறேன் என்பதும் முற்று முணர்ந்த உனக்குத் தெரியாததில்லை. இவ்விதம் பார்க்குங்கால் நான் உன்னிடம் தெரிவித்திக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஆகையினால் கருணையை முன்னிட்டு மிக்க பரிதாப நிலையிலிருக்கும் என்னுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்வாயாக.
பொறி வென்ற யோகியரின் பெரு முயற்சித் துதிப்பொருளாய், அவர்தம் இறுதி மூச்சுக் காற்று முடியும் தருணமதில், தானே முன்நின்று முக்திக்கு வித்தாகும் மும்மல அச்சம் போக்கிடும் முழுமை அறிவு உரைத்திடும் மும்மறைக் கருவுரை ஆசானுன் மும்மலர்ப்பாதம் பணிந்திடுவேன் எப்போதும் மலையோனே !! 19
சொற்களின் பொருள்
கிரிஶ - மலையோனே விஜிதகரணைர் - பொறிகளை வென்றவர்களான யோகிபி - யோகிகளால் யத்நாத் - பெரு முயற்சியால் த்யாதஹ - தியானிக்கப்படுகின்ற யஹ - எந்த தேவஹ - இறைவன் விமுக்த்யை (விம்ருக்ய:) - மோக்ஷத்தின் பொருட்டு (தேடப்படுகின்ற) தேப்ய: - அந்த யோகிகளுக்கு ப்ராண உத்க்ரமண ஸமயே - பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம் ஆத்மநா ஏவ - தானே ஸம்நிதாய - காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்ஷத்தை அளிக்கிறார்) பவபயஹரம் - பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற தாரகம் - சம்சாரத்தைக் கடக்கின்ற தத் ப்ரஹ்ம - அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை வ்யாசஷ்டே - உபதேசிக்கிறாரோ தம் - அத்தகைய ப்ரஹ்மவித்யாகுரும் - மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய த்வாம் - உம்மை அஹம் - நான் ஸததம் - எப்போதும் ஸேவே- வழிபடுகிறேன்
விளக்கம்
பொறிகளை வென்றவர்களான யோகிகளால் பெரு முயற்சியால் தியானிக்கப்படுகின்ற, மோக்ஷத்தின் பொருட்டு தேடப்படுகின்ற, எந்த இறைவன் அந்த யோகிகளுக்கு பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம் தானே காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்ஷத்தை அளிக்கிறார்) பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற சம்சாரத்தைக் கடக்கின்ற அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை
உபதேசிக்கிறாரோ, அத்தகைய மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய
உம்மை நான் எப்போதும் வழிபடுகிறேன் என்று பிராரத்திக்கும் தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில் மறைமுகமாக, இந்திரிய நிக்ரஹம் செய்ய முடியாத, தர்மத்தை அனுஷ்டிக்க இயலாதவனாக நான் உனைச் சரணடைகிறேன் கூறுகிறார்.
பிரம்மவித்யை என்ற சொல்
ஜீவனை ப்ரம்மன் என்று புரியவைக்கும் வித்யை.
ஜீவாத்மாவை, பரமாத்மாவாகப் புரியவைக்கின்ற வித்யை.
இறைவனைப் பற்றிய அறிவு
உயிர் இறைவனாகவே இருக்கிறது என்ற அறிவைப் புகட்டுகின்ற வித்யை. (“ஜீவோ ப்ரம்மைவ நா பரஹ”)
த்வைத பக்தி செய்தவனுக்குத்தான் அத்வைத ஞானத்தை உபதேசிக்க முடியும்.
என்றவைகளைப் பற்றியது.
இந்த ஸ்லோகம் நமக்கு கூறுவது:
யோகியாக இருத்தல்.
புலனடக்கம் பழகுதல்.
விடாமுயற்சி செய்து இறைவனை தியானித்தல்
அவ்வாறு தியானிப்பவர்களுக்கு, இறைவனே வந்து அகண்ட ப்ரம்மோபதேசம் செய்வார்.
na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ | tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti || 15 ||
Katopanishad (2.2.15) clearly brings out that “The sun does not shine there; nor do the moon and the stars, nor do these lightnings shine. How could this fire? Him shining, all shine after. All this shines by His light”.
This has been restated in Bhagwad Gita (15.6) too by Lord Krishna. Mundaka Upanishad (2.2.11) too states this.
This “causeless cause”, the omniscient, omnipotent, infinitely blissful, self effulgent, eternally existing “consciousness” is what the Scriptures describe as “Parama Padam”, “Vishnu Padam”, “Purushartha Lakshyam (goal of human endeavour). This is what is the ultimate destination called “Moksham”. This indeed is Sri Vaikuntam, the abode of Lord.
In this Sloka, Bhattathri provides an indication of this.
भाते जगद्भ्य: बहि:- (which) shines beyond all the fourteen worlds
शोक-क्रोध-विमोह-साध्वसमुखा:- sorrow, anger, delusion, fear etc.
भावा:-तु दूरं गता: – (such) mental modifications are far beyond
सान्द्रानन्दझरी च – and the torrent of supreme bliss
यत्र परम-ज्योति:-प्रकाशात्मके – where there is the splendour of the supreme light of consciousness
तत्-ते धाम – that abode of Thine
विभावितं – (was) shown (to Brahmaa)
विजयते – shining
वैकुण्ठरूपं – as the Vaikunthloka
विभो – O All pervading Lord!
Explanation
Oh All pervading Lord!
Thy abode Vaikunth is located beyond the fourteen worlds, where Maayaa has no influence and where the modifications of the mind, like sorrow,anger delusion fear are left far behind,such is. It is full of supreme bliss and is engulfed with the constant flow of bright effulgence. That shining divine abode called “Vaikunta”, Thou showed to Brahmaa.
என்கிறது. அதாவது, “ஆத்ம ஸ்வரூபமாக இருக்கக் கூடிய ப்ரம்மத்தை சூரியன், நிலவும், நட்சத்திரங்களும் ஒளிர்விப்பதில்லை. இந்த மின்னலும் ஒளிர்விப்பதில்லை. அப்படியிருக்க, இந்த அக்னியானது எப்படி? (ஒளிர்விக்க இயலும்?). எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு, தன்னைத்தானே விளங்கிக் கொண்டிருக்கிற அந்த மெய்ப்பொருளைச் சார்ந்தே (சூரியன் முதலான) அனைத்தும் (அனைத்திலும் புகுந்து) அவற்றை ஒளிர்கின்றன (விளங்கச் செய்கிறது). அதனுடைய (மெய்ப்பொருளினுடைய) ஒளியால்தான் (ஆத்ம சைத்தன்யத்தால்தான்) இவை (சூரியன், நிலவு, நட்சத்திரம், மனம், புத்தி’ யாவும் விதவிதமாக ஒளிர்கின்றன” என்கிறது இந்த வேத மந்திரம்.
இதே மந்திரம், முண்டக உபநிஷத்திலும் (2.2.11) உள்ளது. பகவத் கீதை (15.6) “ந த1த்3பா4ஸயதே1 ஸூர்யோ ந ஶஶாங்கோ1 ந பா1வக1:….. “சூரியனோ, சந்திரனோ, நெருப்போ என்னுடைய அந்த உன்னத இருப்பிடத்தை ஒளிரச் செய்ய முடியாது என்று இந்த மந்திரத்தின் சாரத்தையே கூறுகிறது.
அனைத்திற்கும் ஆதாரமான, காரணமேதுமிலா காரணமான ப்ரம்மமே, பரமபதம், விஷ்ணுபதம், மோக்ஷம், முக்தி, வீடுபேறு என்றெல்லாம் அழைக்கப்படும் தன்னொளிரான (“ஸ்வயம் ப்ரகாஸம்”) , பேரின்ப (“ஆனந்த”), தூய உணர்வின் (“ஸுத்த சைதன்யம்”) இருப்பு (“ஸத்”). ஒன்றே சச்சிதானந்தம் (சத், சித், அனந்தம்). அதுவே இறையின் இருப்பு. அதுவே ஶ்ரீவைகுந்தம். இதனைத்தான் இந்த ஸ்லோகத்தில், பட்டத்ரீ கோடிட்டுக் காட்டுகிறார்.
தமிழில் ஒலிபெயர்ப்பு
மாயா யத்ர கதா₃பி நோ விகுருதே பா₄தே ஜக₃த்₃ப்₄யோ ப₃ஹி:
ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே யஹ - எந்த பரமேஸ்வரன் ஏக: - ஒருவராகவும் சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும் ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும் மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால் பத்த்வா - கட்டி ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை காரயித்வா - செய்யுமாறு செய்து ய: ச - எந்த பரமேஸ்வரன் ஏதேஷு - இவர்களுள் ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை வித்யயா - மெய்யறிவினால் மோசயித்வா - விடுவித்து ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை பரம் - பரமனின் தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்ஷத்தை) கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ) தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.
விளக்கம்
சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை.
அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.
பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார்.
பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.
அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே.
இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்ஷிதர்.
யார் படைப்பின் தொடக்கத்தில் பிரம்ம தேவரைப் படைத்து (“யோ ப்ரஹ்மானாம் விததாதி ரூபம்”) அவரிடம் வேதங்களைக் கொடுத்து (“யோ வை வேதாஷ்ஷ்ச ப்ரஹிநோதி தஸ்மை”), இந்த படைப்பை படைக்கும்படி செய்தாரோ, என்னுடைய மனதையும் புத்தியையும் ஒளிர்விக்கும் அந்த இறைவனை (“தம் தேவ ஆத்மபுத்திப்ரகாஸம்”) மோக்ஷத்தை விரும்பும் நான் சரணடைகிறேன் (“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே”)
என்கிறது ஷ்வேதாஷ்த்வரோப உபநிஷத் 6.28. அதே போல இங்கு தீக்ஷிதர் கூறுகிறார்.
சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. ஷ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீமத் பாகவதத்தின் தியான ஸ்லோகமும் இதனை கூறுகிறது. பகவத் கீதை அத்தியாயம் 15 இதைப் பற்றியே (15.1-15.4).
அப்படிப்பட்ட ஆண்டவன் ஆத்ம, புத்திப்ரகாஶம்; அதாவது இறைவன் உணர்வாக இருக்கிறார்; நான், உணர்த்த உணர்பவனாக இருக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அப்பைய தீக்ஷிதர்.
க்ரியா யோகசர்யா: – கிரியை, யோகம் வழியாக அதாவது வழிபடுதல், தியானம் முதலான சாதனைகளை
ந கர்தும் (ஶக்நோமி) – செய்ய இயலாதவனாக இருக்கிறேன்
அநிதரகதி:- வேறு வழியின்றி
கேவலம் த்வாம் ப்ரபத்யே – உன் ஒருவனையே சரணடைந்து சார்ந்துள்ளேன்
விளக்கம்
சைவ சித்தாந்தத்தில், இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.
1. இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே
தாயுமானவர்
3. சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.
4. இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.
சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்),
உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்),
பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும்.
சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.
மரணம் எப்பொழுது வரும் என்பதை அறிந்திலேன் நான். இங்கு இருப்பதோ இரவலாக கிட்டியது. “நம் மனே அல்லீநே! இல்லி சும்மனே பந்திதீனே!” (எம் வீடு அங்குதான்; இங்கு சும்மா வந்துள்ளேன்) என்கிறார் புரந்தர தாசர். எனவே இமைப்பொழுதும் என் நெஞ்சம் நீங்காதான் தாழ் இப்பொழுதே பணிகிறேன்.
“பெருமானே, என் உடல், உயிர் அனைத்திலும் இப்போது நீதான் நிறைந்திருக்கிறாய். இனி நான் செய்கின்ற செயல்கள் யாவும் நீ செய்வதுதான். நான் சரியான காரியங்களைச் செய்தாலும், தவறான செயல்களைப் புரிந்தாலும் அத்தனைக்கும் நீ தான் பொறுப்பு ” என்றும்
“அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ? இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே? நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே?”
என்றும் இறைவனிடம் கேட்கிறார் மாணிகக வாசகர்.
இதே மனநிலையில் உள்ள அப்பைய தீக்ஷிதர்,
“ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன். அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன்”.
एवं देव in this manner O Lord! चतुर्दश-आत्मक-जगत्-रूपेण in the form of the fourteen worlds जात: पुन: – manifesting (Thyself) again तस्य-ऊर्ध्वं खलु at the head (peak) of that (the worlds) सत्य-लोक-निलये in the abode of Satyaloka जात: -असि धाता स्वयं manifested as Brahma (the Creator) Thyself यं शंसन्ति whom (Brahma) (the Srutis) describe हिरण्यगर्भम्- (as) Hiranyagarbh अखिल-त्रैलोक्य-जीवात्मकं of all the beings in the three worlds as the collective soul य: -अभूत् who became स्फीत-रज:-विकार-विकसन्- because of the upsurge of Rajoguna नाना-सिसृक्षा-रस:- became desirous of creating various beings.
Meaning in English:
The fourteen worlds are also known as trilokyam (3 worlds). The 7 worlds together below the earth are taken as one, called Patala. The Earth is taken as Bhuloka as second and the six worlds above the earth are taken as third as Upper world.
Thus O Lord! Thou who manifested in the form of the fourteen worlds, again by Thy own will, manifested as Brahma, in Satyaloka, which is the highest and loftiest of all the worlds.This Brahma is known as Hiranya Garbh (the golden egg) the cosmic intelligence of all the beings of the three worlds. With the upsurge of Rajoguna, Thou as this Hiranya Garbha became desirous of creating various beings.
சுவாசம் அடங்கும் வேளையிலே உள்ளம் உன்பாதம் பணித்திட்டு பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி எறிய இயலும் புரமெரி நாதனே ! ஒருகால் அக்காலம் என் உள்ளம் ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு தவறிட்டால் உனதடி பணிந்திட எங்கனம் எனக்கு கை கூடும் !! 13
சொற்களின் பொருள்
நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ!
புரஹர – முப்புரத்தை எரித்தோனே
ஜந: – மனிதன் (உயிர்)
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம்
சேத: – மனதை (சித்தத்தை)
த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்
நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து)
ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும்
ஸர்வம் – அனைத்து
ஆக3ஹ – பாபங்களையும்
ஷேப்தும் – உதறி எறிந்துவிட
ப்ரபவதி – முடியும் (எனினும்,)
தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்
யதி – ஒரு வேளை
தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்)
மம மநோ – என் மனது ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக
பவேத் – ஆகிவிட்டால்
தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)
கதம் மே – எப்படி எனக்கு
கடேத – கைகூடும்
விளக்கம்
எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.
திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம்
இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று
இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் !
என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3).
இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது.
இடது திருவடி குறிப்பது
அபர ஞானம்
கர்ம காண்ட ஞானம்
உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
வலது திருவடி குறிப்பது
பர ஞானம்
ஞான காண்ட ஞானம்
உண்மையை உணர்த்துவது
யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.
தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்கிறது திருக்குறள் (941).
நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.
பிதாமஹர், வாலறிவன், ஹிரண்யகர்ப்பர், அப்ஜயோனி, பிரஜாபதி, விஸ்வஸ்ரு, விதாதா, விதி, கமலோத்பவ, விரிஞ்சி, அண்டஜ என்னெல்லாம் அழைக்கப்படும் நான்முகக் கடவுளான பிரம்மனைப் பற்றியது தசகம் 7. இந்த தசகத்தின் ஸ்லோகங்களை அறிய முற்படுமுன், பிரம்மனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் தேவை நமக்கு. அடியேன் அறிய முற்பட்டதை தசகத்தின் முகவுரையாக அளிக்கிறேன்.
வேதாந்தப் பார்வை
பரமார்த்திகா நிலையில் நிர்குணனாக இருக்கும் பரப்பிரம்மன், மாயையால் பிரதிபலிக்கப்பட்டு, வரையரைகளாலான (அறிபவன்/அறிவது வேறுபாடு, காலம், இடம் போன்றவைகள்), வெளிப்பாடுடைய சகுண பிரம்மனாகிறான். மாயையின் தொடர்புடைய அந்த சகுணப் பிரம்மனின் வெளிப்படா நிலையில் ஈஸ்வரன் (காரணப் பிரம்மன்) என்றும், வெளிப்படும் நிலையில் (manifested state) ஹிரண்யகர்பா, பிரம்மா (நான்முக கடவுள்), காரியப் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறான்.
ஹிரண்யகர்பமே வெளிப்படும் முதல் படைப்பு என்று மறைகள் கூறுகின்றன. வித்தெனும் உள்ளார்ந்த நிலையில், வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகளென மரம் வெளிப்படுவதைப்போல “காரிய ப்ரம்மன்” (வடிவுடை பரமன்) எனும் “ஹிரண்யகர்ப்பா”, மாயையின் விக்க்ஷேப சக்தியால் வெளிப்படுகிறான்.
ஹிரண்யம் என்றால் பொன்/தங்கம் என்று பொருள். அறிவும் பொன்னும் ஒளிமயமானது என்பதால், இங்கே அதற்கு அறிவு என்ற பொருள். பொன் போன்ற ஒளி படைத்த அறிவால், அறியாமையெனும் இருள் நீங்கியது என்பர். கர்ப்பம் என்றால் கருப்பப்பை என்று பொருள். இந்த இடத்தில் அதற்கு உள்ளே என்ற பொருள். ஹிரண்ய கர்ப்பம் என்றால், அதனுள் ஒளிமயமான அறிவு என்ற பொருள். முடிவற்ற அறிவு என்பார்கள். அழியா அறிவதனை உள்ளடக்கிய கருவறை.
அதாவது, அனத்தின் எல்லைகளையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிரினங்களையும், அனைத்து அண்டங்களையும் அவைகளின் நுண்ணிய நிலையில் அடக்கிய கருப்பை என்று பொருள். இப்படி, முற்றிலும் வெளிப்பட்ட அனைத்து அண்டங்களின் நுண்ணிய நிலையை உள்ளடக்கிய கருப்பையே ஹிரண்யகர்ப்பம் எனக் கூறப்படுகிறது. காரிய பரமனின் முதல் வெளிப்பாடு என்பதனால், “ப்ரதமஜ” அல்லது “முதல்பிறவி” என்றும் பொன் கருவரை அழைக்கப்படுகிறது. இதற்கான சமஸ்க்ருத தொழில்நுட்பச் சொல் “ஸம்பூதி”.
அறிவியல் (பௌதீக) கண்ணோட்டம்
பள்ளித் தோழன் ஒருவனை, நீங்கள் ஒரு மிக நீண்ட காலம் (உதாரணத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு) பிறகு ஒரு கூட்டத்தில் பார்க்கும் போது என்ன சொல்வீர்கள்?
1. “அதோ ! என்னுடைய 5ம் வகுப்பு பள்ளித் தோழன். அதே அங்க அடையாளம். ஐம்பது ஆண்டுகளானாலும் நான் மறக்கவிலை. அவன் பெயர் தாமோதரன்” என்று கூறுவீர்களா?
அல்லது
2. “இடைவிடா தொடர்ச்சித் தாக்குதலால் எண்ணற்ற போட்டான்கள் என் விழித்திரையில் விழுந்து, பார்வை நரம்புகள் வழியாக மின்னனு அலையாய் சென்று தாலமஸ் பின்னுள்ள இருமேடு சென்று அங்கிருந்து என் பிரதானமான காட்சிப்புறனி வழியாக, ஸட்ரையேட் காட்சிப்புறனியில் வண்ணங்களை அடையாளம் கண்டு, பின் பொருட்களை நினைவுக்கு கொண்டுவரும் மூளையின் முன்பகுதி சென்று ஆராய்ந்து என் பள்ளித் தோழன் தாமோதரனை தான் கண்டேன்” என்பீர்களா?
இரண்டும் சரியான கூற்று தான்; முதல் கூற்று பொருள் என்று கூறமுடியாத மனம் ரீதியானது, இரண்டாவது பௌதீகப் பொருளான மூளை ரீதியானது.
பொதுவாக, மனம் என்பது நம் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், நம்பிக்கைகளின் ஒருபொருட் சொல்லாக கருதப்படுவது. மனம் பொருட்களால் ஆனது அல்ல. எனினும் மிகவும் சக்தி வாய்ந்தது.
மண்டை ஓட்டுக்குள், மூன்று பவுண்டு எடையுள்ள பாலாடைக்கட்டி போன்ற அமைப்பே, மனம் என்று நாம் கூறுவதன் பொருள் வடிவமான மூளை என குறைந்த பட்சம் விஞ்ஞானிகளாவது கருதுகிறார்கள். நமக்கு சிந்தனையோ அல்லது உணர்வோ தோன்றினால், அதற்கு மூளையே காரணம் என்றும், மூளை ந்யூரான்கள் வழி மின்னணு அலைகளச் செலுத்தி நரம்பியல் ரசாயனங்களை உற்பத்தி செய்வதால் அந்த சிந்தனையோ உணர்வோ ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். நரம்பியல் அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலானோர், மனம் என்பதற்கு தனி இருப்பு என்று ஒன்றுமில்லை என்று வலியுறுத்துகின்றனர். அது மூளையின் ஆற்றலே தவிர அது சுயேச்சையாக இயங்கும் தன்மை கொண்டதல்ல என்றும் கூறுகின்றனர்.
ஆக, அறிதிறன் நரம்பியல் (cognitive neuroscience), மனித மனதின் உயிரியல் அடித்தளங்களை (biological foundations) கண்டறிய முற்படுகிறது. எப்படி மனச்செயல்பாடுகள் (mental operations) மூளையின் தகவல் செயல்முறை அமைப்பிலிருந்து (information processing architecture) உருவெடுக்கின்றது என்பதை அறிவது ஒரு நோக்கு. எப்படி? மனித மனம், மூளை இரண்டையும் தனிநிலையில் ஆய்வதா அல்லது வேறு பார்வையில் ஆய்வதா?
நம்முடைய அன்றாட உலகில் நாம் நமக்குச் சொந்தமான அனுபவங்களிலிருந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கண்டு, சமூக உலகில் பங்கேற்று, , நெறிமுறைகளிலிருந்து வழி தேடி, அழகான அனுபவங்களில் மகிழ்ந்து, அருமை நண்பர்களுடன் பரிவுடன் கலந்து, இந்த அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மனித மூளையை தனித்த ஒருவரின் நிலையிலிருந்து பௌதீக ரீதியில் பார்ப்பது எப்படி சரியான அணுகுமுறையாகும்?
அரோன் பார்பே, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மன இயல் பேராசிரியருடன் இன்னும் இருவரும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில்
“அறிதிறன் நரம்பியலில் (cognitive neuroscience) பொதுவாக ஒருவரின் அறிவின் பிரதிநிதித்துவம் அவரது மூளையில் என்றும், அது ஒருவொருவருக்கிடையே நேருக்கு நேர் பரிமாற்றப்படுகிறது என கருதப்படுகிறது. காந்த அதிர்வு அலை வரைவு (MRI), கதிரியக்கத் துழாவல் (CT Scan) போன்ற ஆய்வுகள் தனிப்பட் ஒருவரின் மூளயைத் துழாவி அதன் செயல்பாட்டை யூகிக்க முடியும். எங்களின் ஆய்வு அத்தகயை கருத்து சில முக்கியமான நிகழ்வுகளில் சரியில்லை என்பதை நிருபனம் செய்கிறது. இதை ஊர்ஜிதப்படுத்த, சமீபத்தில் ஒரே சமயத்தில் பலர் ஒரே விஷயத்தை சிந்தனை பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்களின் மூளைகளை அதே சமயத்தில் காந்த அதிர்வு அலகளைப் படம்பிடித்த போது, அவர்களின் மூளைகளின் அதே பகுதிகளில் மின்னணு அலைகளின் ஆக்கம் தெரிந்தது. ஆக, இந்த அறிதிறன் நரம்பியலின் மிகப் பெரிய சவால் என்னவென்றால், ஒருவரின் மூளையில் உறையாமல் அடுத்தவரிடமோ, சமுகத்திடமோ வெளிக்குத்தகையிலிருக்கும் (outsourced) அறிவை எங்கனம் நாம் அறியமுடிவது என்பதே. ஒருவரின் அறிவாற்றல் என்பது பௌதீக உலகிற்கும், அடுத்தவர்களின் மூளைக்கும் பரவியுள்ளது” என்று கூறுகிறார்கள்.
மேல்கூறிய கருத்துக்கள், ஆய்வுகள் நம்மை மற்றொரு முக்கியமான தத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதுவே கூட்டுணர்வு (collective consciousness) என்பதாகும். கார்ல் ஜங் எனும் புகழ் பெற்ற மனநிலையியல் நிபணர், ஒருவருக்கொருவருடனும், அவர்களின் முன்னோர்களுடனும் தங்களது பகிர்ந்த அனுபவங்கள் மூலம் மனிதர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என நம்புகிறார். நம் உள்ளுணர்வு என்பது, நம் சொந்த அனுபவங்கள், நினைவுகள் மட்டுமில்லாமல், மனித குலத்தின் அனுபவங்களும் நினைவுகளும் நிறைந்த களஞ்சியம். அனைத்து மனிதர்களின் உள்ளுணர்வுகளும் இப்படியே. இக்கூட்டுணர்வு மூலமே நாம் உலக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோம் என கார்ல் ஜங் கருதுகிறார்.
மனம் என்பது பொருளான மூளையின் செயல் அல்லது வினைப் பரிமாணம். கூட்டு மனம் (collective mind) என்பது, பகுதிகள்-முழுமை, தனிநபர்-சமூகம், நிலையான தன்மை-மாற்றம், பகுத்தறிவு-படைப்பாற்றல் இவைகளுக்கிடையே உள்ள எல்லைகள்/வேற்றுமைகளைக் கருதாமல், உறவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட கூட்டுமனம் ஒவ்வொருவரின் மனநிலையையும், கூட்டான மனநிலைக்குதவியும் அந்நிலைகளை புரிந்து கொள்கிறது.
கூட்டு மனம் / கூட்டு உணர்வைப் படித்தறிய உலகம் முழுவதும் விரிவான விஞ்ஞான ஆய்வு நடக்கிறது.
உயர்நிலை தத்துவ கண்ணோட்டம்
இதுவரை பௌதீக அளவில், உலகத்தில் மனம், மூளை, உணர்வு என்பவைகளப்பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம் இப்பொழுது, இவைகளை உயர்நிலை தத்துவ ரீதியில் (உலகத்திலிருந்து அண்டங்கள் அடங்கிய ப்ரபஞ்ச நிலை) ஆராய்வோம்.
இரவில் விண்ணை நோக்குங்கள். எத்தனை நட்சத்திர மண்டலங்கள, கோளங்கள்? இந்த பிரபஞ்சத்தை நன்றாகப் பாரத்தபின் இவ்வினாக்கள் நம் மனதில் எழும்.
இந்த நட்சத்திரம் சரி, இது தவறு; இந்த மண்டலம் சரியாக அமைந்துள்ளது, இது இல்லை என்று ஒப்பிடுகிறோமா?
விண்மீன் திரைகளில் ஒன்றின் வெளிப்புற விளிம்புகளில் உள்ள ஒரு சிறிய (!) நட்சத்திரத்தை சுற்றி சுழலும் ஒரு முக்கியமற்ற (!) மண், நீர் கலந்த ஒரு பந்து மீது நாம் வாழ்கிறோம் என்று சிந்திக்கின்றோமா?
உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் தெளிவாக அமைக்கப்பட்ட செயல்முறைகளை நாம் காண்கிறோமா?
இவைகளையெல்லாம் ஊடுருவி, சுற்றிப் பிணைக்கும் பேருணர்வு எனும் நூலை நாம் காண்கிறோமா?
இவ்வினாக்களுக்கு சரியான விடைகள் உண்டோ இல்லையோ தெரியாது; அது ஒவ்வொருவருன் மனநிலையைச் சார்ந்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. இவற்றின் பின், எல்லாவற்றிலும் நாம் ஒரு ஒழுங்கு, ஒரு தர்மம் (இந்த பிரபஞ்சத்தை கையாள்வதில் நமது செயல்களைத்தவிர) பார்க்கிறோம், இல்லையா? இப்படிப்பட்ட ஒழுங்கு, தர்மத்தை எப்படி இப்பிரபஞ்சம் கடைப்பிடிக்கிறது? இந்த உத்தரவு எங்கிருந்து வருகிறது? எங்கோ கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு ஒன்று இருந்து இதை நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும் உறுதி அல்லவா? என் வார்த்தையை குறிக்கவும். நான் “கூட்டு மூளை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.
என் வரையறுக்கப்பட்ட அறிவைப் பொருத்தவரை அந்த கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு (சமஷ்டி மனம்) என்பதனையே பொன் கருவறை என அழைக்கிறோம். வேதங்களின்படி இதுவே முதல் படைப்பு.
பொன் கருவறை என்பது அனைத்தின் ஒன்று கூடிய மனம் (புத்தியும் சேர்ந்த) என்பதனால், அந்த அனைத்து நுண்நிலைகளின் ஒருமித்த நிலை, உடல் மன வளாகத்திலிருக்கும் பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே அப்பொறிபுலன்களுக்கு அக்கருவறை புலப்படாது. அந்நிலையில் மாயையின் வெளிப்படுத்தும் (உந்தும்) சக்தியினால், மன உடல் வளாகமுறை ஜீவன், தானே காரணம், தானே நுகர்வோன் என எண்ணி நுண்நிலை இருப்புகளை பருநிலை உலகாகவும், பொருள்களாகவும் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தியதோடல்லாமல், அப்படி வெளிப்பட்ட உலகமும், பொருட்களும் நிலையானது என்ற தவறான புரிதலும் கொள்கிறது.
ஸம்பூதி உபாஸநா
ஹிரண்ய கர்பத்தை தியானம் செய்வதே ஸம்பூதி உபாஸநா எனப்படும்.
ஸ்வாமி பரமாரத்தானந்தாவின் போதனைகளை இங்கு மேற்கோளாக காட்டுகிறேன்:
“ஹிரண்யகர்ப்பம் என்பது பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டது, அவைகளால் அதனை உணரமுடியாது என்றால் அந்த ஹிரண்யகர்பத்தை எப்படி தியானிப்பது? அதற்கு ஒரு யுக்தி உள்ளது. ஒரு சின்னத்தை (ஆலம்பனம்) பயன்படுத்துவது. கூட்டு மனதின் (சமஷ்டி மனம்) சின்னமாக நம் மனதை (வ்யஷ்டி மனம்) பயன்படுத்துவது. அதாவது, கவனைத்தை நம் மனம்மேல் திருப்பி தியானிப்பதுவே ஹிரண்யகர்ப்ப தியானம்”. இதுவே ஒரு எளிய விளக்கம்.
சரி, நம் மனம் எங்குள்ளது? நமது சாஸ்த்திரங்கள், மனது மூளையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று சொல்கின்றன. மூளை பொறி புலன்களால் அறியக்கூடிய ஒரு பருஉடல் உறுப்பு. மனம் காண இயலா ஒரு நுட்பமான கருவியாகும். மரணத்தின் போது, மூளை உடலுடன் எரிந்து சாம்பலாகும். மனம் பிழைத்து, உடல் எரிந்தபின்னர் இன்னொரு உடலைத்தேடி அலையும். அறிவியல் இந்த கருத்தை ஏற்கவில்லை.
மறைகள், நமது ஐம்புலன்களுக்கும் (இந்திரியம்) ஏற்ப உடலில் ஐம்பொறிகள் (கோலகம்) உள்ளதை உரைக்கின்றன. உதாரணமாக நமது பார்வைக்கு கண்களே கருவி. குருடர் என்று நாமழைக்கும் மனிதருக்கு பொறிகள் (கோலகம் – கண்கள்) உண்டு புலன் (இந்திரியம் – பார்வை) இல்லை. அதைப்போல நமது மனதின் பொறி (கோலகம்) இதயம் (ஹ்ருதயம்) என்று கூறுகிறர் ஆதி சங்கரர். விழிப்பு நிலையில், மனம் உடலை மேவி பணி புரியும். ஆழ் உறக்க நிலையில் உடலிலிருந்து விலகி அதன் இல்லமான (கோலகம்) இதயத்திற்கு திரும்பும். ஹிரண்யகர்பம் என்பது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கூட்டு மனம்”.
ஸம்பூதி உபாஸநாவின் பலன்கள்
அடிப்படையில் இந்த வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் நுட்பம், தியானம். இப்படி ஹிரண்யகர்ப்ப (ஸம்பூதியை) தியானிப்பவர்கள், பிரபஞ்சத்தை வழிபடுகிறார்கள். அதாவது அனைத்துப் படைப்புகளும் ஒன்று, இயற்றகையெனும் ப்ரக்ருதியும் ஒன்று என்ற அடிப்படை உணர்வுடன் வழிபடுவது. அந்த உணர்வில் அவர்களும், இயற்கையும் பிரபஞ்சமும் வேறு என்று அவற்றை வழிபடுகின்றனர். அதாவது, இறையும் நானும் வேறு என்ற உட்கருத்துடன் வழிபடுவது.
இவ்வழிபாட்டின் மூலம் இஞ்ஞானிகள் ஓப்பீட்டளவில் அழிவிலா நிலை அடைந்தாலும், இயற்கையுடன் கலந்திணைந்து மரணத்தைக் கடந்து மறுபிறவி தவிர்ப்பரே (க்ரம முக்தி) அன்றி வீடுபேறு அடைவது என்பது இவ்வகை வழிபாட்டில் இயலாதது. ஏனெனில் அந்த தியானத்தின் உட்கருத்தில் இருமை உளது (நான் வேறு, இறை வேறு).
அந்த வழிபாடு புரியும் ஞானிகள், பிரம்ம லோகம் என்னும் இறை உலகத்தை ஷுக்ல கதி என்ற பாதை வழி அடைவர் என்று மறைகள் கூறுகின்றன. அந்தப்பாதை இதயத்திலிருந்து தொடங்குவதாய் மறைகள் கூறுகின்றன. மரணத்தின் போது (உடலை விட்டு உயிர் பிரியும் போது) நுண்ணுடலும், காரண உடலும் இதயத்திற்கு திரும்புகின்றன. அங்கிருந்து தோன்றும, 101 நாடிகளில் ஒன்றான சுஷும்ன நாடி வழியாக மேல்நோக்கி சென்று கபால உச்சி வழியாக, சூரியன் வழியாக பிரம்ம லோகம் அவைகள் அடைந்திடும் என்று மறைகள் உரைக்கின்றன. இதைப்பற்றிய விபரங்கள் இந்த முன்னோக்கில் அடங்க வில்லை என்பதை அறிக.
பிரம்ம லோகம் அடையும் இஞ்ஞானியர் அட்டமா சித்திகளை அடையக்கூடும். எனினும், அவைகளால் அடையும் மகிழ்வும் நிலையற்றதே என மறைகள் கூறுகின்றன.
தசகம் 7 – முதல் ஸ்லோகத்தை அடுத்த பதிவில் காண்போம்.