In the Tamil calendar (Solar based) of Kartigai (around mid November – mid December), the full moon day is divinely important. Two important events – the arrival of Lord Katikeya (Subramanya/Arumugam) and the manifestation of Lord Siva as an endless flame of light (even Lord Vishnu and Lord Brahma couldn’t find the start and the end of it in the three worlds). The lighting of the famous Deepam at the famous Hill at Thiruvannamalai happens on this day.
Today being that day, I decided to refine and rededicate two of my earlier blogs through an audio visual in the social media. Here are the links to the two videos.
அம்புலி கங்கை அணிந்த
அடிமுடி காணா இறைவனை,
அன்பர் மனங்கவர் அண்ணாமலையோனை,
அன்றே கண்டு ஆனந்தமதனை
அலை அலையாய்ப் பெற்ற,
ஆதி சங்கரனின் சிவ
ஆனந்த லகரி எனும் அருள் மறையும்,
ஆர்க்கும் அலைகள் ஆழ்கடல் தோன்றி அழிவதொப்ப,
அன்பரின் மாளா துயர் அழியும் அவனை அடைந்தால் என
அலைவாயிலில் ஆதி சங்கரன், அருளிய
சுற்றும் அரவு என பதம் அமைந்த சுபரமணிய புஜங்கம் தனையும்,
அடியேன் அறிய இயன்று, திருக்
கார்த்திகை தீப நன்நாளின்று,
ஒலி ஒளி வடிவாய் வளைதளத்தில்
ஓங்கார நாதன் திருவடியில்
உளமுருகி பணித்திட்டேன்
ஒன்றுமில்லை இவ்வுலகில்
உனையன்று வேறெதுவும்
சிரம் தாழ்த்தி வணங்கிடுவேன்
திருவண்ணாமலை அருணனே
திருச்செந்தூர் குமரனே
திருக்கார்த்திகை தீப நாள் வாழ்த்துக்கள்