Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 6. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 6

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/8mc1df4vpv1f8ro3i95fu/Verse-6.mp3?rlkey=jf5xkykia6mgbdvo2g7t4j2im&dl=0

Sanskrit Verse

माया विलासहसितं श्वसितं समीरो
जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: ।

सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि-
र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥

Translation in Tamil 

மயக்கிடும் மாயை புன்முறுவலாய்,
மன்றம் வீசுதென்றல் சுவாசமாய்,
மண்டிலாத் தெளிநீர் நாவாய்,
திரள்புள் சிலம்பம் மொழியாய்,

சித்த ஞானியர் ஏழிசையாய்,
சிவந்த கனல் திருவாயாய்,
வின்னவரினம் திருக்கரமாய்,
இல்லற துறவற தர்மங்கள் இருமார்பாய்
அமைந்த ஆண்டவன் உனை
அடிபணிவேனே எளியன் யான்!! 6.6

Transliteration in English 

maayaa vilaasahasitaM shvasitaM samiirO
jihvaa jalaM vachanamiisha shakuntapanktiH |

siddhaadayaH svaragaNaa mukharandhramagnirdevaa
bhujaaH stanayugaM tava dharmadevaH ||

Transliteration in Tamil 

மாயா விலாஸஹஸிதம் ஶ்வஸிதம் ஸமீரோ
ஜிஹ்வா ஜலம் வசநமீஶ ஶகுந்தபங்க்தி: |

ஸித்₃தா₄த₃ய: ஸ்வரக₃ணா முக₂ரந்த்₄ரமக்₃நி-
ர்தே₃வா பு₄ஜா: ஸ்தநயுக₃ம் தவ த₄ர்மதே₃வ: || 6||

Meaning in English 

O Lord! Controller of the Universe, Your sportive smile constitutes Maya, Your Cosmic Creative Power; Your breath is the wind; Your tongue is water, Your speech the formation of beautiful birds; 

Your tunes (The seven notes Sa,Ri, Ga, Ma, Pa, Da, Ni) are the divine Siddhas, and Gandharvas; Your mouth is the God of Fire, arms the Devas, and Your twin breasts are the God of Dharma representing Pravriti and Nivriti Dharmas !

Meaning of the Sanskrit Words 

माया	 - Maayaa (Thy cosmic creative power)

विलास-हसितं - is (Thy) charming smile

श्वसितं समीर: - (Thy) breath is the wind

जिह्वा जल - (Thy) tongue is water

वचनम्- speech

ईश O Lord !

शकुन्त-पङ्क्ति - is the birds' chirping in formation

सिद्ध-आदय: स्वरगणा: - (Thy) voice is the Sidhdhaas (and other divine artists)

मुख-रन्ध्रम्-अग्नि: - (Thy) mouth is fire

देवा भुजा: - (Thy) arms are the gods (Devaa)

स्तनयुगं तव धर्मदेव: - Thy breasts is the Dharmadeva (the god of righteousness)

அந்த நாளும் வந்திடாதோ

மெய்யறிவு மாணவனின் ஏக்கம்

அறியாமைக் காட்டதனில் தனியாகத் திரிந்தலைந்த என்னை,

நெறியுடன் வாழ வல்லமைதந்திட்ட என் தாய் தந்தையரின்

பெருந்தவத்தால் புவிதனில் பொருள் புகழ் பெருமை பெற்றிடினும்,

சிறியோன் என் சிந்தனையில் சிறிதேனுமில்லை மறைஞானம்!!

திரையதனில் தோன்றும் வண்ணமாயையே வாழ்வென அறிந்து,

நரைமுடியும் விழுதருணம் விழைகிறேன் நான்மறை கூறும்

சச்சிதானந்த மெய்ப்பொருளை அறியும்  வேதாந்த வழிதனை!

நடவினையின் ஆட்சிதனை தடை செய்ய இயலுமோ தரணியிலே!!

தூயஇருப்பெனும் அறிவான அனந்தமே அறுதி உண்மையென

மருவேதுமின்றி எதிர்மறை மொழியில் உரைத்தன நான்மறைகள்!

இருப்பெனும் அறிவானந்தமே அறுதி உண்மையெனின், இந்த

இறைவன் எங்கிருந்து வந்தான் இடைச்சாதி நானென்று ?

பொறிபுலன்களை புறம் நோக்கிப் படைத்து, கண்ணிமைக்கும்

நொடிப் பொழுதில் காதம்பல கடந்திடும் மனம் கொடுத்து,

பொருள் நிறை அண்டம்தனை சார்ந்திராதே பற்றுடனே என

சாரதியாய் அவன் வந்து சாத்திரம் சொல்வது சரிதானோ ?

சிறியோன் என் சிந்தையுதி இச்சிதறல்களைச் சீரழித்து, என்

மனதினிலந்த  உண்மைதனை உணர்த்திட, அண்ட பிண்டத்தில்

மாயக்காட்சிகள் நடத்திடும் மாயோனான அந்த இறையே,

ஆத்மா எனும் நான் என்ற மறை மொழியை உள்ளாய்ந்தால்,

சிறுவித்து ஒன்றில் பெருந்தருவை மறைத்துப் பின் சிறப்பித்து,

சிலந்தி வலை வழியே அண்டப் பரிமாண தத்துவத்தை விவரித்து

அலங்கலில் தோன்றும் அரவு கொண்டு ஐம்பெரும் பூதம் விளக்கி

அலங்காரப் பொன் நகைகளில் அடிப்படைக் காரணம் சொல்லி,

கார் இருள் நிறை கருவறை கிழித்து தாய்க்கு வலிதந்து

பாரினில் எனை இறக்கிப் பின் காலன் வரும் நேரமதில்

பாசஉறவுகளுக்கு வலிதந்து காலிலா கட்டிலில் செலுத்தி

நாடகமிப்படி நடத்திடும் மாயோனே அந்த நான் அன்றோ!!

அலங்கலான அந்த நான் யாரென்றறியா அரவே இந்த நான்!

நிழலை நிஜமென இறுகப் பற்றிடும் மருவுநாயகன் இந்த நான்!

பற்றுதல் பலவிதம் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அமைச்சகம்! அப்

பற்று அமைச்சரவையின் பிரதமரே அறியாமையாம் இந்த நான்!!

நீரினைப் இறுகப்பற்றினால் குளத்திலே நீந்த இயலாது - எனினும்

பிறவிப் பெருங்கடல் நீந்திட இறுகப்பற்றுவது இவ்வுடலையன்றோ !

சிறுவித்து ஒன்றைப் பெருந்தருவாய் சிறப்பிக்கும் அந்த நான்

சிரித்திட்டேன் விந்தையுடன் இந்த நான்தனின் மடமை கண்டு!!

ஆதிஅந்தமிலா பரமனுரையாம் மறையோதும் வேதவிற்பன்னரும்

காயமே பொய்யதனால் காண்பாய் உனையெனும் ஞானியும்

கருமமே கண்ணென மெய்வருத்தி வாழ்ந்திடும் யோகியும் கூறிடும்

காலத்தால் அழியா வாழ்வியல் உண்மையன்றோ அந்த நான்!!

அந்த நாளும் வந்திடாதோ அந்த நானை இந்த நான் அறிந்திட!!

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 5. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 5

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/401gtan38laea5ojba4mg/Verse-5.mp3?rlkey=a561mqktct5s89b9ce7691lxs&dl=0

Sanskrit Verse

निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष:
कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।
लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ
तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥

Translation in Tamil 

அறுகுணமுடை ஆண்டவனே, உந்தன்
கடைவிழிப் பார்வையில் அண்ட படைப்பு!
காணும் திசைகள் எட்டும் உன்னிரு செவி!
நாசிகள் இரண்டும் பரியேறு பரிதி குமரர்!

உன்னிரு இதழ்களும் அவாவுடன் பணிவு!
உனதெழில் பல்வரிசை வின்மீண்கள்!
உன் கடைவாய் பற்கள் காலனவனன்றோ !! 6.5

Transliteration in English 

nishsheShavishvarachanaa cha kaTaakshamOkshaH
karNau dishO(a)shviyugalaM tava naasike dve |

lObhatrape cha bhagavannadharOttarOShThau
taaraagaNaashcha radanaaHshamanashcha damShTraa ||

Transliteration in Tamil 

நிஶ்ஶேஷவிஶ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ:
கர்ணௌ தி₃ஶோ(அ)ஶ்வியுக₃லம் தவ நாஸிகே த்₃வே |

லோப₄த்ரபே ச ப₄க₃வந்நத₄ரோத்தரோஷ்டௌ₂
தாராக₃ணாஶ்ச த₃ஶநா: ஶமநஶ்ச த₃ம்ஷ்ட்ரா || 5||

Meaning in English 

“Your side-long glance constitutes the creation of all the fourteen worlds. Hence, it is needless to say that the closure of Your eye lids is the Great Deluge; Your ears are the Directions; the two Nostrils are the pair of Ashwini devas; Your Upper and lower lips represent modesty and greed respectively; Your Teeth, the Stars and Your Molars is Yama, the God of Death”

Meaning of the Sanskrit Words 

निश्शेष-विश्व-रचना च - the creation of the whole universe

कटाक्ष-मोक्ष: - is by extending a glance of Thy eye

कर्णौ दिश: - (Thy) ears are the directions (quarters)

अश्वियुगलम् - the two Ashvinidevas

तव नासिके द्वे - are Thy two nostrils

लोभत्रपे च - greed and modesty

भगवन् - O Lord!

अधर-उत्तर-ओष्ठौ - (are Thy) lower and upper lips

तारा-गणा: - च - and the galaxy of stars

दशना: - are Thy teeth

शमन: च दंष्ट्रा - the molars are Yama (the god of death

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களுக்கு விளக்கவுரைகள், புத்தக வடிவில் குறைவு. சமூக வலைத் தடங்களில் பல பெரியோர்கள் தங்களது விளக்கங்களை ஒளி அல்லது ஒலிப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

அடியேனின் ஏட்டறிவு, கீழ்காணும் நூல்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றிலிருந்து.

  1. பகவத் கீதை – தத்துவ விவேசினீ – கீதா பிரஸ்ஸின் விரிவுரை
  2. திருக்குறள்.
  3. திருமந்திரம்.
  4. தாயுமானவர் பாடல்கள்
  5. சுவாமி சின்மயானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரை நூல்,
  6. சுவாமி பரமார்த்தானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரைகளை தொகுத்து வெளியிடப்பட்ட எழுத்துப் பதிவுகள்,
  7. பகவான் ரமணரின் தமிழாக்கம்,
  8. குருநாதர் சுவாமி ஓம்காரானந்தரின் வேதாந்த சொற்பொழிவுகள்,
  9. பகவான் ரமணரின் உள்ளது நாற்பது

பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான் படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அப்படி எடுத்துக்கொண்ட குறிப்புகளின் தொகுப்பினை புத்தக வடிவத்தில் (இரண்டு பாகங்களாக) வெளியிட்டுள்ளேன்.

  1. முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்க முயற்சி.
  2. இரண்டாவது பாகம் விளக்கவுரைகளின் தொகுப்பு.

இந்தப் புத்தகம், உலகுக்கு என் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி நான்,
அத்வைதவாஞ்சையதால், அரியகொம்பில்தேனைஇச்சித்தபடிஆகும்

தாயுமானவர்

என்ற தாயுமானவரின் சொல்லே எனது நிலை.

ஞான யோகத்தில், அரிய முதல்நிலை மாணவனாம் ஜனகருக்கு உரையாடல் வழி உபதேசிக்கப்பட்டதை, அறிவிலியாகிய நான், புத்தக வடிவில் வெளியிடுவது என்பது, என் அகங்காரத்தை அல்ல, மடமையைக் குறிக்கிறது என்றே கூறலாம்.

இந்த புத்தகங்களை நோஷன் பிரஸ் (Notion Press) “அமேஸான் (Amazon) ”, “ப்ளிப்கார்ட் (Flipkart) முதலிய விற்பனை தளங்களிலிருந்து பெறலாம். அதற்கான இணைப்புகள் இதோ:

முதல் பாகம் – ஸ்லோகங்களின் தமிழாக்கம்

https://notionpress.com/read/ashtavakra-gita-part-1-slokas

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-1-slokas/p/itme30ee853bf8ac?pid=9798894989969&cmpid=product.share.pp&_refId=PP.ed8a7124-be45-41d7-8599-0642a234c18f.9798894989969&_appId=CL

https://www.amazon.in/dp/B0DB1GT65M

இரண்டாம் பாகம் – விளக்கவுரை

https://notionpress.com/read/ashtavakra-gita-part-2

https://www.amazon.in/dp/B0DBDH46XG

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-2/p/itme77a5d62c2674?pid=9798895192696&cmpid=product.share.pp&_refId=PP.57d316e7-5e99-40c7-a330-59e9a55e808c.9798895192696&_appId=CL

இந்த புத்தகம் நிச்சயமாக வேதாந்தத்தின் முன்நிலை மாணவர்களுக்கோ அல்லது கற்றறிந்த பெரியோருக்கோ அல்ல. அறியாமையைனும் இருண்ட ஆழ்வனத்தில், மருண்டு அலையும் என்போன்ற சிறியோருக்கு, மின்மினிப்புச்சியின் ஒளியென உதவும் முயற்சியே இந்த புத்தகம்.

இந்த புத்தகங்களின் விற்பனையில் வரும் ஈட்டு அனைத்தும் என்னுடையது அல்ல. அது இறை பணிக்கே என்பது எனது உறுதிமொழி.

சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டீரெனில், மழலை கூறும் குழவியின் தடுமாற்றம் என்று கருதி, அவைகளை சுட்டிக்காட்டிடுவீர். அறிந்துணர முயன்றிடுவேன்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!