ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 2

ஸ்லோகம்

क्षित्यादिनामवयववतां निश्चितं जन्म तावत्
तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्ठानहीनम् ।
नाधिष्ठातुं प्रभवति जडो नाप्यनीशश्च भावः
तस्मादाद्यस्त्वमसि जगतां नाथ जाने विधाता ॥

க்ஷித்யாதிநாமவயவவதாம் நிஶ்சிதம் ஜந்ம தாவத்
தந்நாஸ்த்யேவ க்வசந கலிதம் கர்த்ரதிஷ்டாநஹீநம் ।
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யநீஶஶ்ச பாவ:
தஸ்மாதாத்யஸ்த்வமஸி ஜகதாம் நாத ஜாநே விதாதா॥

தமிழாக்கம்

புவிமுதல் அங்கமுடை பூதங்களனைத்திற்கும்
உண்டு தோற்றம் என்பது உறுதிபட நிச்சயம் !
வடித்தவனெனும் நிலைகளம் இலாமல் அவை
வடிவங்களென அறியப்படுவதே இல்லை !
தாவரமும் தன்வயமற்ற சங்கமமும் ஒன்றினைத்
தோற்றுவிக்க இயலாது என்பதனால், நாதனே
உலகிற்கு முதல்வனாய் இருந்திடும் உனையே
உருவாக்கமதின் உட்பொருளென அறிவேனே !! 

சொற்களின் பொருள்

நாத - உலகின் தலைவரே!

க்ஷித்யாதிநாம - க்ஷிதி ஆதிநாம - பூமி முதலான (பூமி, பஞ்ச பூதங்கள்) 

அவயவவதாம் - உறுப்புகளுடன் கூடியவைகளுக்கு

ஜந்ம - தோற்றம் (தோன்றியிருக்க வேண்டும்)

தாவத் - என்பது 

நிஶ்சிதம் - உறுதி

கர்த்ரு அதிஷ்டாந ஹீநம் - உருவாக்கியவனின் இருப்பு இல்லாமல் 

க்வசந - எப்பொருளும்

தத - அவை

கலிதம் ஏவ - அறியப்பட்டதே

நாஸ்தி - இல்லை

ஜடோ - உயிரற்ற பொருளால் (ஜடத்தால்) 

அதிஷ்டாதும் - ஒன்றைப் படைப்பதற்கு

ந ப்ரபவதி - இயலாது

அநீஶஶ்ச பாவ: அபி - (வைரயறைகளுடன் கூடிய, தன்வயமற்ற) உயிர,களாலும் 

ந (ப்ரபவதி) - முடியாது

தஸ்மாத் - எனவே

த்வம் - நீங்கள்

ஜகதாம் - உலகிற்கு

ஆத்யஹ - முதல்வராக (காரணமாக)

அஸி - இருக்கிறீர்கள் 

விதாதா - தங்களைப் படைப்பின் காரணமாக

ஞாதே - அறிகிறேன்

விளக்கம்

இந்த பிரபஞ்சம் எண்ணற்ற நிறங்களையும், எண்ணற்ற வடிவங்களையும் உடையதாக இருக்கிறது. இந்த படைப்பு தோன்றியிருக்கிறது என்பது உண்மை. மேலும் படைப்பவன் (கர்த்தா) இல்லாமல், பொருள் இல்லாமல் எந்த ஒரு படைப்பும் இல்லை. எனவே கடவுள் இருக்கிறார். இதனை வேதம் கூறுகிறது. “உலகு ஆதி பகவன் முதற்றே” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த உலகானது கடவுளை முதலாக உடையதுதான். உலக முதல்வன் ஒருவன் உளன்.  உலகத்திற்கு ஆதி இறைவன். 

பெரியோரின் சொற்களே இந்த இறைவனின் இருப்பிற்கு ஆதாரம் (ப்ரமாணம்). திருவள்ளுவரே கூறுகிறார்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் 

என்று குறள் 850ல்.

இந்த ஸ்லோகம் “ஈஸ்வர அர்த்தித்வ நிரூபணம்” – கடவுளின் இருப்பைக் கூறும் ஸ்லோகம் இது. மேலும் 

உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவை தோன்றுகின்றன. உணர்வற்ற பொருளால் இந்த உலகைப் படைக்க முடியாது. சிற்றறிவு உள்ள உயிர்களால் இந்த உலகைப் படைக்க இயலாது.

என்கிறது இந்த ஸ்லோகம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நம்முடைய வரையறைகள் நமக்குத் தெரிகின்றது. நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி “ஆனந்தமயமாய்,  அறிவாய்   இருக்கிறது” என்று கூறுகிறது வேதம். 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளே …..

என வானவில்லின் தோற்றத்திற்கு இறைவனை ஒப்பிடுகிறது நாலடியார். எப்போது வரும், எப்போது மறையும் என்பது நமக்குத் தெரியாது.

அத்தகைய “கடவுள் இல்லை என்று சொல்பவன் தன்னையே இல்லை என்று சொல்பவனாகிறான், கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்பவன் தன்னைக் கடவுளாகவே உணர்கிறான்” என்றும் கூறுகிறது வேதம். எனவே கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், இறைவனை மறவா மனம் தேவை.

ஜகத் (படைப்பு) காரியம். காரணமில்லாமல் காரியம் இல்லை. ஜடப்பொருளோ, ஜீவர்களோ காரணமாக இருக்க முடியாது. எப்படியோ, காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். இறை தத்துவம் இருக்கிறது என்பதற்கு இது ப்ரமாணம்.

ஆக, இறைவன் இருக்கிறான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. அறிவுப்பூர்வமான நம்பிக்கை. எப்படி உடலுக்குப் பின்னால் உயிர் தத்துவம், உணர்வுத் தத்துவம் இருக்கிறதோ, அப்படி இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆதாரமாக ஓர் உயிர் தத்ததுவம் இருந்தே ஆக வேண்டும் என்று அறிவுப்பூர்வமான அநுமானத்தால் இறையின் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே வள்ளுவர் முதல் குறளில் பயன்படுத்துகிறார்.

எழுத்தெல்லாம் அகர முதல - இது தெரிந்தது
உலகு ஆதிபகவன் முதற்றே - இது தெரியாதது

தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்துகொள்வது. இந்த ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

  1. அனைத்திற்கும் மூலகாரணம் எது?
  2. அந்த மூல காரணம் இருக்கிறதா, இல்லையா?
  3. இருந்தால், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
  4. அதனுடன் தொடர்பு தேவையா?
  5. அத்தகைய தொடர்பால் என்ன கிடைக்கும்?

என விசாரம் செய்யத் தூண்டும் ஸ்லோகம் இது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 1

ஸ்லோகம்

कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं
यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव ।
भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம்
யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ |  
பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் 
ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ

தமிழாக்கம்

எவரிடம் விதம்விதம் சிருட்டியின் தோற்றம் 
அவர்தனின் பெருமை அறிய வல்லார் உளரோ!
அடைவர் உனை இருப்பினும் பேரன்பினாலே !
அவா எனக்கு அன்பினால் உனைப் போற்றவே !
அடியனின் இம்முரட்டுத் துணிவு பொறுத்திட்டு
அருள் புரிந்திடுவாயே விண்ணவரின் தேவனே !! 1 

சொற்களின் பொருள்

தேவதேவ - தேவர்களுக்கெல்லாம தேவனாக விளங்குபவனே!

யஸ்மாத் - எவரிடமிருந்து

இத்தம் - இத்தகைய 

விவிதரசனா - விதவிதமான (ஆச்சர்யமான)

ஏஷா - இந்த 

ஸ்ருஷ்டி - படைப்பானது

பபூவ - தோன்றியதோ (தோன்றி, நிலைபெற்று, ஒடுங்குகிறதோ)

தே- (அத்தகைய சிறப்பு வாய்ந்த) உம்முடைய

பரம் - மேலான

ப்ரபாவம் - சிறப்புகளை 

கஹ - எவர் 

போத்தும் - அறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு

ப்ரபவதி - வல்லார் ?

ததபி - இருந்த போதிலும்

த்வாமஹம் - த்வம் இஹம் - நீங்கள் இங்கு

பக்திக்ராஹ்யா - பேரன்பினால் அடையப்படுபவராக இருக்கிறீர்

அஹம் - நான்

த்வாம் - உங்களை 

பக்திமாத்ராத் - பக்தியினால் மட்டும்

ஸ்தோதும் - போற்றித் துதிப்பதற்கு

வாஞ்சாமி - விரும்புகிறேன்

மே- என்னுடைய

இதம் - இந்த 

அதிமஹத - அதிக முரட்டுத்தனமான 

ஸாஹஸம் - துணிச்சலை

ஸஹஸ்வ - பொருத்தருள்வீராக

விளக்கம்

“தேவர்களுக்கு தேவனே! எவரிடமிருந்து இத்தகைய விதவிதமான, வியப்பான இந்த படைப்பானது தோன்றியதோ, அத்தகைய சிறப்பு வாய்ந்த உம்முடைய மேலான, தன்நிகரற்ற சிறப்புகளை, பெருமைகளை, எவரே அறிவதற்கு வல்லவர்? இருந்தபோதிலும், நீங்கள் இங்கு பேரன்பினால் அடையப்படுபவர். நான் உங்களை பக்தியினால் மட்டும் போற்றித் துதிப்பதற்கு விருப்பமுடையவனாக இருக்கிறேன். என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்று இறைவனின் இலக்கணம், பெருமை, அவனை உணரும் வழி இவற்றுடன் துவக்குகிறார் முதல் ஸ்லோகத்தில். இதில் அப்பையரின் பணிவினை நாம் அறியலாம்.

இறைவனின் பெருமை 

இறையின் பெருமையை புகழ்ந்து முடிக்க முடியாது. அதனால்தான்

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ!!

தனது பெருமை நோக்காது எத்துணை எளியவனாயும் போந்து எந்தச் செயலையும் திருவருள் காரணமாகப் பிறர் பொருட்டுச் செய்பவன் எங்கள் இறைவன். ஆகவே, புள்ளித் தோலை ஆடையாக உடுத்தமை, ஆலாலத்தை ஆரமுதாக உண்டமை முதலிய எல்லாம் அவனுக்குப் பெருமை ஆவனவேயன்றிச் சிறுமையாகா என “தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ” என்றார் மாணிக்கவாசகர். 

பகவத் கீதையில் (10.19) “நாஸ்த்1யன்தோ1 விஸ்த1ரஸ்ய மே”- தெய்வீக மகிமைக்கு முடிவே இல்லை என்றும், 

நான்தோ1 ‌ஸ்தி1 மம தி3வ்யானாம் விபூ4தீ1னாம் ப1ரந்த1ப1 |
ஏஷ தூ1த்3தே3ஶத1ஹ ப்1ரோக்1தோ1 விபூ4தே1ர்விஸ்த1ரோ மயா II

பகவத் கீதை 10.40

“எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே” என்றும் (10.40) 

பகவான் கண்ணன் கூறியதை நினைவு கூற வேண்டும்.

படைப்பெனும் வியப்பு

“குதம் ஆஜாதா குதம் இயம் வ்ருஷ்டி” – இவ்வுலகமும் உடலும் எங்கிருந்து வந்தது என்கிறது நாஸதீய ஸூக்தம் (6). 

“ஐன்மாத்ஸத் யதஹ” – பிரம்மம் என்பது யாரிடமிருந்து (உலகின்) தோற்றமும், எஞ்சிய பகுதியும் என்கிறது பிரம்ம சூத்திரம் 1.1.2. இதனை “தடஸ்ய லக்‌ஷணம்” என்பர், அதாவது படைப்பின் காரணத்தை அநுமாநம் செய்கிறோம். 

விதம் விதமான பல்வேறு படைப்பின் தோற்றம் என்பதற்கு “மனஸா அபி அசிந்தய ரசநா ரூபஸ்ய” என ஆதி சங்கராச்சார்யர், 

எண்ணற்ற விதவிதமான படைப்புகளின் ஆச்சர்யத்தை வர்ணிக்கின்றார். 

இதனையே

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன !!

என மாணிக்கவாசகர் கூறுகிறார். எனவே, படைப்பையும், படைப்பின் சிறப்பையும், படைப்பின் காரணமான பரம்பொருளையும் அனுதினமும் மறவாது சிந்தித்தல் வேண்டும். 

அன்பெனும் பக்தி

அத்தகைய இறைவன் “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை” என வள்ளலாரும், “பக்தி வலையில் படுவோன் காண்க” என மாணிக்கவாசகரும் கூறுகின்றனர்.

“ காதலாகி கணிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது” என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். 

“ப4க்1த்யா த்1வனன்யயா ஶக்1ய அஹமேவம்விதோ4 ‌ர்ஜுன | – அர்ஜுனா! அலாதியான கலப்படமற்ற பக்தியினால் மட்டுமே என்னை உன் முன்னால் நின்று இருக்கும் வடிவத்தில் அறிய முடியும்” என கண்ணன் கீதையில் (11.54) அறிவுறுத்துகிறான் இதனையே. 

சிவானந்த லஹரியில் ஆதி சங்கரரின் இந்த பக்தியின் வெளிப்பாட்டினை பல ஸ்லோகங்களில் காணலாம்.  ஆக, நிலையிலா இன்பத்தை தரக்கூடிய உலக இன்பப் பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்கி, நிலையான இன்பமே வடிவான இறையிடத்தில் அன்பை வைக்க வேண்டும். 

தேனுக்குள் இன்பம் கருப்போ ணிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

திருமந்திரம்

அத்தேனுக்குள் இன்பமென, ஊணுக்குள் ஒளிந்திருக்கும் இறைவனை ஊணுருகும் பக்தியாலே உணரமுடியும் என்பதை வலியுறுத்துகிறார் அப்பைய தீட்சிதர்.

அப்பையரின் பணிவு

இந்த ஸ்லோகத்தில்,  “ஸாஹஸம் மே ஸஹஸ்வ – என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்ற சொற்றொடரின் மூலம் அப்பைய தீக்‌ஷிதரின் அடக்கத்தை நாம் அறியலாம்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து 

திருக்குறள் 130

என்று திருவள்ளுவர் கூறுவது போல, கற்க வேண்டியதைக் கற்று (கற்று) , கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்து (கதம் காத்து), அடக்கமாக இருக்கும் (அடங்கல்) அப்பையரிடம் அறக்கடவுள் (தர்ம தேவதை) குடிகொண்டிருப்பதை, (அறம் செவ்வி ஆற்றின் நுழைந்து) அவரின் பணிவின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஆக,

  1. இறைவன் படைப்பிற்கு காரணம்
  2. இறைவனை முழுமையாக அறிய எவராலும் இயலாது
  3. அன்பினால் மட்டுமே அவரை உணரந்து கொள்ள முடியும்
  4. அன்பை வளர்க்க வேண்டுமெனில், ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனமுறுகிப் பாட வேண்டும்.
  5. பணிவுடன் பாட வேண்டும். அடக்கத்துடன் ஆண்டவனைப் போற்றிப் புகழந்து பாடினால், மனமாசுகள களையப்படும். மனம் தெளிவடையும். தெளிந்த மனம், இறைவனை க்ரஹிக்கும் ஆற்றல் பெறும்

இதுதான் இந்த ஸ்லோகம் நமக்கு அளிக்கும் அறிவுரை.

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 4. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 4

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/b2zqndhlg7wo25k0ou2ju/Verse-4.mp3?rlkey=8fmg3r4rh3a7wd9go050pw5mh&dl=0

Sanskrit Verse

  त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द
छन्दांसि केशव घनास्तव केशपाशा: ।
उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं
पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥

Translation in Tamil

அண்டமதின் ஆணிவேராம் ஈசனே
உன் சுழிமுனையே நீ உரை நான்மறை
சுருண்டிரு எழில் குழல் கருமுகில்!

இரு புருவம் இறைஅயனின் இல்லம்
இமை இரண்டும் இரவு பகல்
இருவிழி என்றும் ஒளிரும் பரிதி !! 6.4

Transliteration in English

tvadbrahmarandhrapadamiishvara vishvakanda
Chandaamsi keshava ghanaastava keshapaashaaH |

ullaasichilliyugalaM druhiNasya gehaM
pakshmaaNi raatridivasau savitaa cha netre ||

Transliteration in Tamil

த்வத்₃ப்₃ரஹ்மரந்த்₄ரபத₃மீஶ்வர விஶ்வகந்த₃
ச₂ந்தா₃ம்ஸி கேஶவ க₄நாஸ்தவ கேஶபாஶா: |

உல்லாஸிசில்லியுக₃லம் த்₃ருஹிணஸ்ய கே₃ஹம்
பக்ஷ்மாணி ராத்ரிதி₃வஸௌ ஸவிதா ச நேத்ரை || 4||

Meaning in English

O Lord who are the root cause of the Universe!  Your” Brahmarandhara (an aperture on crown of the head) is the Vedas. O Keshava, one with luxuriant hair and the Slayer of the demon Kesi! “Your” ornamented hair are the dark clouds. “Your” delightful pair of eyebrows are the abode of Brahma, the Creator. “Your” eye-lashes are night and day and “Your” eyes are the sun

Meaning of the Sanskrit Words

त्वत्-ब्रह्मरन्ध्रपदम्- Thy Brahmarandhra area (the psychic orifice on the crown of the head)

ईश्वर विश्वकन्द - O Lord! Thou the source of the universe!

छ्न्दांस - (are) the Vedas

केशव - O Keshava!

घना: तव केशपाशा: - the dark clouds are Thy locks of hair

उल्लासि-चिल्लि-युगलं - the delightful two eyebrows

द्रुहिणस्य गेहं - are the abode of Brahma

पक्ष्माणि - the eyelashes

रात्रि-दिबिसौ -=are night and day

सविता च नेत्रे - and the eyes are the Sun

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 3. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 3

Link to Audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/12u6hjxt5cblqjqdlcuml/Verse-3.mp3?rlkey=b685prkio4kq0nw9lalku3o1g&dl=0

Sanskrit Verse

ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु
फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।
एवं जगन्मयतनो जगदाश्रितैर-
प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥

Translation in Tamil

உன் மிடறு மகர, முகம் ஜன, நுதல் தவ, சிரம் சத்ய
உலகென ஈரேழு உலகம்தனை உன் உள்ளடக்கி
உன்னுடல் உலகப் பொருட்கள் அனைத்தாலுமே – அந்த
உலகுடலோன் உனைத் துதிப்பேன் குருவாயூரப்பனே 6.3

Transliteration in English

griivaa mahastava mukhaM cha janastapastu
phaalaM shirastava samastamayasya satyam |
evaM jaganmayatanO jagadaashritairapyanyairnibaddhavapuShe
bhagavannamaste ||

Transliteration in Tamil

க்₃ரீவா மஹஸ்தவ முக₂ம் ச ஜநஸ்தபஸ்து
பா₂லம் ஶிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் |
ஏவம் ஜக₃ந்மயதநோ ஜக₃தா₃ஶ்ரிதைர-
ப்யந்யைர்நிப₃த்₃த₄வபுஷே ப₄க₃வந்நமஸ்தே || 3||

Meaning in English

O Lord! Thy body is the whole universe. Maharloka is Thy neck. Janaloka is Thy face. Tapoloka is Thy forehead. Satyaloka is Thy head. Of all the other things of which the universe is made, Thy body is also conceived of being made up of all that. O Lord! salutations to Thee.

Meaning of the Sanskrit Words

ग्रीवा मह: - तव - Thy neck is Maharloka

मुखं च जन: - and face is Janaloka

तप: - तु फालं Tapoloka, indeed, is forehead

शिर: - head

तव समस्तमयस्य of Thee who are everything

सत्यम् - is Satyaloka

एवं - in this manner

जगन्मयतनो - whose body is the universe!

जगदाश्रितै:-अपि-अन्यै: - of all other things forming the universe

निबद्धवपुषे - whose body is conceived as being made up of

भगवन् नम: - ते - O Lord! Salutations to Thee

Narayaneeyam -Dasakam 5 – Sloka 10; நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 10

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/9f2lk4g9g026zo40k0u35/5.10.mp3?rlkey=p9mnsmnm8uouulu3twmvpnmon&dl=0

Introduction 

In Dasakam 5,starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Narayana Bhattathri has so far outlined the evolution of 

1. Purusha,
2. Prakriti,
3. Mahat,
4. Ahamkara
5. Fourteen Presiding deities
6. Four functions of Inner conscience,
7. Five Sense and five action organs
8. Five Tanmaatras and the five Pancha Bhootas.
9. Creation of Hiranyagarbha, the Golden Egg.

Concluding this Dasakam, Bhattathri brings out the final evolution of the Virat Purush into the fourteen worlds.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

இதுவரை

1. புருஷன்,
2. பிரகிருதி,
3. மஹத்,
4. அஹம்காரா
5. பதினான்கு அதிபதிகள்
6 உள் மனசாட்சியின் நான்கு செயல்பாடுகள்,
7. ஐந்து உணர்வுகள் மற்றும் ஐந்து செயல் உறுப்புகள்
8. ஐந்து தன்மாத்திரங்கள் மற்றும் ஐந்து பஞ்ச பூதங்கள்.
9. ஹிரண்யகர்பம் எனும் பொன் முட்டை


என்பவைகளின் பரிமாணத்தை விளக்கினார் நாராயண பட்டத்ரி.இப்போது கடைசியாக, விராட ரூபத்தை விளக்குகிறார இந்த ஸ்லோகத்தில்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:

निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।

साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको

निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

தமிழில் ஒலிபெயர்ப்பு 

அண்ட₃ம் தத்க₂லு பூர்வஸ்ருஷ்டஸலிலே(அ)திஷ்ட₂த் ஸஹஸ்ரம் ஸமா:

நிர்பி₄ந்த₃ந்நக்ருதா₂ஶ்சதுர்த₃ஶஜக₃த்₃ரூபம் விராடா₃ஹ்வயம் |

ஸாஹஸ்ரை: கரபாத₃மூர்த₄நிவஹைர்நிஶ்ஶேஷஜீவாத்மகோ

நிர்பா₄தோ(அ)ஸி மருத்புராதி₄ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் || 10||


தமிழாக்கம்

படைத்த அப் பொன் அண்டம், நீ முன்

படைத்த பேராழிதனில் காலமாயிரம்

உறைந்த பின் உடைத்திட்டு இரேழு

உலகம் படைத்திட்டு விராடமெனும்

அளவிலா பேர் உருவமென பொறிபுலன்

ஆயிரமாயிரமென அனைத்திலும் பறவி

காட்சி அளித்தனையே குருவாயூரப்பா

காத்திடுவாய் எந்தன் துயர் நீக்கிடுவாய் 5.10

Transliteration in English 

aNDaM tatkhalu puurvasR^iShTasalile(a)tiShThat sahasraM samaaH
nirbhindannakR^ithaashchaturdashajagadruupaM viraaDaahvayam |
saahasraiH karapaadamuurdhanivahairnishsheShajiivaatmakO
nirbhaatO(a)si marutpuraadhipa sa maaM traayasva sarvaamayaat

Meaning in English 

This golden egg was submerged in the primeval creation of causal water,

And was divided by you in to fourteen parts and you called it Virat,

And you became all the beings yourself and existed as Virat Purusha,

Along with thousands of hands, legs as well as heads,

And Oh Lord of Guruvayur, you who are the Virat Purusha,

May be kindly pleased to save me from all the diseases. 5.10

Meaning of the Sanskrit Words 

अण्डं तत्-खलु - that Brahamanda, indeed

पुर्व-सृष्ट-सलिले- in the already created Cosmic Waters

अतिष्ठत् - (which) remained

सहस्त्रं समा: - for a thousand years

निर्भिन्दन - (Thou) breaking it open

अकृथा: - Thou did make (it)

चतुर्दश-जगत्-रूपं - in the form of the fourteen worlds

विराट-अह्वयम् - known as 'Virat Swarupa'

साहस्त्रै: करपादमूर्धनिवहै: - with thousands of hands, feet and heads

निश्शेष जीवात्मक: - as all beings (Samashti - total life form of all beings)

निर्भात: असि - Thou did shine (manifest Thyself)

मरुत्पुराधिप - O Lord of Guruvayur!

स मां त्रायस्व - That Thou (of such nature) protect me

सर्व-आमयात् - from all ailment

இறை அருளால் தசகம் 5 முடிவுற்றது.

This ends Dasakam 5.

Narayaneeyam -Dasakam 5 – Sloka 9; நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 9

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/abacumujc4xcdzra7ecov/5.9.mp3?rlkey=oiw23itsqyhcqp6o42zxlrscy&dl=0

Introduction 

In Dasakam 5,starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Narayana Bhattathri has so far outlined the evolution of 

1. Purusha,
2. Prakriti,
3. Mahat,
4. Ahamkara
5. Fourteen Presiding deities
6. Four functions of Inner conscience,
7. Five Sense and five action organs
8. Five Tanmaatras and the five Pancha Bhootas.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

இதுவரை

1. புருஷன்,
2. பிரகிருதி,
3. மஹத்,
4. அஹம்காரா
5. பதினான்கு அதிபதிகள்
6 உள் மனசாட்சியின் நான்கு செயல்பாடுகள்,
7. ஐந்து உணர்வுகள் மற்றும் ஐந்து செயல் உறுப்புகள்
8. ஐந்து தன்மாத்திரங்கள் மற்றும் ஐந்து பஞ்ச பூதங்கள்.

என்ற 26 தத்துவங்கள் (கூறுகள்), 14 அதிபதிகளின் பரிமாணத்தை விளக்கினார் நாராயண பட்டத்ரி.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-
नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।
त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-
शचेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥

தமிழில் ஒலிபெயர்ப்பு

ஏதே பூ₄தக₃ணாஸ்ததே₂ந்த்₃ரியக₃ணா தே₃வாஶ்ச ஜாதா: ப்ருத₂ங்-
நோ ஶேகுர்பு₄வநாண்ட₃நிர்மிதிவிதௌ₄தே₃வைரமீபி₄ஸ்ததா₃ |
த்வம் நாநாவித₄ஸூக்திபி₄ர்நுதகு₃ணஸ்தத்த்வாந்யமூந்யாவிஶம்-
ஶ்சேஷ்டாஶக்திமுதீ₃ர்ய தாநி க₄டயந் ஹைரண்யமண்ட₃ம் வ்யதா₄: ||



தமிழாக்கம்

பஞ்ச பூதங்களும், அந்தகரணமும், இரு
பஞ்ச பொறி புலன்களும், அவர்தம்
அபிமான தேவர்கள் ஒவ்வொருவராலும்,
அண்டம்தனைப் படைத்திட இயலாது
அவர் உன் அடிபணிந்து உன் துதிபாட
ஆண்டவன் நீ அவர்தம் உள்நிறைந்து
ஊக்குவித்து வலிமை தந்து ஒருமித்து
பொன்அண்டமெனும் இயலுலகைப்
படைத்தனையே குருவாயூரப்பனே!

Transliteration in English 

ete bhuutagaNaastathendriyagaNaa devaashcha jaataaH pR^ithak
nO shekurbhuvanaaNDa nirmitividhau devairamiibhistadaa |
tvaM naanaavidha suuktibhirnutaguNastattvaanyamuunyaavishanshcheShThaa
shaktimudiirya taani ghaTayan hairaNyamaNDaM vyadhaaH ||

Meaning in English 

O Lord! Even though all these elements, sense organs , the organs of action, and their presiding deities came into existence, they could not by themselves create the Brahmaanda. Then the presiding deities glorified Thee by various hymns and Thou entered into all of them, activated them and combining them, created the Hiranya Andam (the Golden Egg).

Explanatory Notes 

In this Sloka, Bhattathri reiterates that it is because of the desire of the  Lord Himself, He decided to enter into these 26 inanimate elements and generated creative power and united them in proportion and produced a form of a Golden Cosmic Egg  as His own body, based on the pleas of the fourteen presiding deities.

We must bear in mind that the focus of Dasakam 5 so far, has been on the evolution of the Cosmic Egg or the Virat Rupa of the Brahman and should not be mixed up with the evolution of human body which is essentially identical to the one happening in the Cosmos. At the same time we shouldn’t forget that after all what is happening in the Cosmos do happen in our body too.

விளக்க குறிப்பு

இந்த ஸ்லோகத்தில், பட்டத்திரி, பதினான்கு தலைமை தெய்வங்களின் வேண்டுகோளின் அடிப்படையில், இறைவன் தனது விருப்பத்தின் காரணமாக, இந்த 26 உயிரற்ற கூறுகளுக்குள் நுழைய முடிவு செய்து, படைப்பு சக்தியை உருவாக்கி, அவற்றை விகிதாசாரத்தில் இணைத்து, ஒரு பொன் அண்ட முட்டையின் வடிவத்தை தனது சொந்த உடலாக உருவாக்கினார் என்று மீண்டும் வலியுறுத்துகிறார்.

இதுவரை தசகம் 5-ல் கூறப்படுவது, அண்ட பொன் முட்டை (ஹிரன்ய கர்ப்ப) அல்லது பிரம்மனின் விராட ரூபத்தின் பரிணாம வளர்ச்சி. இதி ஒரு சமஷ்டி நிலை கண்ணோக்கம். நடைமுறை நிலையில், மனித உடலின் பரிணாம வளர்ச்சியுடன் (வ்யஷ்டி நிலை) ஒப்பிட்டு கலந்துவிடக் கூடாது. “அண்டத்தில் நடப்பது பிண்டத்திலும்” என்ற சொல்லிற்கிணங்க, இப்பரிணாமங்களை பிண்டத்திலும் காணலாம் என்பதனையும் மறந்துவிடக் கூடாது.

Meaning of the Sanskrit Words 

एते भूतगणा: - all these elements

तथा-इन्द्रियगणा:- and the sense organs and the organs of action

देवा: च - and their presiding deities

जाता: - which had come into existence

पृथक् नो शेकु: - were not capable by themselves

भुवन-अण्ड-निर्मिति-विधौ - of creating the Brahmaand (the cosmic whole)

देवै: अमीभि: तदा - therefore these presiding deities, then

त्वं नाना-विध-सूक्तिभि:-नुत-गुण:- sung Thy excellences by means of various hymns

तत्त्वानि-अमूनि-आविशन्- (then Thou) entering these categories

चेष्टा-शक्तिम्-उदीर्य - and activating them

तानि घटयन् - and combining them

हैरण्यम्-अण्डम् - the Golden Egg (the potential universe)

व्यधा: - create

Narayaneeyam -Dasakam 5 – Sloka 8 நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 8

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/urhzb8o8qvnsmdypu34u1/5.8.mp3?rlkey=waojivlof6jfv82ec0jkn6ikp&dl=0

Introduction 

In Dasakam 5, Narayana Bhattathri provides an evolution of the Cosmic Form of the Brahman (in line with Srimad Bhagavatham) to help us focus on the “Virat Rupa” of Brahman. 

Starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Bhattathri in the previous Slokas outlined the evolution of Purusha, Prakriti, Mahat, Ahamkara and associated deities for the five organs of perception, five organs of action and the four aspects of inner conscience.He then outlined the evolution of the inner conscience, the sense and action organs.

Now in this Sloka, the evolution of additional elements is highlighted.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

பிரபஞ்சத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் (சங்கல்பம்) அல்லது பரமாத்மாவிற்குள் உள்ள சித்தத்துடன் தொடங்கி, முந்தைய ஸ்லோகங்களில் பட்டத்திரி, புருஷன், பிரகிருதி, மஹத், அஹம்காரம் மற்றும் உள்மனசாட்சியின் நான்கு அம்சங்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புகள், ஐந்து செயல் உறுப்புகளுக்குக்குத் தொடர்புடைய தெய்வங்களின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார். பின்னர், நான்கு அம்சங்கள் நிறைந்ந மனம், உணர்வு மற்றும் செயல் உறுப்புகளின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார்.

இப்போது இந்த ஸ்லோகத்தில், ஸமஷ்டி நிலையில் உருவாகும் அடுத்த தத்துவங்களின் வெளிப்பாட்டினை விளக்குகிறார்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं

तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।

एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं

भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

தமிழில் ஒலிபெயர்ப்பு

ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்
தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |
ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்
பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||



தமிழாக்கம்

ஒலிவழி விண்ணும் விண்வழி தொடு உணர்வும்

தொடுதல்வழி காற்றும் காற்றின் வழி வடிவமும்

வடிவம்வழி அழலும் அழல்வழி ருசியும் ருசிவழி

நீரும், நீர்வழி மணமும், மணம் வழி மண்ணும்

ஒன்றின் தன்மாத்திரம் (மூலப்பொருள்) ஒன்றென உறவுடனே

தோன்றின இருள்குணவழி அஹங்காரமிடமிருந்து

உத்தமன் உன்னிச்சையாலே குருவாயூரப்பா! 5.8

Transliteration in English

shabdaadvyOma tataH sasarjitha vibhO sparshaM tatO maarutaM
tasmaadruupamatO mahO(a)tha cha rasaM tOyaM cha gandhaM mahiim |
evaM maadhava puurvapuurvakalanaadaadyaadyadharmaanvitaM
bhuutagraamamimaM tvameva bhagavan praakaashayastaamasaat ||

Meaning in English

O All pervading Lord! From the Tanmaatra of (Shabda) the subtle element of sound, came the element (Aakaash) Space and from it touch (Sparsh). From touch (Sparsh) came the element Air (Vaayu) and from it form (Roopa). From form (Roopa) came the element Fire (Agni) and from it Taste (Rasa). From the Tanmaatra of Taste (Rasa) came the element Water (Jala) and from it smell (Gandha). From smell (Gandha) came the element Earth (Bhoomi). O Maadhava! By Thy will, thus from the Tamasa aspect of Ahankaara, were born the five Tanmaatras and the five Pancha Bhootas each element having the qualities of the preceding one.

Explanatory Notes

We must bear in mind that the focus of Dasakam 5 so far, has been on the evolution of the Cosmic Egg or the Virat Rupa of the Brahman and should not be mixed up with the evolution of human body which is essentially identical to the one happening in the Cosmos.  At the same time we shouldn’t forget that after all what is happening in the Cosmos do happen in our body too. 

விளக்க குறிப்பு

இதுவரை தசகம் 5-ல் கூறப்படுவது, அண்ட பொன் முட்டை (ஹிரன்ய கர்ப்ப) அல்லது பிரம்மனின் விராட ரூபத்தின் பரிணாம வளர்ச்சி. இதி ஒரு சமஷ்டி நிலை கண்ணோக்கம். நடைமுறை நிலையில், மனித உடலின் பரிணாம வளர்ச்சியுடன் (வ்நஷ்டி நிலை) ஒப்பிட்டு கலந்துவிடக் கூடாது. “அண்டத்தில் நடப்பது பிண்டத்திலும்” என்ற சொல்லிற்கிணங்க, இப்பரிணாமங்களை பிண்டத்திலும் காணலாம் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. 

Meaning of the Sanskrit Words

श्ब्दात्-व्योम - from sound, space

तत: ससर्जिथ - then,Thou created

विभो - O All pervading Lord !

स्पर्शं - touch

तत: मारुतं - then air

तस्मात्-रूपम्- from that (air) form

अत: मह: -then fire

अथ च रसं - and after that taste

तोयं च गन्धं महीम् - then water smell and earth (were born)

एवं माधव - in this manner O Maadhava!

पूर्व-पूर्व-कलनात्- because of association with the preceding (product)

आद्य-आद्य-धर्म-अन्वितं having the qualities of the earlier products

भूत-ग्रामम्-इममं - this group of subtle elements

त्वमेव भगवन् - Thou alone O Lord!

प्राकाशय: - did bring into existence

तामसात् - from the Tamasa Ahankaar

Narayaneeyam – Dasakam 5 – Sloka 1 – Dark Matter – முடிவிலியின் முதல்வன்

Link to the Audio – For chanting

https://www.dropbox.com/s/9r4y3xjrb1bcrb9/5.1.mp3?dl=0

Introduction

Let us recall what we learnt in the previous blogs on Cosmic Evolution.

1. At the outset it should be clear that our Rishis, Seers and Saints understood that creation doesn’t mean formation of something out of nothing. By the word creation, they only meant the manifestation of something which was potentially existent in dormant form or Unmanifest form or undifferentiated form (like the tree inside the seed).

2. In the beginning nothing exists except a singularity called Brahman. This is akin to what modern scientists say as “Before the big bang there was no space, time or matter. There was just singularity where the entire un-manifested universe existed”.

This is what is brought out by Bhattathri in this first Sloka.

Let us now study the Sloka

முகவுரை

“ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே”

கம்பராமாயணம், ஆரண்ய காண்டத்தில்

“முதலில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (Cosmic Evolution) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயிரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (Cosmic Dissolution) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய். நிலையில்லாத அப்பாவமும் நீ படைத்தது அல்லவா?”

என்று கம்பன் வர்ணிப்பதும் நமது முனிவர்களும், ரிஷிகளும் அறிந்துணர்ந்த அண்டங்களின் படைப்பிற்கு காரணமாகிய ஆதி அந்தமில்லா பரம்பொருளைப் பற்றியதே

இதனைத்தான் நாராயண பட்டத்ரி, ஐந்தாம் தசகத்தில் முதல் ஸ்லோகமாக வரைந்தார்.

அதனை இப்போது ஆய்வோம்.

Sanskrit Verse


व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये

मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।

नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति –

स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥

தமிழாக்கம்

பருஉடல் தொடங்கி
நுன்நிலை அண்டமனைத்திற்கும்
பெரும் பிரளயம் முன்னே
இருப்பென்று ஒன்றுமில்லை.

முக்குணமும் சமமாகி,
மாற்றமெல்லாம் முழுதுமடங்கி
முன்னவன் உன்னுள்ளே

உறைந்தனளே மாயச்சக்தி

இறப்பில்லை, வீடுபேறென்றில்லை,
இறவு பகல் ஏதுமில்லை
இருப்பென்பது உனையன்றி
வேறெதுவுமல்லை – அப்

பேரழிவுக் காலம் முன்னே
பேரின்ப நிலைதனிலே
தூய இருப்பெனவே
இருந்தனையே பரம்பொருளே 5.1

Meaning in English

This world consisting of the manifest and the unmanifest worlds (gross and the subtle) did not exist at all, before and during the total dissolution.The three Gunaas (Satwa, Rajas and Tamas) of Maya were in equilibrium, preventing any modification and so had become latent in Thee. At that time neither death nor liberation existed. Day and night also did not exist. Thou alone remained at that time as the Supreme Bliss Consciousness.

English Transliteration

vyaktāvyaktamidaṁ na kiñcidabhavatprākprākr̥taprakṣayē

māyāyāṁ guṇasāmyaruddhavikr̥tau tvayyāgatāyāṁ layam |

nō mr̥tyuśca tadāmr̥taṁ ca samabhūnnāhnō na rātrēḥ sthiti -

statraikastvamaśiṣyathāḥ kila parānandaprakāśātmanā || 5

Meaning of the Sanskrit Words

व्यक्त-अव्यक्तम्-इदं - this (universe) made up of the gross and the subtle (manifested and unmanifested)

न किञ्चित्-अभवत् - nothing existed

प्राक्-प्राकृत-प्रक्षये - before Praakrita Pralaya

मायायाम् - (when) Maayaa (Thy cosmic creative power)

गुण-साम्य-रुद्ध-विकृतौ - whose modifications were neutralised by the equipoise of the three Gunaas

त्वयि आगतायां लयम् - and had become latent in Thee,

नो मृत्यु: च - neither death

तदा-अमृतं च - and then nor liberation

समभू - (did) exist

न-अह्न: - neither day

न रात्रे: - or night

स्थिति: - was in existence

तत्र-एक: - त्वम् - then Thou as the Only One (without another)

अशिष्यथा: किल - did remain, verily

परानन्द-प्रकाश-आत्मना - as Supreme Bliss Consciousness

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 1 – மந்திரவாதியும் மந்திரக் காட்சியும்.

ஶ்ரீ குருவாயூரப்பன்
முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.

மந்திரவாதி

அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.

ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.

அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.

“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்

முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.

அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.

அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.

மந்திரக் காட்சி

பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது. 

அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.

எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.

நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.

அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.

ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.

முடிவுரை

இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம்.  அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.

எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.

இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்
தட்சிணாமூரத்தி ஸ்தோத்திரம் – 2
இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!