ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்துதி 25 – இதய முடிச்சுகள் அறுப்பு

முகவுரை

இந்த ஸ்துதி (25) மிகவும் நுண்ணியமான வேதாந்த சாரத்தைக் அடக்கியது. குறிப்பாக, ஹிரண்யகர்பன் (ब्रह्मा) உருவாக்கம், அவனுக்கு ஞானம் கிடைத்த விதம், அதே ஞானமே ஜீவனின் இதய முடிச்சுகளின் அவிழ்ப்பிற்கு ( ஹ்ருதய-க்ரந்தி விநாஷத்திற்கு) காரணம் என்பதை கூறி, மெய்யறிவு பெற வேண்டுகோள், குரு உபதேச அவசியம், ஞானமே முக்தி என்ற அத்வைத சித்தாந்தம் என்பதை உட்கருத்தாக வைத்த ஸ்துதி இது.

ஸ்துதி 


यो देवानां प्रथममशुभद्रावको भक्तिभाजां
पूर्वं विश्वाधिक शतधृतिं जायमानं महर्षिः ।
दृष्ट्यापश्यत्सकलजगतीसृष्टिसामर्थ्यदात्र्या
स त्वं ग्रन्थिप्रविलयकृते विद्यया योजयास्मान् ॥ २५॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

யோ தேவாநாம் ப்ரதமமஶுபத்ராவகோ பக்திபாஜாம்
பூர்வம் விஶ்வாதிக ஶதத்ருதிம் ஜாயமாநம் மஹர்ஷி: ।
த்ருஷ்ட்யாபஶ்யத்ஸகலஜகதீஸ்ருஷ்டிஸாமர்த்யதாத்ர்யா
ஸ த்வம் க்ரந்திப்ரவிலயக்ருதே வித்யயா யோஜயாஸ்மாந் ॥ 25॥

தமிழாக்கம்


அண்டம் படைத்திடும் ஆற்றலதனை அயனுக்கு
அருள்விழியால் அளித்திட்ட அண்டமுதலோனே 
பக்தர்களின் பாவங்களை பரிவுடனே தீர்ப்போனே 
இதயமதை இறுக்கிப்பிணை முடிச்சுகள் அவிழ்ந்திட
இணைத்திடுவாய் மெய்யறிவுடனே எம்மை நீயே !! 25

சொற்களின் பொருள்

விஶ்வாதிக - உலகைக் கடந்தவரே! ப்ரஞ்சத்திற்கு அப்பாற்பட்டவரே! 

பக்திபாஜாம் - பக்தர்களின்
அஶுப த்ராவகோ - பாபங்களை (குறைகளை) தீர்ப்பவரான,
மஹர்ஷி: மஹரிஷியான
யஹ - எவர்

தேவாநாம் - தேவர்களுக்கு
ப்ரதமம் - முதலில்
ஜாயமாநம் - தோன்றுகின்ற
ஶதத்ருதிம் - பிரம்மனை (பிரம்மனின் பெயர்)

பூர்வம் - படைக்கும் காலத்தில்
ஸகலஜகதீ ஸ்ருஷ்டி ஸாமர்த்த்ய தாத்ர்யா - அனைத்து உலகங்களையும் படைக்கும் திறன் தரும்
த்ருஷ்ட்யா - பார்வையுடன்
அபஶ்யத் - பார்த்தாரோ
ஸஹ த்வம் - அத்தகைய நீவிர்

க்ரந்தி ப்ரவிலயக்ருதே - (அறியாமை, ஆசை, செயல் முதலிய) முடிச்சுகள் அவிழும் பொருட்டு (மோக்‌ஷத்தின் பொருட்டு)
அஸ்மாந் - எங்களை
வித்யயா - ப்ரம்மவித்யையுடன்
யோஜயஹ - இணைத்திடுவாயாக

விளக்கம்

யாரை நோக்கி இந்த ஸ்லோகம் ? 

சிவபெருமானுக்கு, “ருத்ர:”  எனும் பெயர் உண்டு. “ருத்ர” என்பதற்கு “ருதம் த்ராவயதி இதி ருத்ர:” என்ற பொருள்; அதாவது துன்பத்தை நீக்குபவன் ருத்ரன். ஆகையினாலே தீக்‌ஷிதர் கூறும் “அஶுப த்ராவகஹ” என்ற சொல் “ருத்ரஹ” எனும் சிவன் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரே “விஶ்வாதிக”, உலகைக் கடந்தவர்; ப்ரஞ்சத்திற்கு அப்பாற்பட்டவர் ! 

யாருடைய துன்பத்தை நீக்குகிறான் ருத்ரன் ? 

“பக்திபாஜாம்” என்கிறார் அப்பையர். “பக்திபாஜாம்  அசுப த்ராவகோ யஹ ஸஹ த்வம்” என்பதற்கு விளக்கம்  பகவத்கீதை 18.45,46ல் காணலாம். 

“மனிதர்கள், தங்கள் உள்ளார்ந்த குணங்களால் பிறந்த,  தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், முழுமையை அடைய முடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு பரிபூரணமாக முடியும் என்பதை இப்போது என்னிடம் கேள் (18.45). ஒருவரின் இயற்கையான தொழிலைச் செய்வதன் மூலம், எல்லா உயிரினங்களும் யாரிடமிருந்து தோன்றியதோ, யாரால் முழுப் பிரபஞ்சமும் வியாபித்திருக்கிறதோ, அந்த படைப்பாளியை ஒருவர் வணங்குகிறார். அத்தகைய வேலையின் மூலம், ஒரு நபர் முழுமையை அடைகிறார்.(18.46).”

அவரவருக்கு வகுக்கப்பட்ட (உள்ளார்ந்த குணங்களால் பிறந்த இயல்பான) கடமைகளை முறையாக செவ்வனே செய்தலே பக்தி எனப்படும்.  இத்தகைய “பக்திபாஜாம்”, பக்தர்களின் பிறவிப்பிணி தீர்ப்பவன் (ஸம்ஸாரத்தில் உண்டாகும் ஸகலவித துக்கங்களையும் விலக்குகிறவர்) ஈசன், “அசுப த்ராவக:”.

யார் அந்த ஈசன் ? ஈசனின் திறன் எப்படிப்பட்டது ? 

அத்தகைய ஈசன் அனைத்தும் அறிந்தவன் (“ஸர்வஜ்ஞன்”). ஆதலால் தனது முதல்படைப்பாக உண்டாகும் ப்ரம்மதேவனை (ஹிரண்யகர்பன்) அருளோடு நோக்குகிறார். இதுவே சாக்ஷுஷ தீக்ஷையாகும். குரு திருஷ்டி மாத்திரத்தினால் தன்னிடமுள்ள ஞானத்தை சிஷ்யனிடம் தோற்றுவிப்பது சாக்ஷுஷதீக்ஷை எனப்படும். இதனால் ப்ரம்மதேவனுக்கு ஸகல உலகங்களையும் படைக்கும் திறமையுண்டாகிறது. 

அப்படிப்பட்ட ஈசனிடம் என்ன வேண்டுகிறார் தீக்‌ஷிதர்? 

“க்ரந்திப்ரவிலயக்ருதே வித்யயா யோஜயாஸ்மாந்”, முடிச்சை அவிழ்த்து பிரம்ம மேவனுக்குப் புகட்டிய அந்த மெய்யறிவினைப் புகட்டு என்பது வேண்டுதல். 

எத்தகைய முடிச்சு ? 

அறியாமை, ஆசை, செயல் என்ற மூன்றே இதய முடிச்சுகள் என்று முண்டக உபநிஷத் விளக்கவுரையில் (பாஷ்யம்) ஆதி சங்கரர் கூறுகிறார். நீக்கமற நிறைந்திருந்து அனைத்தையும் அறியும் தூய உணர்வெனும் ஆத்மாவே தான் என்பதை அறியாமல், தான் உறையும் உடல் மன வளாகத்தினால், ஒலி, ஊறு, மணம், ஒளி, சுவை எனும் ஐம்புலனின்பங்களின் பின் அவா கொண்டு அலைந்து வினைகள் புரிவதனைக் குறிப்பது இந்த இதய முடிச்சுகள். 

அறியாமை, ஆசை, செயல் இவை களைந்திடத் தேவையான, மெய்யறிவினை அறிவதற்கான பயிற்சியில் இணைந்திட அருள்புரிவாய் ஆலமுண்ட அண்ணலே என இறையிடம் வேண்டுகிறார் அப்பையர்.

முடிவுரை

“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோ வை வேதாம் ஶ்ச பஹிணோதி தஸ்மை |

தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || 6. 18 ||”

என்று ஷ்வேதாஷ்வதரோபநிஷத் கூறுகிறது.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் – “யார் அந்த பிரம்மனை (சிர்ஜன கார்யத்தில்) முதலில் (பூர்வம்) ஸ்ருஷ்டி செய்து அறிவை அளித்தாரோ”

யோ வை வேதாம் ஶ்ச பஹிணோதி தஸ்மை  – “யார் அந்த பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்து அவர் மூலமாக பிரபஞ்சத்தைப் படைத்தாரோ”

தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஶம் –  “அந்த தேவனை, என் (ஜீவனின்) அஜ்ஞானத்தை அகற்றி, புத்தியை ஒளிர்வித்து  “சாக்ஷாத் சச்சிதானந்த ரூபம்” (சுத்த சைதன்ய ரூபமாக, சத்தியம) என்  ஸ்வரூபம் என அறிய வைக்கும், அந்த இறைவனை.

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே – “முமுக்ஷுவான நான், அவரிடம் சரணாகதி செய்கிறேன்”. இங்கு சங்கரர் ‘முமுக்ஷு’ என்பதைக் “பந்த விமோட்ச ஆர்த்தி” (பிரபல மாயை பந்தத்திலிருந்து விடுபட விரும்புகிறவன்) என்று குறிப்பிடுகிறார். சரணாகதி — தன்னுடைய அஹங்காரத்தையும், கர்த்த்ருத்வ பாவத்தையும் விட்டுவிட்டு ஈஸ்வரனையே ஒரே புகலிடமாக ஏற்கும் நிலை.

அதாவது

1. ஈஸ்வரனே காரணம்: பிரம்மன், வேதம், ஜீவன் — அனைத்திற்கும் பரம காரியம் ஈஸ்வரன்.

2. ஆத்ம புத்தி ப்ரகாஶம் — சொரூப ஞானத்தின் வெளிச்சம். இது அனாதி. அவித்யா எனும் அறியாமையை நீக்கும். (avidya-வினை நிவர்த்தி செய்யும்).

3. முமுக்ஷு சரணாகதி — ஞானப்பிராப்திக்கே உரிய பாக்யமான உபாயம்.

4. ஞானமே முக்தி மார்க்கம் — கர்ம, உபாஸனா முதலியவை சகாய உபாயங்கள் மட்டுமே.

“அதிகாரி (முமுக்ஷு) பண்டிதனாக இருந்து ஞான மார்க்கத்தை பின்பற்றிக் கொண்டு, இறைவனிடம் சரணாகதி செய்து, ஸ்வசுரூப அனுபவத்தின் மூலம் பந்தம் நிவர்த்தி செய்து முக்தி அடைய வேண்டும்.”

பிரபஞ்சத்தின் ஆதிகாரணமாகிய பரபுருஷனே, வேதங்களை வழங்கும் ஞானகரனே, எனது அஞ்ஞான இருளை அகற்றி ஆன்ம புத்தியில் வெளிச்சம் தரும் பரமேஸ்வரனே, பிறவிப் பந்தத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற எனக்கு ஒரே சரணாக நீ இருக்கின்றாய். எனவே உன்னை சரணாகதி செய்கிறேன்.”

என்ற இந்த உபநிஷத்தின் விளக்கமாக அமைகிறது, அப்பையரின் இந்த ஸ்லோகம்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க ! 

Sriman Narayaneeyam – Dasakam 7 – Sloka 10 – ஶ்ரீமந் நாராயணீயம் – தசகம் 7 – ஸ்லோகம் 10 –

Audio Links

https://www.dropbox.com/scl/fi/jsctc297ltbyfmr2m19ed/7.10A.mp3?rlkey=b0encjua7ee7uz3u4ovckelek&st=bjxphbu4&dl=0

https://www.dropbox.com/scl/fi/cxpyig5gd404mdzqghz11/7.10B.mp3?rlkey=xb1fhroy2ra9qj7npksimazsh&st=i7fzu5f1&dl=0

 

Sanskrit Verse


आताम्रे चरणे विनम्रमथ तं हस्तेन हस्ते स्पृशन्
बोधस्ते भविता न सर्गविधिभिर्बन्धोऽपि सञ्जायते ।
इत्याभाष्य गिरं प्रतोष्य नितरां तच्चित्तगूढ: स्वयं
सृष्टौ तं समुदैरय: स भगवन्नुल्लासयोल्लाघताम् ॥१०॥

English Transliteration 

aataamre charaNe vinamramatha taM hastena haste spR^ishan

bOdhaste bhavitaa na sargavidhibhirbandhO(a)pi sa~njaayate |

ityaabhaaShya giraM pratOShya nitaraaM tachchittaguuDhaH svayaM

sR^iShTau taM samudairayaH sa bhagavannullaasayOllaaghataam ||

Meaning of the Words

आताम्रे चरणे - at (Thy) crimson feet

विनम्रम्-अथ तं - (who was) humble, then, to him (Brahmaa)

हस्तेन हस्ते स्पृशन् - with Thy hands his hand touching

बोध: -ते भविता - (said) you will have that knowledge

न सर्ग-विधिभि: - and not by the act of creation

बन्ध: -अपि-सञ्जायते - bondage also will result

इति-आभाष्य गिरं - uttering these words

प्रतोष्य नितरां - making him extremely happy

तत्-चित्त-गूढ: स्वयं - in his heart remaining concealed Thyself

सृष्टौ तं समुदैरय: - prompted him to create

स भगवन् - (Thou) such O Lord!

उल्लासय - hasten

उल्लाघताम् - (my) recovery

Explanation 

Brahmaa was with full humbleness prostrating at Thy crimson feet. Thou touched his hand with Thy hands and said to him that he would get the knowledge required for creation, and also that he will not be tainted by the act of creation.Giving him this assurance and pleasing him extremely, Thou ,remaining in his heart, prompted him in the act of creation. O Lord! of such benevolence, kindly hasten my recovery.

தமிழில் ஒலிபெயர்ப்பு

ஆதாம்ரே சரணே விநம்ரமத₂ தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருஶந்

போ₃த₄ஸ்தே ப₄விதா ந ஸர்க₃விதி₄பி₄ர்ப₃ந்தோ₄(அ)பி ஸஞ்ஜாயதே |

இத்யாபா₄ஷ்ய கி₃ரம் ப்ரதோஷ்ய நிதராம் தச்சித்தகூ₃ட₄: ஸ்வயம்

ஸ்ருஷ்டௌ தம் ஸமுதை₃ரய: ஸ ப₄க₃வந்நுல்லாஸயோல்லாக₄தாம் || 10||

தமிழாக்கம்

பொற்பாதம் பணிந்திட்ட பிரமனின் கரம் பிடித்து
பெற்றிடு படைத்திடும் அறிவாற்றலுடன் அப்படைப்பேதும்
பற்றாது உனையென பெருமகிழ் பிரமனுள் மறைந்து பணித்திட்டாயே படைத்திட !
பரமனே நலமருள்வாய் விரைவில் யான் குணமடைய !!

விளக்கம்

பிறகு, தங்கள் சிவந்த பாதங்களில் பணிந்த அந்த பிரம்மதேவனை, தாங்கள் கையால் தொட்டு, “ உமக்கு ஞானம் தோன்றப் போகிறது, எந்த பந்தமும் இல்லாமல் படைக்கும் காரியத்தைச் செய்வாயாக” என்று அவருடைய மனதில் இருந்து தூண்டினீர். அத்தகைய பகவானே! ஆரோக்யத்தைத் தர வேண்டும்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க 


ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்துதி 24 – பசுபதி கருணை

முகவுரை

ஆத்மார்ப்பண ஸ்துதி (24) மிக ஆழமான ஜீவ–ஈஸ்வர சம்பந்தம், பந்த–மோட்ச காரணம், மற்றும் சரணாகதி அவசியம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது.

ஸ்துதி 


एकोऽसि त्वं शिव जनिमतामीश्वरो बन्धमुक्त्योः
क्लेशाङ्गारावलिषु लुठतः का गतिस्त्वां विना मे ।
तस्मादस्मिन्निह पशुपते घोरजन्मप्रवाहे
खिन्नं दैन्याकरमतिभयं मां भजस्व प्रपन्नम् ॥ २४॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

ஏகோঽஸி த்வம் ஶிவ ஜநிமதாமீஶ்வரோ பந்தமுக்த்யோ:
க்லேஶாங்காராவலிஷு லுடத: கா கதிஸ்த்வாம் விநா மே ।
தஸ்மாதஸ்மிந்நிஹ பஶுபதே கோரஜந்மப்ரவாஹே
கிந்நம் தைந்யாகரமதிபயம் மாம் பஜஸ்வ ப்ரபந்நம் ॥ 24॥

தமிழாக்கம்

இப்பிறவி கிட்டியோருக்கு இருமை வகை அறிந்த ஈசனே நீவிர் ஒருவரே அன்றோ பசுபதி !
துன்பப் புடத்தில் துவண்டிடும் எனக்கு
புகலேதும் உண்டோ உனையன்றி சிவனே !
கொடுமைநிறை பிறப்பெருக்கில் சிக்காதிருக்க
பேரச்சமுடன் சரண்புகும் தீனன் எனைக்
காத்தருள்வாயே ! !

சொற்களின் பொருள்

பசுபதே - உயிரினங்களின் தலைவனே
ஸிவ - மங்கலமானவரே
ஜனிமதாம் - பிறப்பெடுத்தோர்க்கு
பந்த முக்த்யோ: - பந்தத்திற்கும் முக்திக்கும், பந்தத்தலிருந்து முக்திக்கு (இரு பொருள் )
ஈச்வரோ - தலைவராக
த்வம் - நீவிர்
ஏகோஸி - ஏக அஸி - ஒருவரே இருக்கிறீர்
க்லேச அங்கார அவலிஷு - துன்பங்களாகிய நெருப்பு வரிசைகளில்
லுடத: - புரண்டு கொண்டிருக்கின்ற
மே - எனக்கு
த்வாம் - உன்னை
விநா - தவிர
கா - வேறுயார்
கதி - அகதி
தஸ்மாத் - எனவே
இஹ - இவ்வுலகில்
தஸ்மிந்- இந்த
கோர ஜன்மப்ரவாஹே - கோரமான பிறவிப்பெருக்கில்
கின்னம் - துன்பமயமான
தைன்யாகரம் - எளிமைநிலை அடைந்த
அதிபயம் - மிகுந்த அச்சமுடைய
ப்ரபன்னம் - (உன்னை) சரணடைந்துள்ள
மாம் - என்னை
பஜஸ்வ - காத்தருள்

விளக்கம்

பசுக்கள் என்று சொல்லப்படும் ஜீவராசிகளை மாயாபந்தத்தால் கட்டிவைப்பவனும் அதனின்று அவிழ்த்து விடுபவனும் பசுபதி யாகிற நீயே. பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் ஒரே காரணம் ஈஸ்வரன் என்கிறார் அப்பையர். அனைத்து கார்யங்களுக்கும் ஒரே காரணம் பரம்பொருள் என்பதே இதன் உட்கருத்து.

“உழலும் காயமுறை சீவன், கனவிலும் நனவிலும் காரிய காரண தன்மை கொண்டு, உடையான் உடமை எனவும், ஆசான் சீடன் எனவும், அருமை தந்தை மகன் எனவும், பேதம் பல ஈண்டு பாடிடுமே பல உறவு கொண்டு. மோடம் போட்ட அப்பேதம் நீக்கி, காயமுறை பற்றிலா அச்சீவனே மாசிலா முழுநிறை இறையென உரை ஆதிஅந்தமிலா மோனநிலை ஆசானாம் அந்த அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி பொற்பாதம் பணிந்திடுவோம்”

என்கிறார் ஆதி சங்கராச்சார்யர் தனது தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் (8). 

ஆதலால் உன்னைத் தவிர வேறு யாரை நான் அடைக்கலம் புகவிரும்புவேன். இந்த வாழ்க்கைத் துன்பங்களில், நெருப்புத் தணலில் விழுந்து விட்டவன் போல வேதனையால் துடிக்கும் என்னை, மிகப் பரிதாபமான நிலைக்கு இருப்பிடமான என்னை, மனத்தில் மிகுந்த பீதி யடைந்த என்னை, அடுத்தடுத்து பிரவாஹம் போல எனக்கு ஏற்படும் இந்தப் பிறவித் தொடரிலிருந்து விடுவிக்கும் பொருட்டு கருணை கூர்ந்து உடனே ஓடிவந்து ரக்ஷிக்க வேண்டும்.  

இக்கூக்குரல் ஜீவனின் ஒரு கவிதை அல்ல; இது ஒரு அனுபவ சத்தியம். இதற்கு பிரமாணம் பகவத் கீதை (8.15) “து2:கா2லயமஶாஶ்வத1ம்” நிலையிலா இவ்வுலகம் துக்கத்தின் இருப்பிடம். 

எனவே , “உன்னைத் தவிர எனக்கு என்ன கதி?” என்று அப்பையர் வேண்டுவது அனன்ய சரணாகதி.

இங்கே “கோர  ஜன்மப்ரவாஹே”  கோரமான பிறவுப்பெருக்கில் என தீக்‌ஷிதர் கூறுவது, பிறவிப்பிணியாம் பிறப்பு-இறப்புச் சுழலாகும். 

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு

மீண்டும் அன்னையின் வயிற்றில் கிடப்பு

கடக்க இயலா கரையிலா கடலே

கடத்திடு எம்மை கருணைக் கடலே

என்று பஜ கோவிந்தம் எனும் தனது படைப்பில் ஆதி சங்கரர் விளக்குகிறார் இச்சுழலை. அத்தகைய சுழலில் சிக்கி, சோர்ந்து,  துயருற்று,  மிகுந்த பயம் கொண்ட என்னை காப்பாற்று / அருள்புரி என சரண்டைகிறார் அப்பைய தீக்‌ஷிதர்.

முடிவுரை 

“நான் துன்பத்தில் இருக்கிறேன்” என்ற “க்ளேஷ அனுபவம்”,  “இந்த சுழற்சியில் இருந்து வெளியே வர முடியுமா” என்ற பயம், இவை கலந்த,  “நான் உன்னிடம் வந்துவிட்டேன்” எனும் சரணாகதி இந்த ஸ்துதி.

இந்த ஸ்லோகம் ஒரு முழுமையான ஆன்மிக வரைபடம்:

(1) ஈஸ்வரன் – பந்த–மோட்ச ஆதாரம்

(2) ஜீவன் – துன்பத்தில் சிக்கியவன்

(3) சம்சாரம் – நெருப்பு + நதி (இரண்டு உவமை)

(4) தீர்வு – சரணாகதி

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க ! 

Sriman Narayaneeyam – Dasakam 7 – Sloka 9 – ஶ்ரீமந் நாராயணீயம் – தசகம் 7 – ஸ்லோகம் 9 

Audio Links

https://www.dropbox.com/scl/fi/fzj981hi10ykz6tmv004c/7.9A.mp3?rlkey=yxm8cxp2r4pb593bvu8k9jtgy&st=cd7ox9ce&dl=0

https://www.dropbox.com/scl/fi/ky65n8u3knboeru2f1q3z/7.9B.mp3?rlkey=bnppvazs622ivk2suzcgzmuk7&st=ugfsy9y8&dl=0

Sanskrit Verse


दृष्ट्वा सम्भृतसम्भ्रम: कमलभूस्त्वत्पादपाथोरुहे
हर्षावेशवशंवदो निपतित: प्रीत्या कृतार्थीभवन् ।
जानास्येव मनीषितं मम विभो ज्ञानं तदापादय
द्वैताद्वैतभवत्स्वरूपपरमित्याचष्ट तं त्वां भजे ॥९॥

English Transliteration 

dR^iShTvaa sambhR^itasambhramaH kamalabhuustvatpaadapaathOruhe

harShaaveshavashanvadO nipatitaH priityaa kR^itaarthiibhavan |

jaanaasyeva maniiShitaM mama vibhO j~naanaM tadaapaadaya

dvaitaadvaitabhavatsvaruupaparamityaachaShTa taM tvaaM bhaje

Meaning of the Words

दृष्ट्वा	 - having had (Thy) vision

सम्भृत-सम्भ्रम: कमलभू: - overwhelmed with astonishment,

कमलभू: - the lotus born ( Brahmaa)

त्वत्-पाद-पाथोरुह - at Thy lotus feet

हर्ष-आवेश-वशंवद: - overflowing with ecstasy of joy

निपतित: - fell and prostrated

प्रीत्या कृतार्थी-भवन् - with love and sense of fulfilment

जानासि-एव - Thou does surely know

मनीषितं मम - my desire

विभो - O Lord!

ज्ञानं तत्-आपादय - that knowledge give to me

द्वैत-अद्वैत्-भवत्-स्वरूप-परम् - (about) Thy unique dual and non-dual aspects

इति आचष्ट - thus prayed (Brahmaa)

तम् त्वां भजे - That Being Thou I pray to

Explanation 


O Lord of the Universe! Brahmaa was wonderstruck by Thy vision. He was overwhelmed with the ecstasy of joy and with love and a sense of fulfilment . He fell at Thy lotus feet and prostrated. He prayed to Thee that Thou surely knew his desire to create, and so he asked for the required knowledge. He also prayed to be given the knowledge of the unique dual and the non-dual aspect of Thee. I pray to That Thee. 7.9

தமிழில் ஒலிபெயர்ப்பு

த்₃ருஷ்ட்வா ஸம்ப்₄ருதஸம்ப்₄ரம: கமலபூ₄ஸ்த்வத்பாத₃பாதோ₂ருஹே

ஹர்ஷாவேஶவஶம்வதோ₃ நிபதித: ப்ரீத்யா க்ருதார்தீ₂ப₄வந் |

ஜாநாஸ்யேவ மநீஷிதம் மம விபோ₄ ஜ்ஞாநம் ததா₃பாத₃ய

த்₃வைதாத்₃வைதப₄வத்ஸ்வரூபபரமித்யாசஷ்ட தம் த்வாம்ப₄ஜே || 9||

தமிழாக்கம்

கண்டவுடன் கமலமுதயோன் பெருமகிழ்வுடனே உன் பொன்மலர்பாதம் பணிந்து பரவச நிறைவு பெற்றானே !
அவா அறிந்து அளித்திடு எனக்கு அவ்வறிவதனை
ஒருமையுடன் பன்மையான வடிவமுடன் என
நான்முகன் வேண்டினனே ஆண்டவா !
உன்னடி பணிந்தேன் அடியேனே !! 7.9

விளக்கம்

பிரம்மதேவன், தங்கள் வடிவழகைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, தங்கள் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கி தன் கடமைகளை நிறைவேற்றினார். என்னுடைய இஷ்டத்தை அறிந்து, த்வைதம், அத்வைதம் என்ற தங்கள் ஸ்வரூப ஞானத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். அத்தகைய தங்களை நான் பூஜிக்கிறேன்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க