
Essentially the first Sloka of the Dakṣiṇāmūrti Sthothram deals with “atma svaroopam” which Adi Sankaracharya reveals with two day to day examples of “darpana nagari” and “svapna nagari”. The Atma is revealed as the base “adishtaanam” of the Universe, as the independent existence – truth “sathya”, as the one unaffected by the events and whatever happens “asamgaha” and finally as non dual “advayam”, the Brahman Himself.
In this first verse, from the experiential standpoint we discover that the world exists in our mind. The world exists because we experience it. Usually we think the other way around. The conventional perspective is world exists therefore we experience it. This is called srishti drishti vada . (Srushti means creation. Drishti means seeing. Vada means doctrine or teaching). It means, you see the world because it has been created. In the ongoing “Global Festival of Oneness 2021” conducted by Advaita Academy, there was an interesting presentation on this. This is how this debate on the two perspective was summed up pictorially by the speaker.

But the presentation by Sankara in this first verse is opposite to the conventional view. The creation exists because you see it. The world in the mind exists because you are there to experience it. If you are not there to witness the world, the world in your mind would not exist. What you directly experience is only the contents of your mind. So the vision conveyed by the first verse is drishti srishti vada. It is opposite to the conventional perspective.
ஆதி சங்கரரின் தக்ஷிணா மூர்தி ஸ்தோத்திரத்தின் முதல் பண்ணின் கருத்துக்கள் சைவ சித்தாந்தத்தில் வெளிப்படுகிறது. திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்:
மனத்தில் எழுந்ததுஓர் மாயக் கண்ணாடி;
நினைப்பின் அதனின் நிழலையும் காணார்;
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்;
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே (திருமந்திரம், 1681)
தன்னை அறியக் கிளம்பியவர்கள் தன்னுடைய மூலை முடுக்குகளிலெல்லாம் தன்னைத் தேடினார்கள்; மனம் எதிர்ப்பட்டது; அங்கும் தேடினார்கள்; அது ஒரு மாயப் பிம்பத்தை எழுப்பிக் காட்டியது. அடிமுடி தேடிய படலத்தில், முடி தேடிப் போன பிரம்மன், முடியைக் காணாமல் அன்னப் பறவையைக் கண்டு திரும்பிவிட்டதைப்போல, தன்னையே தேடிப் போனவர்கள், தன்னைக் காணாமல் ஏதோ ஒரு மாயப் பிம்பத்தைக் கண்டு அதுவே தான் என்று எண்ணித் திரும்பி விட்டார்கள். விளங்காதவர்கள்; விளக்கிச் சொன்னாலும் விளங்கிக் கொள்ளத் தெரியாதவர்கள். தலைவாயில் அடைத்திருப்பதாக எண்ணி ஏமாந்து பின்னால் சென்று புறக்கடை வாசலைத் தட்டிக்கொண்டு நிற்கிறார்கள். தன்னை அல்ல, தன்னுடைய நிழலைக்கூட இவர்களால் கண்டுகொள்ள முடியாது.
Brahman is in essence the indwelling Controller for all activity seen in any being whatsoever. That is why Bhagwan Ramana Maharishi says that stop unwanted discussions/arguments about the real or unreal world and objects. Start looking inwards in his “Ulladhu Naarpadhu” – உள்ளது நாற்பது.
உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்
றுலகுசுக மன்றென் றுரைத்தெ — னுலகுவிட்டுத்
தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற
வந்நிலையெல் லார்க்குமொப் பாம்.
What is the use of disputing: ‘The world is real’, ‘[No, it is] an unreal appearance’; ‘The world is sentient’, ‘It is not’; ‘The world is happiness’, ‘It is not’? Leaving [all thought about] the world and investigating [or knowing] oneself, [thereby] putting an end to [all disputes about] one and two [non-duality and duality], that state in which ‘I’ [ego] has [thereby] perished is agreeable to all. So instead of looking outward, start looking inward.
இதனையே திருமூலர் திருமந்திரம், 2956 பதியில்;
மனமாயை மாயை;இம் மாயை மயக்க;
மனமாயை தான்மாய, மற்றொன்றும் இல்லை;
பினைமாய்வது இல்லை; பிதற்றவும் வேண்டா;
தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே.
என தெளிவாக உரைக்கிறார். உங்களைப் பேதைமைப்படுத்துவதும் மயக்குவதும் நீங்களே உருவாக்கிச் செல்லங் கொஞ்சிப் பேணி வளர்த்து வைத்திருக்கிற மனம்தான். மனம் உங்களை மயக்குவதை நிறுத்துங்கள்; மனத்தை நீங்கள் மயக்குங்கள். மனம் என்கிற மாயை ஒழிந்துவிட்டால், பிறகு உங்களை மயக்கத்தக்கது வேறு ஒன்றும் இல்லை. ஒழித்துக்கட்ட வேண்டியதும் வேறு ஒன்றும் இல்லை. மனத்தின் தூண்டுதலுக்கு ஆட்பட்டுத் தாறுமாறாக நடந்துகொள்ளவும் தேவையில்லை. தன்னையே தான் ஆராய்ந்து, தானே தானாக இருப்பதுதான் யோகம்.
தன்னையே தான் ஆராய்தல் எப்படி? மாணிக்கவாசகர் சொல்கிறார்:
நான்ஆர்?என் உள்ளம்ஆர்? ஞானங்கள்
ஆர்? என்னை யார்அறிவார்?
வானோர் பிரான்என்னை
ஆண்டுஇலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில்
உண்பலிதேர் அம்பலவன்
தேன்ஆர் கமலமே
சென்றுஊதாய் கோத்தும்பீ
(திருவாசகம், திருக்கோத்தும்பி, 2). நான் யார், என் உள்ளம் எது, ஞானங்கள் எவை என்று அறிய வேண்டும்; என்னை அறிகிறவர் யார் என்றும் பார்க்க வேண்டும். எல்லாமே வானோர் பிரானாகிய சிவன்தான் என்று தன்னை அறிவிக்கும் பொறுப்பையும் அறியும் பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைக்கிறார் பக்தியின் வழிவந்த மாணிக்கவாசகர். யோகத்தின் வழிவந்த திருமூலரோ அந்தப் பொறுப்பைத் தன் வசமே வைத்துக்கொள்கிறார்.
So, how do we elevate ourselves to that enquiry Who am I? How can I look inward? In answer to this question, Sages have identified four areas
- Study of Shastras and Shruti 2. The Kripa of the Guru 3. Yoga practice (Abhyasa) through meditation 4. God’s grace/Isvara Anugraha
When, by Shruti,, by the master’s favour, by practice of Yoga, and by the Grace of God, there arises a knowledge of one’s own Self, then, as a man regards the food he has eaten as one with himself, the Adept Yogin sees the universe as one with his Self, absorbed as the universe is in the Universal Ego which he has become.
References:
மேற்கோள் நூல்கள்
1. Dakṣiṇāmurty. Sthothram – Talks By Swami Paramarthananda; Transcribed by Sri P.S. Ramachandrn; Published by :Arsha Avinash
2. Dakshinamurti Stotra with Mānasollāsa of Sureśvarācārya translated by Alladi Mahadeva Sastri – from archives.org
3.சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – முனைவர்கோ.ந. முத்துக்குமாரசுவாமி – https://www.tamilhindu.com/
4. Prof. Mahadevan, IIM, Bangalore – https://www.sanskritfromhome.in/course/daksinamurtiSthothram /
5. https://Vedāntaḥstudents.com/class-notes/#1539832350612-778c6bda-cf96
6. தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் – பகவான் ரமண மகரிஷி