அந்த நாளும் வந்திடாதோ

மெய்யறிவு மாணவனின் ஏக்கம்

அறியாமைக் காட்டதனில் தனியாகத் திரிந்தலைந்த என்னை,

நெறியுடன் வாழ வல்லமைதந்திட்ட என் தாய் தந்தையரின்

பெருந்தவத்தால் புவிதனில் பொருள் புகழ் பெருமை பெற்றிடினும்,

சிறியோன் என் சிந்தனையில் சிறிதேனுமில்லை மறைஞானம்!!

திரையதனில் தோன்றும் வண்ணமாயையே வாழ்வென அறிந்து,

நரைமுடியும் விழுதருணம் விழைகிறேன் நான்மறை கூறும்

சச்சிதானந்த மெய்ப்பொருளை அறியும்  வேதாந்த வழிதனை!

நடவினையின் ஆட்சிதனை தடை செய்ய இயலுமோ தரணியிலே!!

தூயஇருப்பெனும் அறிவான அனந்தமே அறுதி உண்மையென

மருவேதுமின்றி எதிர்மறை மொழியில் உரைத்தன நான்மறைகள்!

இருப்பெனும் அறிவானந்தமே அறுதி உண்மையெனின், இந்த

இறைவன் எங்கிருந்து வந்தான் இடைச்சாதி நானென்று ?

பொறிபுலன்களை புறம் நோக்கிப் படைத்து, கண்ணிமைக்கும்

நொடிப் பொழுதில் காதம்பல கடந்திடும் மனம் கொடுத்து,

பொருள் நிறை அண்டம்தனை சார்ந்திராதே பற்றுடனே என

சாரதியாய் அவன் வந்து சாத்திரம் சொல்வது சரிதானோ ?

சிறியோன் என் சிந்தையுதி இச்சிதறல்களைச் சீரழித்து, என்

மனதினிலந்த  உண்மைதனை உணர்த்திட, அண்ட பிண்டத்தில்

மாயக்காட்சிகள் நடத்திடும் மாயோனான அந்த இறையே,

ஆத்மா எனும் நான் என்ற மறை மொழியை உள்ளாய்ந்தால்,

சிறுவித்து ஒன்றில் பெருந்தருவை மறைத்துப் பின் சிறப்பித்து,

சிலந்தி வலை வழியே அண்டப் பரிமாண தத்துவத்தை விவரித்து

அலங்கலில் தோன்றும் அரவு கொண்டு ஐம்பெரும் பூதம் விளக்கி

அலங்காரப் பொன் நகைகளில் அடிப்படைக் காரணம் சொல்லி,

கார் இருள் நிறை கருவறை கிழித்து தாய்க்கு வலிதந்து

பாரினில் எனை இறக்கிப் பின் காலன் வரும் நேரமதில்

பாசஉறவுகளுக்கு வலிதந்து காலிலா கட்டிலில் செலுத்தி

நாடகமிப்படி நடத்திடும் மாயோனே அந்த நான் அன்றோ!!

அலங்கலான அந்த நான் யாரென்றறியா அரவே இந்த நான்!

நிழலை நிஜமென இறுகப் பற்றிடும் மருவுநாயகன் இந்த நான்!

பற்றுதல் பலவிதம் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அமைச்சகம்! அப்

பற்று அமைச்சரவையின் பிரதமரே அறியாமையாம் இந்த நான்!!

நீரினைப் இறுகப்பற்றினால் குளத்திலே நீந்த இயலாது - எனினும்

பிறவிப் பெருங்கடல் நீந்திட இறுகப்பற்றுவது இவ்வுடலையன்றோ !

சிறுவித்து ஒன்றைப் பெருந்தருவாய் சிறப்பிக்கும் அந்த நான்

சிரித்திட்டேன் விந்தையுடன் இந்த நான்தனின் மடமை கண்டு!!

ஆதிஅந்தமிலா பரமனுரையாம் மறையோதும் வேதவிற்பன்னரும்

காயமே பொய்யதனால் காண்பாய் உனையெனும் ஞானியும்

கருமமே கண்ணென மெய்வருத்தி வாழ்ந்திடும் யோகியும் கூறிடும்

காலத்தால் அழியா வாழ்வியல் உண்மையன்றோ அந்த நான்!!

அந்த நாளும் வந்திடாதோ அந்த நானை இந்த நான் அறிந்திட!!

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களுக்கு விளக்கவுரைகள், புத்தக வடிவில் குறைவு. சமூக வலைத் தடங்களில் பல பெரியோர்கள் தங்களது விளக்கங்களை ஒளி அல்லது ஒலிப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

அடியேனின் ஏட்டறிவு, கீழ்காணும் நூல்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றிலிருந்து.

  1. பகவத் கீதை – தத்துவ விவேசினீ – கீதா பிரஸ்ஸின் விரிவுரை
  2. திருக்குறள்.
  3. திருமந்திரம்.
  4. தாயுமானவர் பாடல்கள்
  5. சுவாமி சின்மயானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரை நூல்,
  6. சுவாமி பரமார்த்தானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரைகளை தொகுத்து வெளியிடப்பட்ட எழுத்துப் பதிவுகள்,
  7. பகவான் ரமணரின் தமிழாக்கம்,
  8. குருநாதர் சுவாமி ஓம்காரானந்தரின் வேதாந்த சொற்பொழிவுகள்,
  9. பகவான் ரமணரின் உள்ளது நாற்பது

பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான் படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அப்படி எடுத்துக்கொண்ட குறிப்புகளின் தொகுப்பினை புத்தக வடிவத்தில் (இரண்டு பாகங்களாக) வெளியிட்டுள்ளேன்.

  1. முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்க முயற்சி.
  2. இரண்டாவது பாகம் விளக்கவுரைகளின் தொகுப்பு.

இந்தப் புத்தகம், உலகுக்கு என் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி நான்,
அத்வைதவாஞ்சையதால், அரியகொம்பில்தேனைஇச்சித்தபடிஆகும்

தாயுமானவர்

என்ற தாயுமானவரின் சொல்லே எனது நிலை.

ஞான யோகத்தில், அரிய முதல்நிலை மாணவனாம் ஜனகருக்கு உரையாடல் வழி உபதேசிக்கப்பட்டதை, அறிவிலியாகிய நான், புத்தக வடிவில் வெளியிடுவது என்பது, என் அகங்காரத்தை அல்ல, மடமையைக் குறிக்கிறது என்றே கூறலாம்.

இந்த புத்தகங்களை நோஷன் பிரஸ் (Notion Press) “அமேஸான் (Amazon) ”, “ப்ளிப்கார்ட் (Flipkart) முதலிய விற்பனை தளங்களிலிருந்து பெறலாம். அதற்கான இணைப்புகள் இதோ:

முதல் பாகம் – ஸ்லோகங்களின் தமிழாக்கம்

https://notionpress.com/read/ashtavakra-gita-part-1-slokas

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-1-slokas/p/itme30ee853bf8ac?pid=9798894989969&cmpid=product.share.pp&_refId=PP.ed8a7124-be45-41d7-8599-0642a234c18f.9798894989969&_appId=CL

https://www.amazon.in/dp/B0DB1GT65M

இரண்டாம் பாகம் – விளக்கவுரை

https://notionpress.com/read/ashtavakra-gita-part-2

https://www.amazon.in/dp/B0DBDH46XG

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-2/p/itme77a5d62c2674?pid=9798895192696&cmpid=product.share.pp&_refId=PP.57d316e7-5e99-40c7-a330-59e9a55e808c.9798895192696&_appId=CL

இந்த புத்தகம் நிச்சயமாக வேதாந்தத்தின் முன்நிலை மாணவர்களுக்கோ அல்லது கற்றறிந்த பெரியோருக்கோ அல்ல. அறியாமையைனும் இருண்ட ஆழ்வனத்தில், மருண்டு அலையும் என்போன்ற சிறியோருக்கு, மின்மினிப்புச்சியின் ஒளியென உதவும் முயற்சியே இந்த புத்தகம்.

இந்த புத்தகங்களின் விற்பனையில் வரும் ஈட்டு அனைத்தும் என்னுடையது அல்ல. அது இறை பணிக்கே என்பது எனது உறுதிமொழி.

சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டீரெனில், மழலை கூறும் குழவியின் தடுமாற்றம் என்று கருதி, அவைகளை சுட்டிக்காட்டிடுவீர். அறிந்துணர முயன்றிடுவேன்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பிறந்த நாள் மழலை

சுவரில் வரைந்த சித்திரம் (நன்றி-தீபா)

என் கடன் பணி செய்து கிடப்பதே (பகவத் கீதை 2.47)

முகவுரை

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஔவையின் கூற்றின்படி, ஏழுபத்தொன்று வருடங்களுக்குமுன் அரிதான பிறவியை எடுத்த இந்நாளில், அடியேன் இதுவரை கடந்து வந்த பாதையையும் அந்த பாதையின் அடிப்படையையும் அறிய  முயன்றேன்.

அந்த முயற்சியின் முடிவில் கிடைத்த அறிவின் தொகுப்பை எனது மழலையில் மொழிகிறேன் கீழ்வருமாறு:

1. சாதாரண நடுத்தர குடும்பத்திலிருப்பவன் நடந்து வரும் பாதையெனும் ஆறிலிருந்து அறுபது வரையிலான வாழ்வு,

இளமையில் கல்வி,
அறவழியில் பொருளீட்டுதல்,
மனைமாட்சி

என்ற மூன்று படலங்களத் தழுவியது. என் பாதையும்கூட அதுதான்.

2.“காயேன வாசா மனஸா” என்று உடல், வாக்கு, மனம் வழி ஆண்டவனைச் சார்ந்திருந்து, உலகியல் பலன்களை விரும்பாமல், கல்வி புகட்டி மனத்தூய்மையுடன் அறச்செயல்கள் புரிந்திட்ட அன்னை தந்தையின் அறிவுரைகளால், இளவயதிலிருந்தே எனக்கு கிட்டியது அறநெறிப்படி திட்டமிட்டு ஸமபுத்தி மனப்பான்மையுடன் வாழும் ஒழுக்கமிகு வாழ்க்கை. பெற்றோரின் வடிவில் இறையருள் கிட்ட, என்ன பெருந்தவம் செய்தேன் என்று இன்றும் அறியேன் அடியேன்.

3. இளமையில் கல்வி, பொருளீட்டுதல், மனைமாட்சி என்ற மூன்று படலங்களில், தர்மத்தை கடைப்பிடிக்கும்போது கொள்ள வேண்டிய மனோபாவனையை அடைந்திட, பெற்றோரின் அன்றாட எளிய வாழ்க்கையே எனக்கு இலவசமாகக் கிடைத்த பயிற்சிக்கூடம்.

4. இன்பம் “அவன்” கொடுத்தது, துன்பம் எனது முன்வினைப் பயனாலே; ஆகவே இன்பத்தில் களித்திடாமலும், துன்பத்தில் துவண்டிடாமலும் அவர்கள் வாழ்ந்த எளிமையான அனுதின வாழ்வே இன்றும் எனக்கு வழிகாட்டி.

இப்படி, அறிவின் துணை கொண்டு இருமைகளில் சமமான மனப்பான்மை என்பது தான் எனது அறுபது கடந்த ஆன்மீகம் தழுவிய வாழ்வின் அடிப்படை.

சரி, நீ என்ன பெரிய மனிதனா? என்ன சாதித்தாய் இவ்வுலகில்? உன் சுய சரிதையால் எங்களுக்கு என்ன? என்று நீங்கள் வினவுவது எனக்குத் தெளிவாக கேட்கிறது. நான் பெரியவனல்ல; நான் சாதனையாளன் அல்ல. நான் ஒரு சாமான்யனே! எனினும், இன்று நான் அறிந்திடும் பகவத் கீதையின் ஸ்லோகத்திற்கு இது முகவுரையாகும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததனால்தான் இந்த சுயசரிதை.

இப்போது கீதையின் ஸ்லோகத்தைக் காண்போம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 2.47 ||

தமிழில் எழுத்துப் பெயர்ப்பு

கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசனா |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி || 2.47 ||

தமிழாக்கம்


1. உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.

2. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை.

3. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே.

4. மேலும் உனக்கு கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது”

என்று நான்கு அறிவுரைகள் வழங்குகிறான் கண்ணன். அதாவது,

1. செயலின்மையில் நாட்டம் வேண்டாம்.
2. செயலின் பலனிலும் நாட்டம் வேண்டாம்.
3. செயலில் மட்டுமே உன் நாட்டம் இருக்கட்டும்.

4. செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு தகுதி இருக்கிறது.
5. செயலைத் (கடமையைத்)துறப்பதற்கு உனக்கு தகுதி வரவில்லை.
6. செயலைத் துறக்க வேண்டுமானால், செயலின் பலனை விரும்பாமல் சில காலம் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் செயலைத் துறக்க தகுதி ஏற்படும்.

என்று கண்ணன் பார்த்தனுக்கு விளக்குகிறான்.

கர்ம யோகம் புரியாமல், கர்ம சந்யாஸம் செய்ய முடியாது. அதைமீறி கர்ம சந்யாஸம் செய்தால் அதனால் துக்கம் விளையும்.

விளக்கவுரை

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கு ஏற்றவாறு மனிதனுக்கு கர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கர்மங்களை “கர்மணி” என்ற சொல் குறிக்கிறது. மறைகளில் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட பாவச்செயல்களை “கர்மணி” என்ற சொல் குறிக்காது. ஏனெனில், பாவ கர்மங்களைச் செய்ய அவசியமோ, பொறுப்போ மனிதனுக்கு கிடையாது. விருப்பு-வெறுப்புகளினால் உந்தப்பட்டு அவற்றில் ஈடுபடுகிறான். அது அவனுடைய பொறுப்பிலா செய்கை. அதனால் அத்தகைய செயல்கள் புரிபவனுக்கு, துன்பங்களை அனுபவிக்கக்கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அறம் வழி நடந்து புரியும் வினைகளே “கர்மணி”.

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு

உனக்கு செயல் புரிய மட்டுமே தகுதி உள்ளது என்ற இந்தக் கூற்றில்:

1. மனித உடலில்தான் ஜீவனுக்குப் புதிய கர்மங்கள் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவன் தன் பொறுப்பிற்கு ஏற்றவாறு இறைவனுடைய கட்டளையை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அந்த கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்ற ஒட்டுதல்/பற்று இருக்கக்கூடாது. அந்த கர்மங்களை ஆற்றுவதை இறைவனை அடைவதற்கு ஸாதனமாக கருதவேண்டும். அரிதான மானிடப்பிறவி கிட்டியிருப்பது பரம்பொருளை அறிந்துணரவே என்று வினைகள் புரிந்திட வேண்டும்.

2. மனிதனுக்கு கர்மங்களை ஆற்ற மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றைச் செய்யாமல் விடுவதற்கு அவனுக்கு சுதந்திரம் கிடையாது. தன்முனைப்பால், பிடிவாதமாக கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்றாலும்கூட அவனால் விட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது ஸ்வபாவம் (இயல்பு) வலுக்கட்டாயமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கச் செய்யும். இந்த நிலையில் அவனுடைய பொறுப்பை நிறைவேற்றாமல், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தினால், விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டுவிடுவதால்,மறைகள் விதித்த விதிகளை மீறியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே நீ ஆற்றவேண்டிய கர்மங்களை ஆற்றத்தான் வேண்டும், தவிர்க்கக்கூடாது.

3. பிறப்பு-இறப்பு (ஜனன-மரணம்) என்ற பிறவிப்பிணியிலிருந்து (ஸம்ஸார பந்தத்திலிருந்து) விடுதலை பெறுவதற்காகவும், பிறருக்கு நன்மை செய்வதற்காகவும், ஜீவனுக்கு மனம், புத்தி, புலன்களுடன் கூடிய இந்த மனித உடலை (ஸரீரத்தை) அளித்து, அதன்மூலம் செயல்கள் செய்ய விஷேஷ சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகையை நல்விதத்தில் பயன்படுத்தினால் கர்மபந்தத்திலிருந்து விடுதலை பெற்று பரம்பொருளை அறிந்துணர இயலும். தவறாகப் பயன்படுத்தினால் தண்டனையுடன், அந்தப் பொறுப்பும் பிடுங்கப்படும். அதாவது மறபடி மனிதப்பிறவி பெறுவதற்கான தகுதியை இழக்கிறான். இதனை உணர்ந்து தன் பொறுப்பை நல்முறையில் நிறைவேற்ற வேண்டும்.

என்ற மூன்று முக்கிய உட்கருத்துக்கள் அடங்கியுள்ளன.

கர்ம பயன்களில் ஒருகாலும் உனக்கு உரிமையில்லை

எந்த கர்மத்திற்கு என்ன பயன்? அந்தப் பயன் எப்பிறவியில் கிடைக்கும்? எந்த முறையில் கிடைக்கும்? என்று மனிதன் அறிய மாட்டான். 

தன் விருப்பப்படி தான் வாழும் காலத்தில் அவற்றைப் பெறவும் முடியாது; விரும்பி முயன்றாலும் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அவன் விரும்புவது ஒன்று; அவனுக்கு கிடைப்பது ஒன்று. அவன் விரும்புவதை அடையும் சந்தர்ப்பம் அவன் கையில் இல்லை. கர்மங்களின் பயனை விதிப்பது இறையருள் (அத்வைத வேதாந்தத்தில் முன்வினைப் பயன் எனும் ப்ராரப்தம் என்பதே இறையருள் என்ற விளக்கம் உள்ளது). விருப்பு, வெறுப்பு, ஆசை இவையெல்லாம் அறியாமையே. இவைகளால் இவ்வாழ்வில் விளைவதனைத்தும் (இன்பம், துன்பம்) நிரந்தரமல்ல. அவைகள் உண்மையான ஸுகத்தை அளிக்காது.

“ஆசை அறுமின், ஆசை அறுமின்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்”

என்று திருமூலர் கூறுவதும் இதுவே.

கர்ம பயன்கள் கோருவதற்கு காரணம் ஆகாதே

மனம், புத்தி, புலன்கள் மூலமாக நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும்

1. தான் செய்வதாக கருதும் எண்ணம் (“மமதை”)
2. பற்று (“ஆஸக்தி”)
3. அச்செயல்களில் உள்ள நுண்ணிய விருப்பம் (“வாஸனா”)
4. எதிர்பார்ப்புகள்

ஆகிய இவைகள்தான் கர்மங்களின் பயன்களுக்கு காரணம் ஆகும்.

கர்மத்திலும், கர்மபலனிலும் பற்றுள்ளவனுக்கு இவைகள்தான் கிட்டும்.

அறிவின் துணைகொண்டு, இருமைகளை சமமான மனதால் எதிர்கொண்டு “வினை புரிபவன் நானல்ல, வினைப் பயனும் எனதல்ல, அனைத்தும் அவன் செயல்” என்ற மனப்பான்மை உடையவனை, புரியும் கர்மங்களும், கர்ம பயன்களும் ஒட்டாது. அவன் புதிதாக பாபச் செயல்களேதும் புரியவே மாட்டான்.

முன்னால் செய்யப்பட்ட பாவங்களும், இப்பொழுது செய்கின்ற பற்றற்ற கர்மங்களின் ப்ரபாவத்தினால் சாம்பலாகி விடுகின்றன. இக்காரணத்தினால் அவன் பாவச்செயல்களின் பயன்களுக்கு காரணம் ஆகமாட்டான். இவ்விதம் கர்மங்களை ஆற்றுபவனுடைய எல்லாக் கர்மங்களும் மறைந்துவிடுகின்றன. அவன் மாறுதலற்ற உயர்ந்த பதவியை அடைவான் என்கிறான் கண்ணன்.

கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது

மறைகளில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைப் புரிவதற்கு மாறாக, தடை செய்யப்பட்ட கார்யங்களைச் செய்வது, செயலாற்றும் உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். அது போல, வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றுக்கு ஏற்றவாறு எவனுக்கு எந்த கர்மம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பதுகூட உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. 

விதிக்கப்பட்ட கர்மங்களை மோஹத்தினால் தியாகம் செய்வது “தாமஸ த்யாகம்”; உடல் நோகும் என்று பயந்து தியாகம் செய்வது “ராஜஸ த்யாகம்”. விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் மனிதன் கர்ம யோகத்தில் ஸித்தி பெற முடியாது. ஆகவே, எக்காரணம் கொண்டும் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விடுவதற்கு நீ விரும்பக்கூடாது என்பது கண்ணன் கூறும் அறிவுரை.

முடிவில் ஒரு கேள்வி


ஆறிலிருந்து அறுபதுவரை இந்த ஸ்லோகத்தை அறிந்திராமல் வாழ்ந்திடினும், இதன் சாரத்தின்படி அமைந்ததே என் வாழ்வு என்பது இப்போது என் கருத்து. அதனால்தான் என்னவோ, இறையருளால், அன்றும் இன்றும் படுத்தவுடன் உறங்குகிறேன் கவலைகளேதுமின்றி.


1. அன்றாட வாழ்வில் இந்த ஸ்லோகம் உதவுமா?

2. முகவுரையாக கூறப்பட்ட சிறுவனின் சுய சரிதைக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ………..
பதிலும், முடிவும் உங்களுடையது.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Narayaneeyam -Dasakam 5 – Sloka 10; நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 10

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/9f2lk4g9g026zo40k0u35/5.10.mp3?rlkey=p9mnsmnm8uouulu3twmvpnmon&dl=0

Introduction 

In Dasakam 5,starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Narayana Bhattathri has so far outlined the evolution of 

1. Purusha,
2. Prakriti,
3. Mahat,
4. Ahamkara
5. Fourteen Presiding deities
6. Four functions of Inner conscience,
7. Five Sense and five action organs
8. Five Tanmaatras and the five Pancha Bhootas.
9. Creation of Hiranyagarbha, the Golden Egg.

Concluding this Dasakam, Bhattathri brings out the final evolution of the Virat Purush into the fourteen worlds.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

இதுவரை

1. புருஷன்,
2. பிரகிருதி,
3. மஹத்,
4. அஹம்காரா
5. பதினான்கு அதிபதிகள்
6 உள் மனசாட்சியின் நான்கு செயல்பாடுகள்,
7. ஐந்து உணர்வுகள் மற்றும் ஐந்து செயல் உறுப்புகள்
8. ஐந்து தன்மாத்திரங்கள் மற்றும் ஐந்து பஞ்ச பூதங்கள்.
9. ஹிரண்யகர்பம் எனும் பொன் முட்டை


என்பவைகளின் பரிமாணத்தை விளக்கினார் நாராயண பட்டத்ரி.இப்போது கடைசியாக, விராட ரூபத்தை விளக்குகிறார இந்த ஸ்லோகத்தில்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:

निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।

साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको

निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

தமிழில் ஒலிபெயர்ப்பு 

அண்ட₃ம் தத்க₂லு பூர்வஸ்ருஷ்டஸலிலே(அ)திஷ்ட₂த் ஸஹஸ்ரம் ஸமா:

நிர்பி₄ந்த₃ந்நக்ருதா₂ஶ்சதுர்த₃ஶஜக₃த்₃ரூபம் விராடா₃ஹ்வயம் |

ஸாஹஸ்ரை: கரபாத₃மூர்த₄நிவஹைர்நிஶ்ஶேஷஜீவாத்மகோ

நிர்பா₄தோ(அ)ஸி மருத்புராதி₄ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் || 10||


தமிழாக்கம்

படைத்த அப் பொன் அண்டம், நீ முன்

படைத்த பேராழிதனில் காலமாயிரம்

உறைந்த பின் உடைத்திட்டு இரேழு

உலகம் படைத்திட்டு விராடமெனும்

அளவிலா பேர் உருவமென பொறிபுலன்

ஆயிரமாயிரமென அனைத்திலும் பறவி

காட்சி அளித்தனையே குருவாயூரப்பா

காத்திடுவாய் எந்தன் துயர் நீக்கிடுவாய் 5.10

Transliteration in English 

aNDaM tatkhalu puurvasR^iShTasalile(a)tiShThat sahasraM samaaH
nirbhindannakR^ithaashchaturdashajagadruupaM viraaDaahvayam |
saahasraiH karapaadamuurdhanivahairnishsheShajiivaatmakO
nirbhaatO(a)si marutpuraadhipa sa maaM traayasva sarvaamayaat

Meaning in English 

This golden egg was submerged in the primeval creation of causal water,

And was divided by you in to fourteen parts and you called it Virat,

And you became all the beings yourself and existed as Virat Purusha,

Along with thousands of hands, legs as well as heads,

And Oh Lord of Guruvayur, you who are the Virat Purusha,

May be kindly pleased to save me from all the diseases. 5.10

Meaning of the Sanskrit Words 

अण्डं तत्-खलु - that Brahamanda, indeed

पुर्व-सृष्ट-सलिले- in the already created Cosmic Waters

अतिष्ठत् - (which) remained

सहस्त्रं समा: - for a thousand years

निर्भिन्दन - (Thou) breaking it open

अकृथा: - Thou did make (it)

चतुर्दश-जगत्-रूपं - in the form of the fourteen worlds

विराट-अह्वयम् - known as 'Virat Swarupa'

साहस्त्रै: करपादमूर्धनिवहै: - with thousands of hands, feet and heads

निश्शेष जीवात्मक: - as all beings (Samashti - total life form of all beings)

निर्भात: असि - Thou did shine (manifest Thyself)

मरुत्पुराधिप - O Lord of Guruvayur!

स मां त्रायस्व - That Thou (of such nature) protect me

सर्व-आमयात् - from all ailment

இறை அருளால் தசகம் 5 முடிவுற்றது.

This ends Dasakam 5.

Narayaneeyam -Dasakam 5 – Sloka 8 நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 8

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/urhzb8o8qvnsmdypu34u1/5.8.mp3?rlkey=waojivlof6jfv82ec0jkn6ikp&dl=0

Introduction 

In Dasakam 5, Narayana Bhattathri provides an evolution of the Cosmic Form of the Brahman (in line with Srimad Bhagavatham) to help us focus on the “Virat Rupa” of Brahman. 

Starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Bhattathri in the previous Slokas outlined the evolution of Purusha, Prakriti, Mahat, Ahamkara and associated deities for the five organs of perception, five organs of action and the four aspects of inner conscience.He then outlined the evolution of the inner conscience, the sense and action organs.

Now in this Sloka, the evolution of additional elements is highlighted.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

பிரபஞ்சத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் (சங்கல்பம்) அல்லது பரமாத்மாவிற்குள் உள்ள சித்தத்துடன் தொடங்கி, முந்தைய ஸ்லோகங்களில் பட்டத்திரி, புருஷன், பிரகிருதி, மஹத், அஹம்காரம் மற்றும் உள்மனசாட்சியின் நான்கு அம்சங்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புகள், ஐந்து செயல் உறுப்புகளுக்குக்குத் தொடர்புடைய தெய்வங்களின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார். பின்னர், நான்கு அம்சங்கள் நிறைந்ந மனம், உணர்வு மற்றும் செயல் உறுப்புகளின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார்.

இப்போது இந்த ஸ்லோகத்தில், ஸமஷ்டி நிலையில் உருவாகும் அடுத்த தத்துவங்களின் வெளிப்பாட்டினை விளக்குகிறார்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं

तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।

एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं

भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

தமிழில் ஒலிபெயர்ப்பு

ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்
தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |
ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்
பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||



தமிழாக்கம்

ஒலிவழி விண்ணும் விண்வழி தொடு உணர்வும்

தொடுதல்வழி காற்றும் காற்றின் வழி வடிவமும்

வடிவம்வழி அழலும் அழல்வழி ருசியும் ருசிவழி

நீரும், நீர்வழி மணமும், மணம் வழி மண்ணும்

ஒன்றின் தன்மாத்திரம் (மூலப்பொருள்) ஒன்றென உறவுடனே

தோன்றின இருள்குணவழி அஹங்காரமிடமிருந்து

உத்தமன் உன்னிச்சையாலே குருவாயூரப்பா! 5.8

Transliteration in English

shabdaadvyOma tataH sasarjitha vibhO sparshaM tatO maarutaM
tasmaadruupamatO mahO(a)tha cha rasaM tOyaM cha gandhaM mahiim |
evaM maadhava puurvapuurvakalanaadaadyaadyadharmaanvitaM
bhuutagraamamimaM tvameva bhagavan praakaashayastaamasaat ||

Meaning in English

O All pervading Lord! From the Tanmaatra of (Shabda) the subtle element of sound, came the element (Aakaash) Space and from it touch (Sparsh). From touch (Sparsh) came the element Air (Vaayu) and from it form (Roopa). From form (Roopa) came the element Fire (Agni) and from it Taste (Rasa). From the Tanmaatra of Taste (Rasa) came the element Water (Jala) and from it smell (Gandha). From smell (Gandha) came the element Earth (Bhoomi). O Maadhava! By Thy will, thus from the Tamasa aspect of Ahankaara, were born the five Tanmaatras and the five Pancha Bhootas each element having the qualities of the preceding one.

Explanatory Notes

We must bear in mind that the focus of Dasakam 5 so far, has been on the evolution of the Cosmic Egg or the Virat Rupa of the Brahman and should not be mixed up with the evolution of human body which is essentially identical to the one happening in the Cosmos.  At the same time we shouldn’t forget that after all what is happening in the Cosmos do happen in our body too. 

விளக்க குறிப்பு

இதுவரை தசகம் 5-ல் கூறப்படுவது, அண்ட பொன் முட்டை (ஹிரன்ய கர்ப்ப) அல்லது பிரம்மனின் விராட ரூபத்தின் பரிணாம வளர்ச்சி. இதி ஒரு சமஷ்டி நிலை கண்ணோக்கம். நடைமுறை நிலையில், மனித உடலின் பரிணாம வளர்ச்சியுடன் (வ்நஷ்டி நிலை) ஒப்பிட்டு கலந்துவிடக் கூடாது. “அண்டத்தில் நடப்பது பிண்டத்திலும்” என்ற சொல்லிற்கிணங்க, இப்பரிணாமங்களை பிண்டத்திலும் காணலாம் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. 

Meaning of the Sanskrit Words

श्ब्दात्-व्योम - from sound, space

तत: ससर्जिथ - then,Thou created

विभो - O All pervading Lord !

स्पर्शं - touch

तत: मारुतं - then air

तस्मात्-रूपम्- from that (air) form

अत: मह: -then fire

अथ च रसं - and after that taste

तोयं च गन्धं महीम् - then water smell and earth (were born)

एवं माधव - in this manner O Maadhava!

पूर्व-पूर्व-कलनात्- because of association with the preceding (product)

आद्य-आद्य-धर्म-अन्वितं having the qualities of the earlier products

भूत-ग्रामम्-इममं - this group of subtle elements

त्वमेव भगवन् - Thou alone O Lord!

प्राकाशय: - did bring into existence

तामसात् - from the Tamasa Ahankaar

Narayaneeyam -Dasakam 5 – Sloka 7 – நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 7 – அந்தக்கரண வெளிப்பாடு

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/dgn7gcok9a714caj9ft1u/5.7.mp3?rlkey=fowxprdoq2ykvqo5hhfxlsubc&dl=0

Introduction

In spiritual journey, ordinary mortals like me find it extremely difficult to focus the mind and meditate/contemplate on the only omnipresent, omniscient, pure, eternal, ultimate Reality known as “Brahman” (to be precise “Nirguna, Nishkala Brahman” with out name, form and transcending time and space). 

Therefore, in this Dasakam 5, Narayana Bhattathri provides an evolution of the Cosmic Form of the Brahman (in line with Srimad Bhagavatham) to help us focus on the “Virat Rupa” of Brahman.

Starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Bhattathri in the previous Slokas outlined the evolution of Purusha, Prakriti, Mahat, Ahamkara and associated deities for the five organs of perception, five organs of action and the four aspects of inner conscience.

Now in this Sloka, Bhattathri outlines the evolution of the inner conscience, the sense and action organs.

முகவுரை

ஆன்மீகப் பயணத்தில், என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள், மனதை ஒருமுகப்படுத்தி, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த, தூய்மையான, நித்திய, இறுதியான "பிரம்மன்" ("நிர்குண, நிஷ்கல பிரம்மன்") என்று அறியப்படும் உண்மையின் மீது தியானம்/தியானம் செய்வது மிகவும் கடினம். 

எனவே, இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார்.

பிரபஞ்சத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் (சங்கல்பம்) அல்லது பரமாத்மாவிற்குள் உள்ள சித்தத்துடன் தொடங்கி, முந்தைய ஸ்லோகங்களில் பட்டத்திரி, புருஷன், பிரகிருதி, மஹத், அஹம்காரம் மற்றும் உள்மனசாட்சியின் நான்கு அம்சங்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புகள், ஐந்து செயல் உறுப்புகளுக்குக்குத் தொடர்புடைய தெய்வங்களின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார்.

இப்போது இந்த ஸ்லோகத்தில், பட்டத்திரி நான்கு அம்சங்கள் நிறைந்ந மனம், உணர்வு மற்றும் செயல் உறுப்புகளின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वितं

तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।

जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-

स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥

தமிழில் ஒலிபெயர்ப்பு

பூ₄மந் மாநஸபு₃த்₃த்₄யஹம் க்ருதிமிலச்சித்தாக்₂யவ்ருத்த்யந்விதம்
தச்சாந்த:கரணம் விபோ₄ தவ ப₃லாத் ஸத்த்வாம்ஶ ஏவாஸ்ருஜத் |
ஜாதஸ்தைஜஸதோ த₃ஶேந்த்₃ரியக₃ணஸ்தத்தாமஸாம்ஶாத்புந-
ஸ்தந்மாத்ரம் நப₄ஸோ மருத்புரபதே ஶப்₃தோ₃(அ)ஜநி த்வத்₃ப₃லாத் ||



தமிழாக்கம்

நற்குண அஹங்கார வழி அந்தகரணமெனும்
மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் நான்கும்,

அரசகுண அஹங்கார வழி பொறி புலன்கள் பத்தும்,

இருள்குண அஹங்கார வழி விண்வெளியின் நுண்
சாரமாம் சப்தமெனும் ஓங்கார நாதம்

உன் இச்சையினால் உருவெடுத்தனவே
உலகாளும் குருவாயூரப்பனே! நீக்கமற நிறையோனே! 5.7

Transliteration in English

bhuuman maanasa buddhyahankR^iti milachchittaakhya vR^ittyanvitaM
tachchaantaH karaNaM vibhO tava balaat sattvaamsha evaasR^ijat |

jaatastaijasatO dashendriyagaNastattaamasaamshaatpunastanmaatraM
nabhasO marutpurapate shabdO(a)jani tvadbalaat ||

Meaning in English

O Infinite One! By Thy will, from the Saatwic aspect of Ahankaara, the inner equipment of Antahkarana was born, consisting of, Manas, Buddhi, Ahankaara and Chitta. From the Raajasic aspect of the Ahankaara the ten Indriyaas were born (5 Karmendriyaas and 5 Jnanendriyaas). O Lord! by Thy will, from the Taamasic aspect of the Ahankaara was born, the sound (Sabda) which is the subtle essence (Tanmaatra) of space (Aakaash).

Explanatory Notes

Adi Sankara’s Viveka Chudamani explains the objects listed out by Bhattathri in this Sloka.  

1. The ears, skin, eyes, nose and tongue are organs of knowledge, for they help us to cognise objects; the vocal organs, hands, legs, etc., are organs of action, owing to their tendency to work.

2. The inner organ (Antahkaraṇa) is called Manas, Buddhi, ego or Chitta, according to their respective functions: Manas, from its considering the pros and cons of a thing; Buddhi, from its property of determining the truth of objects; the ahankara (ego), from its identification with this body as one’s own self; and Chitta, from its function of seeking for pleasurable objects.

It must be noted that none of the objects such as Prakriti, Mahat, Ahamkara etc listed in the previous Slokas as part of the cosmic evolution are capable of bringing out the Anthakarana and the Indriyas listed in this Sloka.

Therefore Bhattathri has emphasised again that it is purely due to the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, which he calls it as His strength (“bala”) here.

விளக்க குறிப்பு

உலகெங்கும் நிறைந்தவனே! உன்னுடைய வலிமையால் ஸத்வ குணமானது, மனது, புத்தி, அகங்காரம் இவைகளுடன் கூடிய சித்தம் என்ற ஸாத்வீக அகங்காரத்தை உண்டாக்கியது. ரஜோ குணமானது, பத்து இந்திரியங்களை உண்டாக்கியது. தமோ குணமானது ஆகாயத்தின் ஸூக்ஷ்ம சப்தத்தை உண்டாக்கியது.

ஆதி சங்கரரின் விவேக சூடாமணி (92-94),

1. காதுகள், தோல், கண்கள், மூக்கு மற்றும் நாக்கு ஆகியவை அறிவின் உறுப்புகள்(ஞானேந்திரியங்கள்), ஏனெனில் அவை வெளிப்புற பொருட்களின் அறிவைப் பெற உதவுகின்றன. பேச்சு உறுப்பு, கைகள், கால்கள், ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவை வேலை செய்யும் இயற்கையின் காரணமாக செயல்படும் உறுப்புகளாகும் என்றும்

2. ஸாத்வீக அகங்காரம் என்பது உடலுக்குள் இருக்கும் ஒரு சாதனம்; அதனைத்தான் அந்தக்கரணம் என்பர். மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற நான்கு வகைகளில் செயல்படுவது. புத்தி என்பது தான் ஒவ்வொரு விஷயத்தின் நிலைப்பாட்டை நிர்ணயிக்கிறது. அகம்பாவம் என்பது உடலை முன்னிலைப்படுத்தி மனிதன் இயங்குவது. அதுவே தான் எல்லாம், என்று பொய்யாய் நிஜமாக காட்டுவது. சித்தம் என்பது எண்ணக்கோர்வை, எதிலெல்லாம் அவன் ஈர்ப்பு செல்கிறது என்று காட்டுவது என்றும் கூறுகிறது.

அண்ட பரிணாமத்தின் ஒரு பகுதியாக முந்தைய ஸ்லோகங்களில் பட்டியலிடப்பட்ட பிரகிருதி, மஹத், அஹம்காரம் போன்ற பொருட்கள் எதுவும் இந்த ஸ்லோகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அந்தகரணம் மற்றும் இந்திரியங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பிரபஞ்சத்தை வெளிக்கொணர பரமாத்மாவிற்குள்ளேயே உள்ள தெய்வீக எண்ணம் (சங்கல்பம்) அல்லது சித்தத்தினால் தான் என்று மீண்டும் வலியுறுத்துகிறார் பட்டத்ரி. இந்த ஸ்லோகத்தில் அதை பரம்பொருளின் பலம் என்று குறிப்பிடுகிறார்.

Meaning of the Sanskrit Words


भूमन् - Infinite One! முடிவிலோனே

मानस-बुद्धि-अहंकृति-मिलत्-the mind, intellect and ego including - மனம், புத்தி, அஹங்காரம்

चित्ताख्य-वृत्ति-अन्वितं - memory, these modes constituting - சித்தம் முதிலிய அடங்கிய

तत्-च-अन्त: - करणं - the ( inner instrument ) Antahkarana - அந்தகரணம் , உள்ளுறுப்பு

विभो All pervading Lord! நீக்கமற நிறையோன்

तव बलात् - by Thy will (power) உனது இச்சையால், பலத்தால்

सत्त्वांश: एव- the Satwic aspect (of Ahankaara) itself, சாத்விகம் எனும் நற்குணம்

असृजत् - created (the Antahkarana) வெளிப்படுத்தியது

जात: - तैजसत: - from the Taijasa aspect was born, ராஜ குணத்திலிருந்து வெளிப்பட்டது

दश-इन्द्रिय-गण: - the group of ten indriyaas பத்து இந்திரியங்கள்

तत्-तामस-अंशात्- from the Tamas aspect, இருள் குணத்திலிருந்து

पुन: again, மறுபடியும்

तन्मात्रं नभस: - the subtle essence (Tanmaatra) of space, விண்வெளியின் சூட்சும நிலையில்

मरुत्पुरपत - O Lord of Guruvaayur! குரவாயூரப்பனே

शब्द्: -अजनि - sound was born, சப்தம் பிறந்தது,

त्वत्-बलात् - by Thy will (power), உன் பலத்தால், உன் இச்சையால்

Narayaneeyam – Dasakam 5 – Sloka 5

Audio for Chanting – Link

https://www.dropbox.com/scl/fi/8tdghizm0s3tdgk6nauwh/5.5.mp3?rlkey=lpncpfnjg528in02r0xaam92r&dl=0

Introduction

In Sloka 4, Bhattathri brought out the creation of “Mahat” tattva, the Cosmic Intelligence or the total consciousness. 

The mahat-tattva is called the total (vyashti) consciousness. When Mahat, the all-knowing creative principle, omnipresent, omniscient, omnipotent consciousness becomes conscious of itself – I-am, omnipresent – it becomes cosmic Ahamkara.

So first is Purusha, second is Prakriti, third is Mahat, fourth is Ahamkara.

Ahamkara here is to be understood as Cosmic Self-awareness – the whole universe becoming conscious: ‘I am.' It is not merely omnipresence as such; it is consciousness of one's being omnipresent. This is the omnipresent total (vyashti) level.

Bhattathri also explains the next “creation” at the individual level (samashti).
ஸ்லோகம் 4 இல், பட்டத்திரி "மஹத்" தத்வா, உலக உணர்வு தத்துவத்தை விளக்கினார். மஹத், அனைத்தையும் அறிந்த படைப்புக் கொள்கை, எங்கும் நிறைந்த, சர்வவல்லமையுள்ள உணர்வு தன்னை உணர்ந்து கொள்ளும் போது - நான் எங்கும் நிறைந்தவன் என்ற உணர்வு; இது தன்முனைப்பு இல்லாதது.
இதனை தன்முனைப்பில்லா பிரபஞ்ச அஹம்காரம் எனலாம்.

எனவே முதலில் புருஷன், இரண்டாவது பிரகிருதி, மூன்றாவது மஹத், நான்காவது அஹம்காரம். இங்கு அஹம்காரம் என்பது எங்கும் நிறைந்த மொத்த (வ்யஷ்டி) நுண் நிலை.

பட்டத்திரி அடுத்ததாக விளக்குகிறார், பருநிலையில், தனிப்பட்ட அளவில், அதாவது உடல் அளவில் (சமஷ்டி) உள்ள “நான்” எனும் தன்னுணர்வின் வெளிப்பாட்டினை.

The Sloka

तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं

जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।

चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ

सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥

Meaning in English

O All pervading Lord! Even though this Mahat Tatwa is made up of three Gunaas, it is predominated by Satwa. Hence it recognizes the collective Jivas as macro "I". (As cosmic whole and not as individual entities). But the same Mahat Tatwa, when predominated by Tamas and Rajas, creates by Thy will the feeling of individual "I" called Aham Tatwa.

Meaning in Tamil

முக்குணமதின் மகத்தத்துவ நுண்ணறிவு, சத்வ நற்

குணம் மேம்பட்டு வேற்றுமைமுனைப்பிலா சமஷ்டி அஹமெனும்

பொது உணர்வு படைத்திடினும், உன்னிச்சையால்

இருளெனும் தமச குண முனைப்புடன் உந்தி,

வியஷ்டி “நான்” எனும் தன்னுணர்வாம் அஹங்காரம்தனை

சீவனில் வெளிப்படுத்திடும் குருவாயூரப்பனே ! 5.5

Transliteration in English

tatraasau triguNaatmakO(a)pi cha mahaan sattvapradhaanaH svayaM
jiive(a)smin khalu nirvikalpamahamityudbOdhaniShpaadakaH |

chakresmin savikalpabOdhakamahantattvaM mahaan khalvasau
sampuShTaM triguNaistamO(a)tibahulaM viShNO bhavatpreraNaat ||

Meaning of the Sanskrit Words

तत्र-	there (among the effects of Maayaa)

असौ त्रिगुणात्मक: अपि च - that (Mahat) though comprising of all the three Gunaas

महान् Mahat

सत्त्वप्रधान: स्वयं - being itself predominantly Saatwic

जीवे-अस्मिन् खलु - in the collective Jiva, indeed

निर्विकल्पम्-अहम्-इति- as the total 'I' sense, without the sense of plurality causes the cognition

उद्बोध-निष्पाद्क: - created in the Jiva

चक्रे - अस्मिन् - that which causes the awareness of

सविकल्प-बोधक - separate individuality

महत्-तत्वं - Ahankaara (Ego)

महान् खलु-असौ - this same Mahat indeed

सम्पुष्टं त्रिगुणै: - though having all the three Gunaas in full measure

तम: - अतिबहुलं - being dominated by Tamas

विष्णो O - All pervading Lord

भवत् प्रेरणात् - by Thy promptin

Note:

Nirvikalpa is a term that refers to a state of consciousness without any fluctuations or modifications of the mind. It’s a state of pure awareness, devoid of any thoughts, concepts, or distinctions. This satvic state is often associated with deep meditation or spiritual experiences where the individual experiences a sense of oneness and unity.

Describing that satvic state without using thoughts, words, or the mind is a challenge because language and thought are our primary tools for communication. However, that state might be best understood through direct experience rather than description. It’s often described as a sense of pure being, a feeling of oneness or unity, an experience beyond the limitations of language or thought – more of a felt sense or intuitive understanding.

இந்த ஸ்லோகத்தில் நிர்விகல்பா, விகல்பா என்ற எதிர்மறை சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. 

நிர்விகல்பா என்பது மனதின் எந்த ஏற்ற இறக்கங்களோ அல்லது மாற்றங்களோ இல்லாத ஒரு உணர்வு நிலையைக் குறிக்கும் சொல். இது எந்த எண்ணங்கள், கருத்துக்கள் அல்லது வேறுபாடுகள் இல்லாத தூய்மையான விழிப்புணர்வு நிலை. இந்த சாத்விக நிலை பெரும்பாலும் ஆழ்ந்த தியானம் அல்லது ஆன்மீக அனுபவங்களுடன் தொடர்புடையது, அங்கு தனிநபர் ஒருமை உணர்வை அனுபவிக்கிறார்.

எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது மனதைப் பயன்படுத்தாமல் அந்த சாத்வீக நிலையை விவரிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் மொழியும் சிந்தனையும் தொடர்புக்கான நமது முதன்மைக் கருவிகள். இருப்பினும், அந்த நிலை விளக்கத்தை விட நேரடி அனுபவத்தின் மூலம் நன்றாக புரிந்து கொள்ளப்படலாம். இது பெரும்பாலும் தூய்மையான உணர்வு, ஒற்றுமையின் உணர்வு; மொழி அல்லது சிந்தனையின் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட அனுபவம் - வேற்றுமைமுனைப்புகள் இந்த நிலையில் இல்லை.

Narayaneeyam – Dasakam 5 – Sloka 4 – The Cosmic Intelligence – பேர் நுண் அறிவு

Link to the audio for chanting

https://www.dropbox.com/scl/fi/om7fvx82ru1lj56830kbv/5.4.mp3?rlkey=bideu9k39o849seo4qov347ye&dl=0

Preface

In the first Sloka, Narayana Bhattathri brought out that before the Maha Pralaya (The great deluge/Big Bang), only Brahman exists.

In the next Sloka 2 Bhattathri brought out that everything else was in unmanifested, undifferentiated state inside Brahman.

Then in Sloka 3, Narayana Bhattathri outlined that by the sheer will of the Brahman (referred as Guruvayurappan in this case), Maayaa (His creative power) got activated and from it emerged the power of time, the impressions of karma and the resulting tendencies. These supported Maayaa by disturbing the balance and the three Gunaas manifested.

Now in Sloka 4, Bhattathri brings out the creation of “Mahat” tattva, the Cosmic Intelligence or the total consciousness. The mahat-tattva is called the total (vyashti) consciousness because a portion of it is represented in everyone as the intellect (samashti). Mahat may be said to be Hiranyagarbha, the all-knowing creative principle, omnipresent, omniscient, omnipotent consciousness.

We can say that Brahman is in its unmanifested and undifferentiated state(The causal level); Prakriti is in manifested and undifferentiated state (causal level) ; Mahat-tattva is
in its manifested and differentiated state (subtle level) , ready for creation.

முகவுரை

முதல் ஸ்லோகத்தில், நாராயண பட்டத்ரி, மகா பிரளயத்திற்கு (பெரும் பிரளயம்/பெருவெடிப்பு) முன், பிரம்மன் மட்டுமே இருப்பதாகக் கூறினார்.

அடுத்து, இரண்டாவது ஸ்லோகத்தில் பட்டத்ரி, மற்ற அனைத்தும் பிரம்மனுக்குள் வெளிப்படாத, வேறுபடுத்தப்படாத நிலையில் இருப்பதை அறிவித்தார்.

பின்னர் ஸ்லோகம் மூன்றில், நாராயண பட்டத்ரி, பிரம்மனின் (குருவாயூரப்பன்)முழு விருப்பத்தால், மாயா (அவரது படைப்பு சக்தி) செயல்படுத்தப்பட்டு, அதிலிருந்து காலத்தின் சக்தி, கர்மாவின் தாக்கங்கள் மற்றும் அதன் விளைவாக வெளிப்பட்டது என்று கோடிட்டுக் காட்டினார். இதனால் சமநிலை சீர்குலைந்து மூன்று குணங்கள் வெளிப்பட்டன என்றும் அறிந்தோம்.

இப்போது ஸ்லோகம் நான்கில், பட்டத்திரி "மஹத்" தத்துவத்தின் உருவாக்கம்; அதாவது பேர் நுண் அறிவின் (Cosmic Intelligence) வெளிப்பாட்டை விளக்குகிறார். மஹத்-தத்வா என்பது அண்டங்களின் மொத்த (வ்யஷ்டி) உணர்வு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் ஒரு பகுதி புத்தியாக (சமஷ்டி) நம் அனைவரிடமும் உள்ளது. மஹத்தை ஹிரண்யகர்பா என்று கூறலாம், அனைத்தையும் அறிந்த படைப்புக் கொள்கை, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த, சர்வ வல்லமையுள்ள உணர்வு.

ஆக, பிரம்மம் எனும் பரம்பொருள் அதன் வெளிப்படுத்தப்படாத மற்றும் வேறுபடுத்தப்படாத நிலையில் (காரண நிலை) இருப்பதாக நாம் கூறலாம். அதுபோல பிரக்ருதி என்பது காரண நிலையில் வெளிப்படும் மற்றும் வேறுபடுத்தப்படாத நிலையில் உள்ளது எனவும், மஹத்-தத்வா என்பது நுட்பமான நிலையில்
வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வேறுபட்ட நிலையில் உருவாகத் தயாராக உள்ளது எனக் கூறலாம், நமது புரிதலுக்காக.

Sanskrit Sloka

मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्

भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।

कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं

माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥

தமிழாக்கம்

உன்சார்ந்த மாயை உடனிருந்தும், உடன்கலவா சாட்சியென
உள்ளிருந்தாய் நீ என அருமறைகள் உரைத்தனவே அய்யனே!
உள் நுழைந்து மாயப் பிரதிபிம்பமென உறைந்தாய் சீவனென
உன் உந்துதல் காரணமாய் மாயை விளை காலம், காலவிளை வினை, வினை விளை முக்குணமுடனே மகத் எனும் பேர் நுண்
அறிவுத் தத்துவம் வெளிப்பட்டதே குருவாயூரப்பனே! 5.4

விளக்கம்

அத்வைத வேதாந்தத்தின்படி, நாரணன் எந்நேரமும் மாயை அருகில் இருந்தும், மாயையுடன் கலவா சாட்சி என இருக்கிறான். மாயையின் வேறுபாடென பிரதிபிம்ப ரூபமான சீவனும் நாரணனே. 

மாயையால் விளைந்த காலம், காலத்தால் விளைந்த கரும்ம், கருமத்தால் விளைந்த குணம் (ஸ்வபாவம்) இவை தூண்டி மாயை மகத் தத்துவமெனும் புத்தியைப் படைக்கிறது. தத்தவம் என்றால் வடிவற்றது எஎன்று பொருள்.

English Transliteration

maayaasannihitO(a)praviShTavapuShaa saakshiiti giitO bhavaan
bhedaistaaM pratibimbatO vivishivaan jiivO(a)pi naivaaparaH |

kaalaadipratibOdhitaa(a)tha bhavataa sanchOditaa cha svayaM
maayaa saa khalu buddhitattvamasR^ijadyO(a)sau mahaanuchyate ||

Meaning in English

O Guruvayurappa, You are characterized as the Witness in the Vedas, remaining by Maya and not entering into it. You appear as Pratibimba (reflected image) in the products of Maya; one such reflection is Jiva, which has no independent existence without You. Directed by You, Maya through its medium of Kālam, (Karmam, and svabhāvam) came Buddhi Tattva, which is known as Mahat.

Meaning of the Sanskrit Words

माया-सन्निहित: - having Maayaa as adjunct only

अप्रविष्ट-वपुषा - but without getting influenced by it (untainted by it)

साक्षी-इति गीत: भवान् - Thou are mere witness, it is proclaimed (in the Vedas)

भेदै: -तां - in diverse appearances in that Maayaa

प्रतिबिंबत:- as reflections

विविशिवान् जीव: -अपि - Thou entered as individual soul also

न-एव-अपर:- (which) is not at all different from ( Thee)

काल-आदि-प्रतिबोधिता - being aroused by Time etc.

अथ भवता संचोदिता च - then also well prompted by Thee

स्वयं माया सा खलु - that Maayaa itself indeed

बुद्धि-तत्त्वम्-असृजत् - projected the principle of Intelligence

य: -असौ - which (buddhi tatva)

महान्-उच्यते - is called Maha